ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அண்ணாச்சி கோட்டையிலே அவன வெல்ல யாருமில்ல...(புதிய பாடல்)



பாடலாசிரியர்: கவிஞர் அஸ்மின்


பல்லவி

ண்ணாச்சி கோட்டையிலே
அவன வெல்ல யாருமில்ல
கருவாச்சி பெத்தபுள்ள
கத்தி வச்சா கழுத்து இல்ல!

சிங்கம்போல நடந்து வாரன் பாரு-மாமன்
சிரிப்புக்கேட்டா அடங்குமடா ஊரு....
அங்கமெல்லாம் வழியுது பார் பீரு...
எங்கும் இவன் ராச்சியம்தான் கூறு....
(அண்ணாச்சி கோட்டையிலே)

   சரணங்கள்

பாலிருக்குது பழமிருக்குது
பருகிடவா மச்சான்...
பார்வையாலே தேகமெங்கும்
தேனொழுக வச்சான்...

ஆசபோல மாம்பழத்த
அறுத்துத் தின்னடா-நான்
காசுபோட்டா விடிய விடிய
கனியும் பெண்ணடா

கொண்டுவாடா சோடா-என்ன
கொல்ல வந்த வேடா-இது
திண்டுக்கல்லு பீடா-வந்து
திண்டுவிட்டு போடா...                      
  
(அண்ணாச்சி கோட்டையிலே)
கள்ளிருக்கும் பானையிலே
கையவச்சுப் போனாய்..
உள்ளிருக்கும் பள்ளத்தில
ஒழுகுதடா தேனாய்..

வில்லெனவே மாறுகிறேன்
அம்பெடுத்து வாடா
புல்லுக்கட்டே கூப்பிடுறேன்
மேஞ்சப்புட்டு போடா...

அறுவா மீசக்காரா-என்ன
ஆளவந்த சூரா
பருவமுண்டு 'மோரா'-நீ
பருகுவந்து ஜோரா....                       

  (அண்ணாச்சி கோட்டையிலே)


2010.12.15
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

10 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

பாடல் ஜோர்.. பகிர்வுக்கு ஒரு கோர்...

நகுலன் சொன்னது…

''ஈழத்தின் வைரமுத்து'' கவிஞர் அஸ்மினுக்கு எனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.வரிகள் ஒவ்வொன்றும் நச்சென்று இருக்கின்றது.இந்தப் பாடல் எந்த படத்தில் வருகிறது?பாடல் நிச்சயம் நல்ல குத்தாகத்தான் இருக்கும் என்பது நிச்சயம்

இரா.கண்ணப்பன் சொன்னது…

//கள்ளிருக்கும் பானையிலே
கையவச்சுப் போனாய்..
உள்ளிருக்கும் பள்ளத்தில
ஒழுகுதடா தேனாய்..

வில்லெனவே மாறுகிறேன்
அம்பெடுத்து வாடா
புல்லுக்கட்டே கூப்பிடுறேன்
மேஞ்சப்புட்டு போடா///

சூப்பர் சார் எப்படி சார் அப்ப உங்களால் மட்டும் இப்படி முடியுது?இந்தியாவுக்கு நீங்க எப்ப வருவீங்க சார்...?

இரா.கண்ணப்பன்
சென்னை

Unknown சொன்னது…

nanrai irukkaiya paddu. Nantrikal.Samy

கவிஞர் அஸ்மின் சொன்னது…

*மதுரை சரவணன்
*நகுலன்
*இரா.கண்ணப்பன்
*சந்தாகோபன் எனது வலைப்பூவை தரிசித்து பாராட்டிமைக்கு நன்றி.
தொடர்ந்தும் ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே

மாரிமுத்து சிவகுமார் சொன்னது…

நல்ல பாடல் கவிஞரே..
மாரிமுத்து சிவகுமார்

மயூரன் சொன்னது…

அன்புக்குரிய அஸ்மின் உங்கள் படைப்புக்கள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன.இந்தப்பாடல் வெளிவந்தால் தென்னிந்திய சினிமா உலகம் உங்களை நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.நீங்கள் வைரமுத்துவைப்போல் எழுதுகின்றீர்கள் என்று எழுதி வாழ்த்தி உங்களை வீழ்த்துவதில் எனக்கு விருப்பமில்லை.இலங்கை மண்ணின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் தலைசிறந்த பாடலாசிரியராக நீங்கள் வரவேண்டும் என்று விரும்புகின்றேன் .நீங்கள் வருவீர்கள் உங்களால் முடியும்.

அன்புடன் மயூரன்

Unknown சொன்னது…

காதலித்து கவிதை சொன்னோர் கோடி, என் நண்பன் நீ வடித்து விடும் வாக்கியத்துன் பெயர்களோ பல கோடி, ஓங்கும் உன் குரல் ஓயாது பாரினிலே வாழ்த்துக்கள் நண்பா

கவிஞர் அஸ்மின் சொன்னது…

நண்பர்
*மாரிமுத்து சிவகுமார்
*மயூரன்
*முஹம்மட்
ஆகியோருக்கு இதயம் கனிந்த நன்றிகள்.

Unknown சொன்னது…

மாஷா அல்லாஹ் பிரமாதம் தொடரட்டும் உங்கள் வரிகள்.

கருத்துரையிடுக