அண்மையில் திரைப்படம் ஒன்றிற்காக பாடல் எழுத
பணிக்கப் பட்டிருந்திருந்தேன்.இயக்குனர் படத்தில் பாடல் இடம்பெற வேண்டிய
சூழலை விளக்கி டியுனைத்தந்து பாடல் எழுத கேட்டிருந்தார்.
கதையையும் டியுனை கேட்டவுடனே வரிகள் திமிரிக்கொண்டு வர ஆரம்பித்தன.நல்ல
கதை அதற்கேற்ப இசையமைப்பாளர் மிகவும் அருமையாக அந்த மெட்டினை
செதுக்கியிருந்தார். முதலில் பல பல்லவிகளை எழுதிக்கொடுத்தேன்.பல
கலந்துரையாடல்களின் பின்னர் எழுதிய பல்லவிகளில் ஒன்று தேர்வானது.
அதன் பின்னர் முழுப்பாடலையும் எழுதி நிறைவு செய்தேன்.இயக்குனருக்கும் பாடல்
மிகவும் பிடித்திருந்தது. வெகுவாக வரிகளை சிலாகித்து பேசினார். நானும்
மகிழ்ந்தேன் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை......
திடிரென மறுநாள்
அழைப்பை ஏற்படுத்திய இயக்குனர் ''பாடலின் டியுனை நாங்கள் மாற்றி
விட்டோம்.நீங்கள் முன்பு எழுதிய பாடல் இடம்பெறாது இப்பொது அனுப்பும்
டியுனுக்கு எழுதுங்கள்'' என்றார்.
''சரி'' என்று ஏற்றுக்கொண்டு
இன்று (8.11.12) பாடலை புதிய டியுனுக்கு எழுதி கொடுத்து விட்டேன் .பாடல்
சிறப்பாக வந்துள்ளது.இயக்குனரும் மிகவும் மகிழ்ந்து போனார்....
அந்த பெயர் குறிப்பிட விரும்பாத திரைப்படத்தின் கதைச்சூழலுக்கும்
மெட்டுக்கும் ஏற்ப நான் முதலில் எழுதிய பாடல் இது. இந்த பாடல் படத்தில்
இடம்பெறவில்லை என்பது வருத்தம்தான். பாடல் பற்றி கருத்துக்களை நண்பர்களிடமே
விட்டுவிடுகின்றேன்.
தொகையறா
யாஹூ மேகுறா – கரு நாக மாகுறா...
பல்லவி
பொண்மேல ஆச வைய தடா- அவ பொல்லாத எமனின் கையாளடா முள்மேல கால வச்சாளும்டா-நீ முகநூலில் காதல் செய்யாதடா...
மண்ணாப் போச்சி என் வாழ்க்க-நீ பொண்ணுகள கதைய கேக்காத...!
அனு பல்லவி
கண்ணால தாண்டா கல் எறிஞ்சா கண்ணாடி நெஞ்ச ஒடச்சா... கண் இமையால் நாளும் கயிறு திரிச்சா கனவிலே வந்து கழுத்த நெரிச்சா....
வெள்ள மனசுக்குள்ள மெல்ல மொளச்சவளே கொள்ள அடிச்சுப்புட்டு கொல்ல துடிச்சவளே..
நெல்ல எறிஞ்சுபுட்டு கல்ல கடிச்சவளே உள்ள சிரிச்சுக்கிட்டே உசுர குடிச்சவளே...
சரணம் -01
இரு பாட்டில் பியர் குடிப்பேன்..... நடு ரோட்டில் நான் படுப்பேன்....
காதலும் நுழைய யாவும் வெறுத்தேன் கணணி உலகில் காத்துக் கெடந்தேன்.. கவிதை நூல்கள் தேடிப் படித்தேன்... கடித்த நாயை தூக்கி அணைத்தேன்.
விட்டில் விழி வெட்டில் புதுமெட்டில் இளம் மொட்டில் சட்டில் ஒரு பொட்டில் தினம் நெட்டில் கலந்து தொலைந்தேன்...
தேசிய
கவிஞர்கள் சம்மேளனம் நடத்திய 23 வது விருது வழங்கும் வைபவம் 20-10-12
சனிக்கிழமை பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது இந்நிகழ்வின் போது 7
மாவட்டங்களை சேர்ந்த கவிஞர்கள் விருது பெற்றதுடன் மேலும் பல மூத்த, இளம்
கவிஞர்கள் "காவிய ஸ்ரீ " ,"காவ்ய சக்தி " போன்ற கௌரவ நாமங்களை
பெற்றுக்கொண்டனர் .
இவ் விழா கவிஞர் சேனக தலைமையில் இடம்பெற்றதுடன் கவிஞர்
மார்டின் ஜயரத்ன பிரதம அதிதியாகவும் மேல்மாகாண சபை அமைச்சர் சந்திர பானு
அதிகாரம் ,ஸ்ரீ லங்கா மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன்,கொழும்பு
பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கமெல் வெலேபோட ,முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து
கொண்டனர்
விருது,கௌரவப்பட்டம் பெற்ற 7 மாவட்டங்களை சேர்ந்த கவிஞர்கள்
1.திருகோணமலை - மூதூர் முஹைதீன்
- அருள் மொழி ராஜா
2.கண்டி- மசீதா புன்னியாமீன்
3.யாழ்ப்பாணம் -எம் .பொன்னம்பலம்
4.அம்பாறை - பொத்துவில் அஸ்மின்
5.மன்னார் - கலைவாதி கலீல்
6.அனுராதபுரம் - அன்பு ஜவஹர் ஷா
7.கம்பஹா - கவிஞர் ரவூப் ஹசீர்
"காவிய ஸ்ரீ " ,"காவ்ய சக்தி " போன்ற கௌரவ நாமங்களை பெற்றுக்கொண்ட மூத்த, இளம் கவிஞர்கள்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ''நான்'' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் என்னால் எழுதப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி சர்வதேச மட்டத்தில் நடத்திய பாடலியற்றல் போட்டியில் 20,000 போட்டியாளர்களுள் முதலாமிடம் பெற்ற நான் ''நான்'' திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்றுக்கொண்டேன்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.இலங்கையில் இருந்து நானும் என்னோடு சுயாதீன தொலைக்காட்சியின் பணிப்பாளர் புரவலர் ஹாஸீம் உமரும் கலந்து கொண்டோம்.நான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம்திகதி உலகமெங்கும் வெளியாகிறது..பாடலை பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.