ஞாயிறு, 12 ஜூன், 2011

மலேசியாவில் இலக்கிய மாநாட்டில் இலங்கைக்கு பெருமை தேடித்தந்தவர்களுக்கு கௌரவம்.

 அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி பெருமை தேடித்தந்த  


  • கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் (மெய்யியல் துறைத் தலைவர், பேராதானை பல்கலைக்கழகம்),   
  • பேராசிரியர் வ.மகேஷ்வரன்(தமிழ்துறைத் தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்), 
  •  விரிவுரையாளர் கே.ரகுபரன் (தென்கிழக்கு பல்கலைக்கழகம்),  
  • 'கவிமணி' என். நஜ்முல் ஹூசைன்,
  •  கவிஞர் பொத்துவில் அஸ்மின் (தயாரிப்பாளர், வசந்தம் தொலைக்காட்சி), மற்றும் இலங்கை ஏற்பாட்டுக்குழுவை சேர்ந்த   
  • அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல்(கல்விமான், முன்னாள் அமைச்சு செயலாளர்)  
  • டாக்டர் தாஸீம் அஹமது
  • திருமதி  புர்கான் பீ.இப்திகார் (சிரேஸ்ட்ட அறிவிப்பாளர்,இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) 

ஆகியோரை கௌரவித்து பாராட்டும் நிகழ்வொன்று ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ம் திகதி மாலை 4.30மணிக்கு  கொழும்பு மெஸஞ்சர் வீதியில் அமைந்துள்ள பிரைட்டன் ரெஸ்ட் ஹோட்டல் மண்பத்தில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மன்றத்தின் தேசியத் தலைவர் 'தமிழ் தென்றல்' அல்ஹாஜ் எஸ்.எம். அலி அக்பர் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் நீதியமையச்சர்  ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் ,கௌரவ அதிதிகளாக  முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம்.எச். முஹம்மத்,பிரதி அமைச்சர் பஷீர் சேகு தாவூத்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர்,ஹஸன் அலி மற்றும் இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர்  ஆகியோரும் மற்றும் பல  இலக்கியவாதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். ஜின்னா தெரிவித்தார்.






இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இலங்கையின் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுமை படைத்துக்கொண்டிருக்கும் இளம் படைப்பாளரான மரபுக்கவிஞர் அஸ்மின் அவர்களுக்கும் மாநாட்டை சிறப்பித்த அனைத்து கலைஞர்களுக்கும் என் இனிய நல் வாழ்த்துக்களை சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறேன்

நன்றி!

த.எலிசபெத்‌

கருத்துரையிடுக