சனி, 27 ஏப்ரல், 2013

நல்லாசான் ''பிஸ்ருல் ஹாபி'' அவர்களுக்காக ஒரு பாடல்...


(கொழும்பு வாழைத்தோட்டத்தில் பிறந்து ஆங்கில புலமை மூலம் பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கிய சமூக சேவையாளர், நல்லாசான் ''பிஸ்ருல் ஹாபி'' அவர்களுக்காக அவர்களது மாணவர்கள் சமர்ப்பிக்கும் பாடல் இது. இன்று புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் அவருக்காக நாமும் பிரார்த்திப்போம்.)

இப்பாடல் ''Bodyguard''ஹிந்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  ''தேரே மேரி மேரி தேரே'' என்ற புகழ் பெற்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது. 
ஆண்: ஆ.. ஆ... ஆ....ஆ..................


பல்லவி

பெண்:

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...
நல்லவழிகூறி உள்ளங்களில் ஏறி பிஸ்ருல்ஹாபி வாழ்வீரே...
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...

ஆண்:

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...
உங்களால்தானே உண்டாகினோம்-என்றும்
உங்களால்தானே நன்றாகினோம்...

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...


சரணம் - 01

ஆண்: ஆ.. ஆ... ஆ....ஆ


இந்த வாழ்வொரு மாயம்
என்று வாழனும் நாளும்
துன்பம் நேர்ந்திட்ட போதும்
வென்று வாழ்ந்தீரே நீரும்

வாழைத் தோட்டத்தில் கஸ்டப்பட்டு
வாட்டத்தில் கல்விகற்று
வாழ்ந்தெமை வளர்த்தவர் நீரே............... ஆ.. ஆ... ஆ....ஆ..................


பெண்:

உங்களால்தானே உண்டாகினோம்-என்றும்
உங்களால்தானே நன்றாகினோம்...
வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...

ஆண்:

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...
வாசம்வீசும் நேசப்பூவே உயிரில் உம்மை சுமந்தோமே
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...


சரணம் - 02

ஆண்:

ஆ.. ஆ... ஆ....ஆ

மொழி ஆங்கிலம் மூலம்
வழி காட்டினீர் நாளும்
தெளி வாகினோம் நாமும்
அழியாத தும் நாமம்...

உலகாண்டிடும் ஆண்டவனின்
ஆசிகள் எங்கும் வரும்
கவலைகள் விட்டுவிடு வீரே..... ஏ........ஏ....ஏ....ஏ..................

பெண்:

உங்களால்தானே உண்டாகினோம்-என்றும்
உங்களால்தானே நன்றாகினோம்...

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...
சோகம் என்னும் இருளை போக்கி வாழ்வில் ஒளியை ஏற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...

ஆண்:

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...

சனி, 13 ஏப்ரல், 2013

வசந்தம் TVயில் இடம் பெற்ற திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் அவர்களின் நேர்காணல்.2013 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வசந்தம் தொலைக்காட்சியில்''இசையால் வெல்வோம்'' சிறப்பு நிகழ்ச்சியில் இடம் பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் அவர்களின் நேர்காணல்.