ஈழத்தின் புதிய மெல்லிசைப் பாடல்-2011
இலங்கையில் 2008ம் ஆண்டு சக்தி TVயின் ''இசை இளவரசர்கள்'' என்ற பிரமாண்டமான இசை போட்டி நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான இளம் இசையமைப்பாளர் நளின்,அதன் மூலம் அறிமுகமாகி இன்று 'பனைமரக்காடு','கருப்பு சாமி உத்தரவு' திரைப்படங்கள் மூலம் திரைப்பட பாடலாசிரியராக ஏற்றம் பெற்றுள்ள கவிஞர் அஸ்மின், இளம் பாடகர் சுதர்சன் ஆகியோரின் கூட்டணியில் இப்பாடல் உருவாகியுள்ளது.
நமது ஈழத்து வாசம் வீசும் இப்பாடலை வரவேற்று இந்த இளம் கலைஞர்களை பாராட்டுவீர்கள் என்று நம்புகின்றோம்.
2011.8.10
Music: S.Nalin - 0094 773749559
Lyrics: Kavinger Asmin - 0094 778998620
Voice: A.Sudarshan 0094 770885336
Sound Engineering: Michael Mohana Ruban
பல்லவி
நான் பாடினேன் தேவதை நீ கேட்கவே…
நம்வாசலில் அழகிய பூப்பூக்கவே…!
அனுபல்லவி
என்தேசம் நீதானே
என்சுவாசம் நீதானே
என்பாடல் நீயடி
பொய் ஊடல் ஏனடி..?
சரணம் 01.
உன் மௌனம் என் நெஞ்சை
கால்பந்து விளையாடும்
நீ சிரிக்கும் போதெல்லாம்
நெஞ்சுக்குள்ளே குயில் பாடும்
கவி பாடும் உன் கண்கள்
என் பொழுதைக் களவாடும்
காத்திருக்கும் போதல்லாம்
உயிரின் உள்ளே வலி கூடும்
உன்னை எண்ணி வாடும்
என்னோடு எந்நாளும் பண்பாடு
கண்கள் கொண்டு என்னைக் கவிபாடு
ஊடல் கொண்ட உயிரே
உன்னோடு எப்போதும் அன்போடு
வாழும் எந்தன் மார்பில் மாலை சூடு
கோபம் என்னவோ
கொஞ்சிப்பேசவா
சரணம் -02
கண்டங்கள் பல தாண்டி
கால் போக நேர்ந்தாலும்
நெஞ்சில் பூத்த காதல் பூ
கடவுள் போல உயிர் வாழும்
ஊரென்ன சொன்னாலும்
யாரென்ன செய்தாலும்
உந்தன் பெயரை வேதம் போலே
உள்ளம் எண்ணும் எந்நாளும்
நீலவானம் வந்து
நிலவோடு நீராடும் பின்னேரம்..
நீயும் நானும் இன்றே ஒன்றாவோம்..
அந்திமாலை நேரம்
கவியூறும் நெஞ்சுக்குள் ரீங்காரம்
அன்புமாலை சூடி உறவாவோம்...
வாட்டம் என்ன பூவே
வாழ்ந்து பார்க்கவா..!!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
3 கருத்துகள்:
அழகான வரிகள். இசை தூக்கல். இந்த படைப்பை உருவாக்கிய சகல படைப்பாளிகளிக்கும் எனது வாழ்த்துக்கள். இன்னும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்கின்றோம்.
வணக்கம் கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களே!
உங்களுடைய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றோம் (வெற்றிமுரசு, இத்தாலித்தமிழ்.கொம்) நன்றி.
கடந்த 21-08-2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிமுதல் (இலங்கை நேரம் இரவு 11.30) வெற்றிமுரசு வானொலியில் ஈழத்துக் கலைஞர்களின் படைப்பு நிகழ்ச்சியில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களின் கவியாக்கத்தில் அமைந்த பாடல்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை வழங்கி உங்களை கௌரவித்திருந்தோம்.
அத்தோடு நீங்கள் குறிப்பிட்டபடி "நமது ஈழத்து வாசம் வீசும் இப்பாடலை வரவேற்று இந்த இளம் கலைஞர்களை பாராட்டுவீர்கள் என்று நம்புகின்றோம்." என்ற விடயத்தையும் நேயர்களுக்கு தெரிவித்திருந்தோம். வருங்காலங்களிலும் இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலமாக புலம்பெயர் வாழ் எம்மவர்களும் உங்களைப் போன்ற வளர்ந்து வரும் கலைஞர்களை பற்றி அறிய வழிவகை செய்வோம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
தொடர்ந்தும் உங்களது கலைப் பயணம் பற்றிய தகவல்களை மின்னஞ்சல் மூலமாக நீங்கள் தெரியப்படுத்தினால் நாம் அதை வெளிக்கொனரத் தயாராக இருக்கிறோம்.
உங்கள் கலைப்பயணம் மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.
வெற்றிமுரசு வானொலிக் கலையகம் மற்றும் இத்தாலித்தமிழ்.கொம்
மிக வேகமாக வளர்ந்துவரும் இலங்கையின் இளம் கவிஞரான கவிஞர் அஸ்மின் அவர்களின் இன்னுமொரு புதிய படைப்பை தரிசிப்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள். ஈழத்துமணம் வீசும் இப்படைப்பில் பங்கேற்றுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் திறமைகள் இன்னுமின்னும் வளரவும் சிறப்படையவும் என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.
த.எலிசபெத்
கருத்துரையிடுக