வியாழன், 17 நவம்பர், 2011

காந்தள் பூக்கும் தீவிலே - புதிய பாடல் (2011)


இசை:கே.ஜெயந்தன்
வரிகள்:கவிஞர் அஸ்மின்
பாடியோர்: கே.ஜெயந்தன் & கே.ஜெயப்பிரதா

   பல்லவி
  • ஆண்:
காந்தள் பூக்கும் தீவிலே..- உன்
காந்தப் பார்வை தீண்டுமா..?
பூங்காற்று எந்தன் பாடலை
உன் காதில் சேர்க்குமா....?
  • பெண்:
இந்த வானம் பூமி நீயடா
இன்று நானும் கூட நீயடா
நாம் காதல் செய்து வாழவே
இந்த ஜென்மம் போதுமா...?
  • ஆண்:
கனவிலும் உன்னை தேடுகின்றேன்
கண்களை விட்டு தூரப் போனாய்...
நினைவிலே வந்து காதல் சொல்லி
பூக்கள் வீசடி
ஒரு வார்த்தை பேசடி
(காந்தள்  பூக்கும் தீவிலே...)
  • சரணம்-01
  • பெண்:
ஒரு தடவை வந்து போனாய்
பல தடவை நொந்து போனேன்
உன் இதயம் மறந்தால் நான்
உயிருடனே உதிர்ந்து போவேன்..!

உன் சிரிப்பில் இதயம் தொலைத்தேன்
உன் தெருவில் தேடி அலைந்தேன்
உன் முகத்தை காணாமல்
உயிருடனே நாளும் புதைந்தேன்....!

  • ஆண்:

மேசையில் பலகதை
படிக்காமல் கிடக்கின்றதே...!
ஆசையில் என்விழி
உனை தேடி தவிக்கின்றதே...!

நான் உலகமே போற்றும்
கலைஞனடி!
உன் காதலால் இன்று
ரசிகனடி....
நீ உதட்டினால் என்னை
கொன்றிட வந்தால்
ஆயிரம் முறை நான் சாகரெடி...!

(காந்தள்  பூக்கும் தீவிலே)

  • ஆண்:
என்தேசம் நீயடி
உயிர் சுவாசம் நீயடி
என்வாழ்வும் நீயடி
எந்தன் ஆறுயிரே......!!
 
  • சரணம்-02
  • பெண்:
பேருந்தில் நெருங்கி இருந்தாய்
பேசாமல் நொருங்கி நகர்ந்தேன்...
உன்னோடு பேசாமல்
தனிமையில் பேசி சிரித்தேன்...

உன்பெயரை சொல்லி ரசித்தேன்..!
உனக்காக சமையல் பயின்றேன்
உன்னோடு வாழத்தான்
பூமியிலே பெண்ணாய் பிறந்தேன்..!

  • ஆண்:
விழியிலே உன் முகம்
விடிந்தாலும் இருக்கின்றதே...
வலியிலே என்மனம் 
துடித்தாலும் சிரிக்கின்றதே...

நான் உனக்கென பிறந்த
கவிஞனடி...!
நீ இதழ்களை கொண்டு
என்னைப்படி..!
உன் கண்களின் அழகை
ஒருமுறை பார்த்தால்
கவிதைகள் தற்கொலை செய்யுமடி..!!

(காந்தள்  பூக்கும் தீவிலே)
  • ஆண்: 
உயிர்பூவும் நீயடி..
என்தீவும் நீயடி..
இங்கு யாவும் நீயடி..
எந்தன் தேவதையே..

(காந்தள் பூக்கும் தீவிலே)


சனி, 5 நவம்பர், 2011

நெஞ்சுக்குள் இனிக்கும் 
நேசத்துக்குரியவர்களுக்கு...
 இனிய பெருநாள் வாழ்த்துக்கள்