இலங்கையின் கலை,இலக்கிய பரப்பில் தனது சுவடுகளை ஆழப்ப பதிக்க முனைந்துவரும் இளம் எழுத்தாளரான அமல்ராஜ் மன்னார் வஞ்சியன் குளத்தை பிறப்பிடமாக கொண்டவர்.தற்போது கொழும்பில் வாழ்ந்து வருகின்றார்.
கவிதை,கட்டுரை,நாடகம் ,பேச்சு ஆகியவற்றில் ஈடுபாடு காட்டிவரும் அமல்ராஜ் மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரி, மன்னார் சவேரியர் ஆண்கள் தேசிய பாடசாலை என்பனவற்றின் பழைய மாணவர.சிறுவயது முதலே தனக்குள் இருந்து வந்த இடையறதா வாசிப்பு, இலக்கிய தேடலின் காரணமாக இன்று ஒரு எழுத்தாளராக பரிணமித்துள்ளார்.
இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை சஞ்சிகைகளிலும் இணைய சஞ்சிகைகளிலும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன.அத்தோடு 'புலம்பல்' என்ற தனது வலைப்பூவிலும் இவர் தொடர்ந்து எழுதிவருகின்றார்.
திருமறை கலா மன்றத்தின் நாடக பயிற்சி பட்டறைகளின் வளவாளரா பணியாற்றியிருக்கும் இவர் பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார.இவரது நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட 'உயிர்க்க துடிக்கும் உதிரங்கள்' என்ற ஊமை நாடகம் பலரதும் பாராட்டினை பெற்றுள்ளது.
மன்னார் திருமறை கலா மன்றத்தின் கலை இலக்கிய வெளியீடான 'தாளம்' சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியரான அமல்ராஜ் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் பணிபுரிந்து வருகின்றார்.கிறுக்கல் சித்திரமாகின்றன' கவிதை நூலையும் 'வேர்களும் பூக்கட்டும்' என்ற உளவியல் நூலையும் இவர் இதுவரை வெளியீட்டுள்ளார்.
இவரது இலக்கிய பணி சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 கருத்து:
அமல்ராஜ் அண்ணாவைப் பற்றி ஓரளவுக்குத் தெளிவாக தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி அஸ்மின் அண்ணா...
கருத்துரையிடுக