பாம்புகள் குளிக்கும் நதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாம்புகள் குளிக்கும் நதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 மார்ச், 2012

பாம்புகள் குளிக்கும் நதி



விண்ணில் இருப்பதனால்
சூரியன் பெறுமதி தெரிவதில்லை
மண்ணில் விழுவதினால்
மழையின் மதிப்பு குறைவதில்லை

அன்பை கொடுப்பதற்கு
அழகிய கைகள் தேவையில்லை
இன்பம் சுவைப்பதற்கு-வெறும்
உடலால் மட்டும் முடிவதில்லை

அருகில் இருப்பதனால்
காதலி அருமை புரிவதில்லை
தூரம் விலகுவதால்
காதலும் தூர்ந்து போவதில்லை

பாம்புகள் குளிப்பதினால்
நதிநீர் விஷமாய் போனதில்லை
பொறாமை இருப்பதினால்
இறைவன் எதையும் கொடுப்பதில்லை

உலகை படைப்பதற்கு
மனிதர்கள் எம்மால் முடியாது...
உலகை உடைப்பதற்கு-ஒரு
வார்த்தை மட்டும் போதுமென்பேன்