திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நான் பாடினேன் தேவதை நீகேட்கவே….


 பல்லவி

நான் பாடினேன்  தேவதை நீ கேட்கவே
நம்வாசலில் அழகிய பூப்பூக்கவே…!

அனுபல்லவி

என்தேசம்  நீதானே
என்சுவாசம்   நீதானே
என்பாடல் நீயடி
பொய் ஊடல் ஏனடி..?

சரணம் 01.

உன் மௌனம் என் நெஞ்சை 
கால்பந்து விளையாடும்
நீ சிரிக்கும் போதெல்லாம் 
நெஞ்சுக்குள்ளே  குயில் பாடும்

கவி பாடும் உன் கண்கள் 
என் பொழுதைக்  களவாடும்
காத்திருக்கும் போதல்லாம் 
உயிரின் உள்ளே வலி கூடும்

உன்னை எண்ணி வாடும்
என்னோடு எந்நாளும் பண்பாடு
கண்கள் கொண்டு என்னைக் கவிபாடு

ஊடல் கொண்ட உயிரே
உன்னோடு எப்போதும் அன்போடு
வாழும் எந்தன் மார்பில் மாலை சூடு

கோபம் என்னவோ
கொஞ்சிப்பேசவா


சரணம் -02

கண்டங்கள் பல தாண்டி
கால் போக நேர்ந்தாலும்
நெஞ்சில் பூத்த காதல் பூ
கடவுள் போல உயிர் வாழும்

ஊரென்ன சொன்னாலும்
யாரென்ன செய்தாலும்
உந்தன் பெயரை வேதம் போலே
உள்ளம் எண்ணும் எந்நாளும்

நீலவானம் வந்து
நிலவோடு நீராடும் பின்னேரம்..
நீயும் நானும் இன்றே ஒன்றாவோம்..

அந்திமாலை நேரம்
கவியூறும் நெஞ்சுக்குள் ரீங்காரம்
அன்புமாலை சூடி உறவாவோம்...

வாட்டம் என்ன பூவே
வாழ்ந்து பார்க்கவா..!!




இசை : 'இசை இளவரசர்கள்' எஸ்.நளிந்தா
 
பாடியவர்: 'இசை இளவரசர்கள்' புகழ் சுதர்ஷன்
 
பாடலாசிரியர்:கவிஞர் அஸ்மின்  

2011.8.01
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 கருத்துகள்:

த.எலிசபெத் சொன்னது…

காதல் பொங்கும்
கற்கண்டு வரிகள்
சொற்கள் ஒவ்வொன்றும்
சொல்லுது பல சேதிகள்...

குறை ஒன்றும் சொல்வதற்கில்லை மிக அற்புதம். வாழ்த்துக்கள் பாடல் நிச்சயம் போட்டியில் வெற்றிபெறும்.

-த.எலிசபெத்-

எஸ்.நளிந்தா சொன்னது…

முதற்கண் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!!

மிக்க நன்று நண்பா! இக்குறுகிய நேரத்தில் உன்னைத் தவிர வேறு யாராலும் இப்படியோர் பாடலைச் சந்தங்களுக்கமைவாக வழங்கியிருக்க முடியாது.

எஸ்.நளிந்தா

பெயரில்லா சொன்னது…

அழகான வரிகள்
இசையோடு இன்னும் பொழிவு பெரும்
கவலை வேண்டாம்
பாடல் எல்லோரையும் கவரந்துவிடும்
F.NIHAZA
http://nihazakahatowita.blogspot.com

Nalin சொன்னது…

Dear Asmin,
Thank you for your commitment on this and I am really grateful to you for giving me the lyrics on short notice. Your lyrics backed the song so nicely that we (Sutharshan & I) proudly hold the National Certificate for Display of talent for Singing & Music Composition respectively. I could boldly say that this achievement would have not been possible without you.

It is so nice to work with you and hope we will do more songs together.

Thanks everyone who were sending feedback on the song which really mean a lot to small time artists like me.

Nalin

கருத்துரையிடுக