ஞாயிறு, 13 மார்ச், 2011

படைப்பாளி அறிமுகம்-06- எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர்கனி

ண்ணத் தமிழுக்கு  வளம் சேர்க்கும் எண்ணற்ற எழுத்தாளர்களை ஈன்றெடுத்து, இலங்கையின் இலக்கிய நந்தவனத்துக்கு நறுமணத்தை வழங்கி வாகை சூடிய ஊர்களில் வாழைத்தோட்டத்துக்கு என்றே தனித்துவமான வரலாறு இருக்கின்றது.
 

இலங்கையில் அதிக பத்திரிகைகள் பூத்து அறிவுமணம் பரப்பிய பத்திரிகை பாரம்பரியம் மிக்க அந்த வாழை மண்ணில் பிறந்து,வாழையடி வாழையாக சங்கத்தமிழை சந்தனப் பல்லக்கில் சுமந்து நின்ற வாண்மை மிக்க படைப்பாளிகளுள் சமுதாய குரலாக ஒலிக்கும் சத்திய எழுத்தாளர்தான், கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி அவர்கள்.
 

இலங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான இவர் கவிதை,கட்டுரை, சிறுகதை,நாடகம்,பத்தி,ஆய்வு போன்ற துறைகளில் மட்டுமல்லாது பத்திரிகை துறையிலும் கடந்த நான்கு தசாப்தத்துக்கும் மேலாக  காலூன்றி தடம்பதித்துள்ளார்.மேலும், இவர் இலங்கையில் தமிழில் துப்பாய்வுத்துறை ( INVESTIGATIVE JOURNALIST) பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியாகவும் விளங்குகின்றார்.
இலங்கை ''மல்லிகை'' சஞ்சிகையின் முகப்பை அலங்கரிக்கும்  கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி

கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
 

1963ம் ஆண்டு  தினகரன் 'பாலர்கழகம்' பகுதியில் பிரசுரமான கல்வி கற்றல் என்ற மரபுக்கவிதை  மூலம் முதன் முதலாக இலக்கிய உலகத்தில் காலடி எடுத்துவைத்த இவரது படைப்புக்கள்
தமிழ்ச் செல்வன்,முஸாபி
ர்,முஸல்மான் ,அமுதன், இதயக்கனி,இப்னு இஸ்மாயில், நிஹார் மணாளன், சதுர்ச்செல்வன்,முல்லா ஆகிய புனை பெயர்களில் இலங்கையின் தேசிய பத்திரிகைள்,சஞ்சிகைகள் மட்டுமல்லாது சர்வதேச இலக்கிய ஏடுகளிலும் வெளிவந்துள்ளன.
 

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் 'ஊடுருவல் 'என்ற நிகழ்ச்சிமூலம் சமூக அவலங்களை படம்பிடித்து காட்டிய இவர்' பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் பட்டறையில் பட்டைதீட்டப்பட்ட வைரம். இலங்கை வலம்புரி கவிதா வட்டம் என்ற அமைப்பின் அமைப்பாளராக இருந்து பல புதிய கவிஞர்கள்  உருவாவதற்கு துணையாக நின்றவர்.


2002 சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா விருது வழங்கும் நிகழ்வு

 

தேசிய மட்டத்தில் நடைபெற்ற பல கலை-இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள இவருக்கு கிடைத்த கௌரவங்கள்.
 

01.    1991ம்ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்களுக்கான  இராஜங்க அமைச்சு நடாத்திய முதலாவது வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்வில் 'காதிபுல் ஹக்' சத்திய எழுத்தாளன் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

02.    1994 ம்ஆண்டு தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடத்தப்பட்ட 15வது திருக்குர்ஆன் மாநாட்டில் ''சமுதாய எழுத்தாளர்'' பட்டமும் பொற்கிழியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.


03.    1996ம்ஆண்டு இரத்தினபுரியில் அமைந்துள்ள அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் நடத்திய கலை-இலக்கிய சமூகப்பணியாளர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் ''சமுதாயக்காவலன்'' பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுளார்.

04.    2002ம்ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கொழும்பில் நடத்திய சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிரேஷ்;ட்ட படைப்பாளிக்கான விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.


05.    2007ம் ஆண்டு இலங்கை அரசின் கலாச்சார அமைச்சினால் சிரேஷ்;ட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் 'கலாபூசணம்' பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



கவியரங்கில் கவிதை பொழியும் கவிஞர் எஸ்.ஐ.நாகூர்கனி

இவர் வெளியிட்டுள்ள நூல்கள்.
 

01.    தூரத்து பூபாளம் (சிறுகதை தொகுதி-1983)
02.    அவள் நெஞ்சுக்குத் தெரியும் (நாவல்-1986)
03.    ஒரு வெள்ளிவழா பார்வை (எழுத்தாக்க தொகுப்பு நூல்-1989)
04.    காலத்தின் சுவடுகள் (சமூக விமர்சன நூல்-1993)
05.    நன்றி மறப்போம் (வரலாறு -1998)


தனது தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் கலை-இலக்கியம், பத்திரிகைத் துறையில் முத்திரை பதித்துவரும் 

எழுத்தாளர் கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி அவர்களின் எழுத்துப்பணி மேலும் மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 கருத்துகள்:

சிந்தையின் சிதறல்கள் சொன்னது…

இலக்கியத்துறையில் புரையோடிப்போன எம் மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்குமுகமாக உலகறிந்திடச்செய்வதற்காக அருமையான பதிவில் எழுத்தாளர் கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி அவர்களைப்பற்றி சிறப்புற அறிந்திட முடிந்தது தங்களது பணியுடன் அவர்களும் மேலும் சிறந்திட இறைவன் துணைபுரிவானாக

மிக்க நன்றி

himanasyed சொன்னது…

இலங்கை வாசகவட்டத்துக்கு என்னை அறிமுகம் செய்த இலக்கிய உடன்பிறப்பு

-டாக்டர் ஹிமானா சையத்

கவிஞர் அஸ்மின் சொன்னது…

அன்புள்ள
*கவிஞர் ஹாஸிம்
*டாக்டர் எழுத்தாளர் ஹிமான ஷையத்
உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் நன்றி

கருத்துரையிடுக