ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

காதலர் தின சிறப்புப் பாடல் 2011




 ''இது இலங்கை கலைஞர்களின் படைப்பு''

உலகத்தின் பூக்களிலே உன்கூந்தல் வாசமடி..!
உண்மையினை சொல்கின்றேன் நீதானென் தேசமடி..
உன்னழகை கண்டாலே நிலவுக்கே கூசுமடி..
உனக்காக மட்டும்தான் என்தென்றல் வீசுமடி...!

எங்கோ பிறந்தவளே.
எனக்குள்ளே மலர்ந்தவளே- உன்
கம்பன் விழிகளினால்- நான்
காவியமாகிவிட்டேன்-உன்
காதல் பார்வைகளால்- நான்
ஓவியனாகிவிட்டேன்....
                                            (எங்கோ பிறந்தவளே...)

ஊரும் தெரியல...
உறவும் புரியல..
உன்னால் சூரியன் எரியலடி..
நீயே உலகென..
நினைத்தேன் உயிரென..
என்னை உன்மனம் அறியலடி....

கவிதை பேசும் கண்கள் கொண்டு
கண்ணே என்னை கொள்ளையடி!
இரவாய் போன எந்தன்வாழ்வில்
இன்றே வந்து வெள்ளையடி.... 

                                       (எங்கோ பிறந்தவளே...) 
எந்தன் காதலி
உந்தன் பூவிழி
சொந்தம் நானென சொல்லுதடி...!
உந்தன் பூமொழி
சிந்தும் தேன்துளி
எந்தன் இரவினை கொல்லுதடி...

இதயத்தில் காதல் இருக்கின்றபோது
இதழ்களை ஏனடி மூடுகிறாய்...?
ஒருமுறை என்னைக் காணாது போனால்
இருமுறை ஏனடி தேடுகிறாய்?
                                               (எங்கோ பிறந்தவளே...)

இசையமைத்து பாடியிருக்கின்றார்:

'இசை இளவரசர்கள்' புகழ் கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள்: கவிஞர் அஸ்மின்.
பாடலுக்கான கதைச்சூழல்: இயக்குனர் ஏ.வெங்கடேஷ்

தொடர்புகளுக்கு:
K. ஜெயந்தன் (0770886358),
கவிஞர் அஸ்மின் (094 778998620),
vtvasmin@gmail.com

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 கருத்துகள்:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…

நான் விரும்பிக் கேட்கும் பாடல், அடிக்கடி முன்னுக்கும் பாடல்.. எப்பொழுதும் நினைவிலிருக்கும் பாடல். என் உறவை ஒரு நல்ல படைப்பை உலகிற்கு மீண்டும் காட்டிய பாடல். இசையமைத்த தம்பி கந்தப்பு ஜெயந்தனுக்கு மிக்க நன்றியும் கவிஞர் அஸ்மினுக்கு மிக்க வாழ்த்துக்களும்...

வித்யாசாகர்

கவிஞர் அஸ்மின் சொன்னது…

வருகை தந்தமைக்கும் கருத்து பகர்ந்தமைக்கும் கவிஞர் வித்தியாசாகருக்கு நன்றிகள் கோடி

செ.சிவபாலன் சொன்னது…

தென்னிந்திய சினிமாவுக்கு நிகரான எம்மவர் பாடலிது.இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் பாடல்களை கேட்பது போன்று இருக்கிறது.
இப்பாடலை பலதடவை கேட்டேன் கேட்க கேட்க இன்னும் இனிக்கிறது.
இன்னம் நிறையவே உங்களிடம் எதிர்பார்கின்றோம்.

வாழ்த்துக்கள் ஜெயந்தன் கவிஞர் அஸ்மின்.

செ.சிவபாலன்
கனடா.

ஜீவிதா சொன்னது…

இது இலங்கைப்பாடலா என்னால் நம்பவே முடியவில்லை.அஸ்மின் உங்கள் கவியாற்றல் மெய் சிலிர்க்க வைக்கின்றது.இந்தியாவில் நீங்கள் பிறந்திருந்தால் எங்கோ சென்றிருப்பீர்கள். வாழ்த்துக்கள்

ஜீவிதா(யாழ் பல்கலைக்கழகம்)
குருநகர்

அப்பாதுரை சொன்னது…

அருமையான பாடல்.
காதலன் கம்பனனான விவரம் புதிய பார்வை.

கருத்துரையிடுக