2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின் இசையில் என்னால் (2011.09.11) எழுதப்பட்ட பாடல் இது.இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது.பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.
• பல்லவி
விழியில் விழுந்தாயே...
என்நெஞ்சில் நொடியில் மலர்ந்தாயே...
என்வழியெங்கும் வழியும் கண்ணீர்
துளியில் தெரிந்தாயே...
கனவில் நுழைந்தாயே....
என்நெஞ்சின் கருவில் விளைந்தாயே
உன்னை தினந்தோரும் எண்ணும் பூவை
தீயில் எறிந்தாயே....
• அனுபல்லவி
நீ என்னை பிரிந்து மறந்த பின்னாலும்...
நினைவுகள் கங்கை நதிபோன்றே பாயும்....
நீயில்லா வாழ்க்கை
தீமேலே யாக்கை
• சரணம் - 01
அழகான இளங்காலை தூறும்
மழையாக வந்தேனே...
அணுவெங்கும் தீமூட்டி என்னை
அடியோடு எரித்தாயே...
நீ தந்த பூச்செண்டை வாடாமல் பார்ப்பேனே..
நீருக்கு பதிலாக கண்ணீரை வார்ப்பேனே..
வாழ்வெல்லாம் உனக்காக இருப்பேனடா...
ஒருவார்த்தை நீசொன்னால் இறப்பேனடா...
இரவோடு உறவாடி
நினைவுகள் நிதமின்று
துயரத்தில் துடிக்கிறதே....
• சரணம் - 02
கலையாடும் அழகான வண்ண
சிலையாக நின்றேனே...
அலையாடும் கடல்போல வந்து
விளையாடிப் போனாயே....
நீ தந்த பூகம்பம் என்னோடு போகட்டும்
நீ போகும் திசையெல்லாம் பூஞ்சோலையாகட்டும்..
உன்வாசம் எனைவிட்டு அழியாதடா
என்நாடி நரம்பெங்கும் நீதானடா....
அலையோடு விளையாடி
இலையொன்று கிளையின்றி
தனிமையில் தவிக்கிறதே...
,ir: Rju;rd;
ghlfp: gpurhe;jpdp
ghlyhrpupau:; ftpQu; m];kpd;