இலங்கையின் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர்.
கலை-இலக்கியத்தில் தன்னை உருவாக்கிய தான் வளர்ந்த 'வதிரி'மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது பெயரோடு 'வதிரி'என்ற பெயரையும் இணைத்து படைப்புக்களை படைத்து வருகின்றார்.
1970ம் ஆண்டு முதல் எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள், வானொலிகளில் களம் கண்டுள்ளன.
பாடசாலை காலத்திலிருந்தே இவருக்குள் இருந்த வந்த இடையறதா வாசிப்பும் பல சிரேஷ்ட்ட எழுத்தாளர்களோடு இருந்த தொடர்பும் இவரை சிறந்ததொரு படைப்பாளியாக பரிணமிக்க வைத்துள்ளது.
சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு- இலங்கை |
கவிதை,கட்டுரை,விமர்சனம்,ஆய்வு,நேர்காணல், நாடகம்,மெல்லிசைப்பாடல் போன்றவற்றில் தனது ஆற்றலை வெளிப்படுத்திவரும் இவர் கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் கவிதைகளினால் ஆகர்ஷிக்கப்பட்டு அவரை தன் மானசீக குருவாக கொண்டு பல அர்த்தபுஷ்டியுள்ள மரபுக்கவிதைகளை படைத்திருந்தாலும் பின்னர் ஏற்பட்ட புதுக்கவிதை வளர்ச்சியினால் புதுக்கவிதை படைப்பதிலும் ஈடுபட்டு மரபு,புதுமை இரண்டிலும் தனது ஆற்றலை வெளிபடுத்தி வருகின்றார்.
இவரின் மெல்லிசைப்பாடல்கள் பல இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி வருகின்றன.
மரபுக் கவிதையிலே இவருக்கு இருந்த ஈடுபாடும்,அறிவும் சந்தம் நிறைந்த பல மெல்லிசை பாடல்களை எழுதுவதற்கு கைகொடுத்துள்ளது.
பத்திரிகைகளிலும்,இணையத்தளங்களிலும் இவர் எழுதியுள்ள இலங்கையின்
மெல்லிசைத் துறை பற்றிய ஆய்வுக்கட்டுரை இவருக்கு இருந்த மெல்லிசைத்துறை பற்றிய தேடலையும் இவரின் அகன்ற பார்வையையும் எடுத்துக்காட்டியுள்ளது.
தேசிய நாடக சபை உறுப்பினரான கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்
பல நாடகங்களில் நடித்துள்ளதோடு பல நாடகங்களை எழுதியும் இருக்கின்றார்.
இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய'வாலிபர் வட்டம்','பாவளம்' போன்ற காத்திரமான இலக்கிய நிகழ்ச்சிகளில் புடம்போடப்பட்ட இவர் பல கவியரங்குகளில் கலந்து கொண்டும் தலைமை வகித்தும் கவிதை பாடி ரசிகர்களின் மனதில் என்றும் அழியாத சுவடுகளில் பதித்திருக்கின்றார்.
இவர் எழுத்துறைக்குள் நுழைந்து நான்கு தசாப்தங்கள் கடந்திருந்தாலும் இவரது கவிதை நூல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை அந்தக் குறை சிங்கள் மொமியில் பல நூல்களை வெளியிட்டு விருதுகள் பலவற்றை வென்றெடுத்த பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமான 'கொடகே' யினால் மிக விரைவில் வெளியிடப்பட இருக்கும்
'மீண்டு வந்த நாட்கள்' என்ற கவிதை நூல் மூலம் நிறைவு செய்யப்பட இருக்கின்றது.
தனது படைப்புக்கள் மூலம் இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும்
கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்களின் படைப்புலக பணி மேலும் சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
8 கருத்துகள்:
படைப்புலக பணி மேலும் சுவடுகளை பதிக்க வாழ்த்துகள்.
கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வலைப்புவில் அறிமுகப்படத்திய கவிஞர் அஸ்மின் அவர்களுக்கும் நன்றி
உண்மையில் ஒரு சிறந்த படைப்பாளி அவருடைய பக்தி பாடல்கள் மற்றும் மெல்லிசை பாடல்கள் பலவற்றை கேட்டிருக்கிறேன் உண்மையில் அருமை ஆரம்பகாலங்களில் இலங்கை வானொலியில் பல பாடல்களை எழுதி எங்கள் நாட்டிற்கு தனித்துவமான பல மெல்லிசை பாடல்களை தந்திருக்கிற ஒரு படைப்பாளி இலங்கையின் புகழ்பூத்த பல படைப்பாளிகளை தந்த நான் பிறந்த மண் வடமராட்சி வதிரி மண்ணுக்கு பெருமை சேர்கின்ற அவரை படைப்பாளி அறிமுகத்தில் இணைத்தமைக்கு நன்றி அஸ்மின்
நன்றி
அன்புடன்
கந்தப்புஜெயந்தன் [இசை அமைப்பாளர் ]
யாழ் வடமராட்சி மண் பெற்றெடுத்த பல படைப்பாளிகள் மத்தியிலே இலங்கையின் தலை சிறந்த ஒரு படைப்பாளி என்பதை அவரது பல பாடல்களும் படைப்புக்களும் சாற்றி நிற்கிறது என்னுடைய தந்தையார் கந்தப்பு அவர்களோடும் ஆரம்பகாலங்களில் மெல்லிசை துறைக்கு பங்காற்றி உள்ளார் .அவருடைய பல பக்தி பாடல்களை கேட்டிருக்கிறேன் அருமை வதிரி மண் பெற்றெடுத்த சிறந்த படைப்பாளி அவரின் பணி மென்மேலும் வளர என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள் அவருடைய புதிய படைப்பு மென்மேலும் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்
அன்புடன் - கந்தப்பு ஜெயந்தன்
[இசை அமைப்பாளர் ]
அஸ்மின் அவர்களே,
எனது தகவல்களை வெளியீடுசெய்தமைக்குநன்றிகள்.
அன்புடன்
வதிரி.சி.ரவீந்திரன்.
கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்கள் இளைய படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றார்... மேலும் அவரது கவிதை நூல் ஒன்று விரைவில் வெளிவர உள்ளது...
கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களது கவிதைகள் சிலவற்றை படித்து சுவைக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது! என்னைப் போன்ற வளர்ந்து வருகின்ற எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் இவர் பெரும்பங்கு வகிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! இவரது படைப்புலக பணி மேலும் பல சுவடுகளைப் பதிக்க நெஞ்சார வாழ்த்துகிறேன். தமிழ் உலகம் உள்ளவரை இவரைப் போன்ற படைப்பாளிகளது புகழ் நிலைத்து வாழும்!
களம் கண்ட கவிஞர்!!
புலமறிந்த புலவர்!!
வாழ்த்துவதில்
பெரு மகிழ்ச்சி கொள்ளுகிறேன்!!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
கருத்துரையிடுக