''இது இலங்கை கலைஞர்களின் படைப்பு''
உலகத்தின் பூக்களிலே உன்கூந்தல் வாசமடி..!
உண்மையினை சொல்கின்றேன் நீதானென் தேசமடி..
உன்னழகை கண்டாலே நிலவுக்கே கூசுமடி..
உனக்காக மட்டும்தான் என்தென்றல் வீசுமடி...!
எங்கோ பிறந்தவளே.
எனக்குள்ளே மலர்ந்தவளே- உன்
கம்பன் விழிகளினால்- நான்
காவியமாகிவிட்டேன்-உன்
காதல் பார்வைகளால்- நான்
ஓவியனாகிவிட்டேன்....
(எங்கோ பிறந்தவளே...)
ஊரும் தெரியல...
உறவும் புரியல..
உன்னால் சூரியன் எரியலடி..
நீயே உலகென..
நினைத்தேன் உயிரென..
என்னை உன்மனம் அறியலடி....
கவிதை பேசும் கண்கள் கொண்டு
கண்ணே என்னை கொள்ளையடி!
இரவாய் போன எந்தன்வாழ்வில்
இன்றே வந்து வெள்ளையடி....
(எங்கோ பிறந்தவளே...)
எந்தன் காதலி
உந்தன் பூவிழி
சொந்தம் நானென சொல்லுதடி...!
உந்தன் பூமொழி
சிந்தும் தேன்துளி
எந்தன் இரவினை கொல்லுதடி...
இதயத்தில் காதல் இருக்கின்றபோது
இதழ்களை ஏனடி மூடுகிறாய்...?
ஒருமுறை என்னைக் காணாது போனால்
இருமுறை ஏனடி தேடுகிறாய்?
(எங்கோ பிறந்தவளே...)
இசையமைத்து பாடியிருக்கின்றார்:
'இசை இளவரசர்கள்' புகழ் கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள்: கவிஞர் அஸ்மின்.
பாடலுக்கான கதைச்சூழல்: இயக்குனர் ஏ.வெங்கடேஷ்
தொடர்புகளுக்கு:
K. ஜெயந்தன் (0770886358),
பாடல் வரிகள்: கவிஞர் அஸ்மின்.
பாடலுக்கான கதைச்சூழல்: இயக்குனர் ஏ.வெங்கடேஷ்
தொடர்புகளுக்கு:
K. ஜெயந்தன் (0770886358),
கவிஞர் அஸ்மின் (094 778998620),
vtvasmin@gmail.com
vtvasmin@gmail.com
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 கருத்து:
அஸ்ஸலாமு அலைக்கும்,
பாடல் அருமை.அழகான வரிகள். நெஞ்சை அள்ளும் இசை. பிசிறில்லாத - வளமான குரல். உச்சரிப்பில்நேர்த்தி.
உள்ளத்தை ஊடுருவிய உணர்ச்சிப் பிரவாகம். ஸ்ருதி-லய சுத்தம். எங்கும் இடராத ஆலாபனை அற்புதம்.கடின
உழைப்பின் சுகப் பிரசவம். அஸ்மினும் இசைக் கலைஞர்களும் தோள் கொடுக்க கந்தப்பு நீ எங்கோ போய்ட்டேப்பு...!!!
உழைத்திருக்கிறீர்கள். வெற்றி பெற்ரிருக்கிறீர்கள். உளமார்ந்த பாராட்டுகள். வாழ்க...வளர்க...தொடர்க...!
வஸ்ஸலாம் - ஹுதா ஹாஃபிஸ் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
கருத்துரையிடுக