சனி, 31 மார்ச், 2012

நான் நீ 'அது'...!நான் உன்னை பார்த்தேன்
நீ என்னை பார்த்தாய்
நான் உன்னை ஈர்த்தேன்
நீ என்னை ஈர்த்தாய்

நான் உன்னை ரசித்தேன்
நீ என்னை ரசித்தாய்
நான் கொஞ்சம் சிரித்தேன்
நீ கொஞ்சம் சிரித்தாய்

நான் வந்து கதைத்தேன்
நீ வந்து கதைத்தாய்
நான் உன்னை புரிந்தேன்
நீ என்னை புரிந்தாய்

நான் அன்று நடந்தேன்
நீ அன்று நடந்தாய்
நான் அன்று பறந்தேன்
நீ அன்று பறந்தாய்

நான் அன்று கொடுத்தேன்
நீ அன்று கொடுத்தாய்
நான் அன்று எடுத்தேன்
நீ அன்று எடுத்தாய்

நான் அன்று காய்ந்தேன்
நீ அன்று காய்ந்தாய்
நான் அன்று நனைந்தேன்
நீ அன்று நனைந்தாய்

நான் அன்று தோற்றேன்
நீ அன்று தோற்றாய்
நான் அன்று வென்றேன்
நீ அன்று வென்றாய்

நான் அன்று அழுதேன்
நீ அன்று அழுதாய்
நான் அன்று மகிழ்ந்தேன்
நீ அன்று மகிழ்ந்தாய்


நான் உன்னை மணந்தேன்
நீ என்னை மணந்தாய்
நான் உன்னில் மணத்தேன்
நீ என்னில் மணத்தாய்

நான் உன்னை பாயாக்கினேன்
நீ என்னை சேயாக்கினாய்
நான் உன்னை தாயாக்கினேன்
நீ என்னை தந்தையாக்கினாய்

நான் அன்று இனித்தேன்
நீ அன்று இனித்தாய்
நான் அன்று கசந்தேன்
நீ அன்று கசந்தாய்

நான் அன்று மறைத்தேன்
நீ அன்று மறைத்தாய்
நான் அன்று  உறைத்தேன்
நீ அன்று உறைத்தாய்

நான் அன்று முறைத்தேன்
நீ அன்று முறைத்தாய்
நான் அன்று குரைத்தேன்
நீ அன்று குரைத்தாய்

நான் அன்று அடித்தேன்
நீ அன்று துடித்தாய்
நான் அன்று நடித்தேன்
நீ அன்று வெடித்தாய்

நான் அன்று மதித்தேன்
நீ அன்று மதித்தாய்
நான் அன்று வெறுத்தேன்
நீ அன்று வெறுத்தாய்

நான் அன்று வாழ்ந்தேன்
நீ அன்று வாழ்ந்தாய்
நான் அன்று வீழ்ந்தேன்
நீ அன்று வீழ்ந்தாய்

நான் அன்று பிரிந்தேன்
நீ அன்று பிரிந்தாய்
நான் அன்று தவித்தேன்
நீ அன்று தவித்தாய்

நான் அன்று எறிந்தேன்
நீ அன்று எறிந்தாய்
நான் அன்று எரிந்தேன்
நீ அன்று எரிந்தாய்

நான் அன்று துடித்தேன்
நீ அன்று துடித்தாய்
நான் அன்று உடைந்தேன்
நீ அன்று உடைந்தாய்

நான் உன்னை நினைத்தேன்
நீ என்னை நினைத்தாய்
நான் உன்னை மறந்தேன்
நீ என்னை மறந்தாய்

நான் உன்னை இழந்தேன்
நீ என்னை இழந்தாய்
நான் இன்று உணர்ந்தேன்
நீ என்று உணர்வாய்...?

சனி, 24 மார்ச், 2012

'கவிஞன்' காலாண்டு கவிதை சஞ்சிகை....


மீன்பாடும் தேன் நாடு என்று வர்ணிக்கப்படும் மட்டக்களப்பில் இருந்து வெளிவருகிறது. 'கவிஞன்' என்ற காலாண்டு கவிதை சஞ்சிகை.
கவிஞர் சதாசிவம் மதன் இதன் ஆசிரியராக இருக்கின்றார்.இதில் கவிதைகளோடு கவிதை பற்றிய கட்டுரைகள் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் போன்றன இடம்பெற்றுள்ளன.இந்த இதழுக்கு எழுத ஆர்வமுள்ள கவிஞர்கள் எழுதலாம்

முகவரி:

கூட்டுறவுக்கடை வீதி
புதுக்குடியிருப்பு
மட்டக்களப்பு
இலங்கை


மின்னஞ்சல் : kavignan@live.com
இணையம்: www.kavingnan.com
தொலைபேசி: 0094 773620328- 0094 653650153

கால்களே கவனிக்கவும்

நாயெல்லாம் துரத்தி
கால்களை கடித்தன
காலெல்லாம் இடரி
பூக்களை மிதித்தன

பூக்களின் உதிர்வை
புழுக்களும் ரசித்தன
புழுக்களின் மனதில்
அழுக்குகள் வசித்தன

கால்களும் உயிர்தான்
பூக்களும் உயிர்தான்
என்பதை இன்று
கடவுளே உணர்ந்தான்.

மனிதனோ இறந்தான்
மிருகமே இருந்தான்
அதனால்தான் இன்று
நடுநிலை மறந்தான்...

பாம்புகள் குளிக்கும் நதிவிண்ணில் இருப்பதனால்
சூரியன் பெறுமதி தெரிவதில்லை
மண்ணில் விழுவதினால்
மழையின் மதிப்பு குறைவதில்லை

அன்பை கொடுப்பதற்கு
அழகிய கைகள் தேவையில்லை
இன்பம் சுவைப்பதற்கு-வெறும்
உடலால் மட்டும் முடிவதில்லை

அருகில் இருப்பதனால்
காதலி அருமை புரிவதில்லை
தூரம் விலகுவதால்
காதலும் தூர்ந்து போவதில்லை

பாம்புகள் குளிப்பதினால்
நதிநீர் விஷமாய் போனதில்லை
பொறாமை இருப்பதினால்
இறைவன் எதையும் கொடுப்பதில்லை

உலகை படைப்பதற்கு
மனிதர்கள் எம்மால் முடியாது...
உலகை உடைப்பதற்கு-ஒரு
வார்த்தை மட்டும் போதுமென்பேன்