இது நான் புதிதாக இசையமைப்பாளர் ஷமீலின் இசையில்
எழுதியுள்ள பாடல்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
மிகவிரைவில் பாடலை நீங்கள் கேட்கலாம்.
பல்லவி
கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா
கொண்டாட 'புல்புல்' வாடா
துண்டாடும் கவலை தான்டா...
தூக்கிப் போடு
தூரம் தான்டா....!
அரிவாளை நெஞ்சில் தீட்டடா
அறிவாலே வென்று காட்டடா
அறியாமை அடித்து ஓட்டடா...
அஞ்சும் நெஞ்சை
கொல்வோம் வாடா...
அனுபல்லவி
போராடத் துணிந்தால் புயல்கூட பதுங்கும்
பூகம்பம் எமக்காய் பூப்பறிக்கும்....
நண்பாநாம் பயந்தால் நாய்கூட துரத்தும்
காக்கையும் தலையில் கூடுகட்டும்
நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
ஒன்றாய் சேர்ந்து ஜெயிப்போம் வா..வா..
(கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா...)
(சொல்லிசை - Rap)
உழவர்கள் உழுது
உலகமே அழுது
மறைந்திட்ட பொழுது
தோன்றாதே...
கடவுளை தொழுது
புதுவிதி எழுது
நிலவிலும் பழுது
வாடாதே...
சரணம் -01
இமயத்தில் ஏறவேண்டுமா..?
இதயத்தில் வீரம் கொண்டுவா
உலகத்தை ஆளவேண்டுமா..?
உடையாதே வா....
காற்றுக்கு சிறகு பூட்டலாம்
கனவுக்கு வர்ணம் தீட்டலாம்
கவலைக்கு தீயை மூட்டலாம்
நண்பா நீ வா.....
'வெற்றி'யின் வெற்றிப்பாட்டு எட்டு திக்கும் கேக்கட்டும்
நெற்றியின் வியர்வை பட்டு பூமி பூக்கட்டும்
நாசங்கள் உன்னை கண்டால் கைககள் கட்டி நிற்கட்டும்..
'நாசாவும்'உன்னிடத்தில் பாடம் கற்கட்டும்...!
நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
வானம் பூமி உனக்காய்தான்டா...
(கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா)
(சொல்லிசை - Rap)
உழவர்கள் உழுது
உலகமே அழுது
மறைந்திட்ட பொழுது
தோன்றாதே...
கடவுளை தொழுது
புதுவிதி எழுது
நிலவிலும் பழுது
வாடாதே...
சரணம் - 02
சாகாமல் சாக வேண்டுமா
பெண்ணோடு காதல் செய்யடா
இறந்தாலும் வாழவேண்டுமா
என்னோடு வா...
வரலாறு படிக்க வேண்டுமா
வாய்பார்த்து நீயும் நில்லடா..!
வரலாறு படைக்க வேண்டுமா
போராட வா..!
அநியாயம் செய்வோ ரெல்லாம் உன்னை கண்டு அஞ்சட்டும்
'ஐநா'வும் உந்தன் காலில் வீழ்ந்து கெஞ்சட்டும்..!
மமதைகள் ஓடிப்போக மனிதம் மட்டும் மிஞ்சட்டும்
மாற்றானின் தோட்டப்பூவும் உன்னை கொஞ்சட்டும்...!
நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
வாழும் உலகில் சொர்க்கம் செய்வோம்...!
*புல்புல்- இசைபாடும் பறவை
31.1.2012
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
3 கருத்துகள்:
அருமை அண்ணா.
Super!
மிக அருமையான பாடல்...அழகு நடையில் காத்திரமான கருத்துக்களைக் கொண்டுள்ளது... வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக