சனி, 11 ஆகஸ்ட், 2012

விஜய் ஆண்டனியின் ''நான்'' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் அஸ்மின் பாடல் - video song HD

 

''தப்பெல்லாம் தப்பேயில்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை
''

Movie:Naan

Starring : vijay Antony , SiddharthVenugopal, Rupa Manjari, Anuya
Direction : Jeeva Shankar
Music: Vijay Antony
Lyrics: Kavinger Asmin
vocals: Aathi, Santhosh Hariharan,

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ''நான்'' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் என்னால்  எழுதப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி சர்வதேச மட்டத்தில் நடத்திய பாடலியற்றல் போட்டியில் 20,000 போட்டியாளர்களுள்  முதலாமிடம் பெற்ற நான்  ''நான்'' திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்றுக்கொண்டேன்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.இலங்கையில் இருந்து நானும் என்னோடு சுயாதீன தொலைக்காட்சியின் பணிப்பாளர் புரவலர் ஹாஸீம் உமரும் கலந்து கொண்டோம்.நான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம்திகதி உலகமெங்கும் வெளியாகிறது..பாடலை பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.நன்றி


கவிப்பேரரசு வைரமுத்துவிடம் ஆசி பெற்றபோது ..
ஹாஸீம் உமர், பாடலாசிரியர்கள் பிரியன், அண்ணாமலை
ஹாஸீம் உமர்,கங்கை அமரன்