காப்பியக்கோ' DR.ஜின்னாஹ் ஷரிபுத்தீன் |
தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணில் மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட இவர் விபுலானந்த அடிகளாரின் மாணவரும் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் ஆசிரியருமான தமிழ் பண்டிதர் புலவர்மணி ஆ.மு.ஷரிபுதீன் அவர்களின் புதல்வர்.
கவிஞருக்கு ''காப்பியக்கோ' பட்டத்தை வழங்குகின்றார் மலேசியா கல்வி வாரியத் தலைவர் ஹாஜி டத்தோ முஹம்மது இக்பால் |
கவிஞர் முஹம்மது மேத்தாவுடன் நமது காப்பியக்கோ |
''காப்பியக்கோ''வுடன் கலந்துரையாடலில் கவிஞர்களான ஏ.இக்பால், அல்-அஸூமத், அஷ்ரப் சிஹாப்தீன். |
இருபதுக்கும் மேற்பட்ட தேசிய மட்ட இலக்கிய போட்டிகளில் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றிருக்கும் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் 'பண்டாரவன்னியன்' காவியம் இலங்கை அரசின் சாஹித்திய மண்டல விருதினை பெற்றுள்ளது.அத்தோடு இவரது 'பெற்ற மனம்' சிறுகதை தொகுப்பு கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
கவிதாயினி மலீக்கா பாரூக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் |
இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் தலைவராக,கொழும்பு தமிழ்சங்கத்தின் துணைத் தலைவராக,சர்வதே இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் இலங்கை கிளையின் தலைவராவும் இருக்கும் இவர்,கலாபூசணம்,தமிழ் மாமணி, கவிமாமணி,காவியத் தலைவன்,நற்கவிஞர் உட்பட பல கௌரவ பட்டங்களை பெற்றிருக்கின்றார்.
அண்மையில் தமிழ் நாட்டின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தினரால் 'காப்பியக் கோ' என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டும்
கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் கௌரவிப்பட்டிருக்கின்றார்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 கருத்து:
வாப்பாவைப்பற்றி.மிகவும் அருமையாக தொகுத்துவழங்கியுள்ளீர்கள் கவிஞர் அவர்களே. தந்தை அவர்களின் மென்மையான மனதுக்கும். அன்பான தன்மைக்கும். இன்னும் இன்னும் பல புகழ் அவர்களை வந்தடையும் . இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்கி சிறப்பாக்கிவைப்பானாக..தாங்களுக்கும் நன்றிகள் பல
கருத்துரையிடுக