ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சக்தி TV யின் ''இசை இளவரசர்கள்''




காதல் என்றாயே 
கண்ணாலே கடத்திச் சென்றாயே...

2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின்  இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின் இசையில் என்னால் (2011.8.07) எழுதப்பட்ட பாடல் இது.
 இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது. 
பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.


இசை:  'இசை இளவரசர்கள்' புகழ்  C.சுதர்ஷன் 
பாடல் வரிகள்: 'இசை இளவரசர்கள்' புகழ் கவிஞர் அஸ்மின்


பல்லவி

காதல் என்றாயே...
கண்ணாலே கடத்திச் சென்றாயே
நடுக் கடல்மீது கண்ணைக் கட்டி
கவிழ்த்து சென்றாயே...

உயிரே என்றாயே...
என்நெஞ்சின் உள்ளே சென்றாயே...
உன்பெயர் சொல்லி துடிக்கும்  நெஞ்சை
அடித்துக்கொன்றாயே...


அனுபல்லவி

நீ என்னை பிரிந்து மறந்த பின்னாலும்
நிலவே என்காதல் தேயாது வாழும்
மறந்தாயே தேனே
இறந்தேனே நானே..

சரணம்-01.

அழகான இளங்காலை தூறும்
மழையாக வந்தாயே...
அனலான புனலாகி இன்று
என்நெஞ்சை எரித்தாயே...!

நீ தந்த பூகம்பம் என்னோடு போகட்டும்
நீ போகும் திசையெல்லாம் பூஞ்சோலையாகட்டும்..

உன்கண்கள் சிவந்தால்நான் அழுவேனடி
உனக்காக கையேந்தி தொழுவேனடி

நிலவோடு... உறவாடி
நினைவுகள் நிதமின்று கவிதையில்
கரைகிறதே....


சரணம் - 02

உனக்காக எனக்குள்ளே ஒரு
தொடுவானம் செய்தேனே..
எதற்காக நிலவேநீ விட்டு
தொலை தூரம் போனாயே...

நீ தந்த பூச்செண்டை வாடாமல் பார்ப்பேனே
நீருக்கு பதிலாக கண்ணீரை வார்ப்பேனே..

நீ தூங்க நாளும்நான் விழிப்பேனடி...
நீ கேட்டால் உயிரைநான் அளிப்பேனடி...

அலையோடு விளையாடி
இலையொன்று கிளையின்றி
தனிமையில் தவிக்கிறதே...


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

அம்பாளடியாள் சொன்னது…

அழகிய சந்தவரிகளால் பல சொந்தப் பாடல்களையும்
கவிதைகளையும் எழுதிப் பலரது மனதையும் கவர்ந்துநிற்க்கும்கவிஞர் அஸ்மின் உங்களுக்கு எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
மென்மேலும் சிறந்த படைப்புகளால் ஒளிமயமான அந்த எதிர்காலம் உங்களை விரைத்தளைத்து என்றும் மங்காத விடிவெள்ளியாகத் திகழ
என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!...........

கருத்துரையிடுக