வெள்ளி, 10 ஜூன், 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு முஸ்லிம் லீக் கௌரவம்


பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், பிரதியமைச்சர் பஷீர்சேகுதாவூத்,புரவலர் ஹாஸீம் உமர், சட்டத்தரணி ரஷீத். எம். இம்தியாஸ் ,முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன்

அண்மையில் நடைபெற்ற மலேசிய உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான்  தலைமையில் இடம்பெற்ற சர்வதேச கவியரங்கில் மிகவும் மிகச் சிறப்பாக கவிபாடி இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த    கவிஞர்களான  பொத்துவில் அஸ்மின்  என்.நஜ்முல்ஹூசைன் ஆகியோரை கௌரவித்து பாராட்டும் நிகழ்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த  8ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு 8,எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


சம்மேளனத்தின் தேசியத் தலைவர் சட்டத்தரணி ரஷீத். எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வில்  பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர், ஹஸன் அலி, மற்றும் கல்விமான் எஸ். எச். எம் ஜெமீல், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகியோரும் மற்றும் பல இலக்கியவாதிகளும் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு பொன்னாடை போர்த்த பிரதியமைச்சர் பஷீர்சேகுதாவூத் நினைவுசின்னம் வழங்கி கௌரவித்தார்.
நன்றி :தினகரன் வாரமஞ்சரி 12.6.11
நன்றி :ஞாயிறு தினக்குரல் 12.6.11

நன்றி :நவமணி பத்திரிகை11.6.11



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 கருத்துகள்:

நஸ்ருல்லா கான் சொன்னது…

உண்மையில் மிகவும் சிறப்பாக கவியரங்கில் கவிதை பாடினீர்கள்.உங்கள் கவிபாடும் திறமையை கண்டு அதிர்ந்து போனவர்களில் நானும் ஒருவன்.எங்கள் நாட்டின் மூத்த கவிஞர்களையும் புலவர்களையும் வென்றுவிட்டீர்கள். வைரமுத்து பாணியில் நீங்கள் கவிதை பாடியது இன்னும் என் கண்முன்னே நிழலாடுகின்றது. வாழத்துக்கள் கவிஞரே.


கோலாலம்பூர்
மலேசியா

த.எலிசபெத் சொன்னது…

உண்மைகளை உரத்துச்சொல்லும் கவிதைகளை மரபிலே பதிப்பித்திடும் இலங்கையின் இளம் கவிஞரே, உங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களும் பதக்கங்களும் கவியுலகுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே கூற வேண்டும். இன்னும் பல சாதனைகளை படைத்து இலங்கை வரலாற்றில் இடம் பிடிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சோதனைகளை வென்று சரித்திரம் படைக்க என் பிரார்த்தனைகள்.


-த.எலிசபெத்-

நளின் சொன்னது…

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

உன் நண்பனாயிருப்பதில் பெருமைப்படுகிறேன்!

ஈழநிலா என்றும் வளர்பிறையாக............

கருத்துரையிடுக