பொத்துவிலின் முன்னேற்றத்துக்கு உழைத்த பல்துறையை 33 பேர் பொத்துவில் பிரதேச சபையினால் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம்.எனது அருகில் பொத்துவிலின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சங்கர் அவர்கள் காணப்படுகின்றார்.
இது நான் புதிதாக இசையமைப்பாளர் ஷமீலின் இசையில்
எழுதியுள்ள பாடல்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
மிகவிரைவில் பாடலை நீங்கள் கேட்கலாம்.
பல்லவி
கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா
கொண்டாட 'புல்புல்' வாடா
துண்டாடும் கவலை தான்டா...
தூக்கிப் போடு
தூரம் தான்டா....!
அரிவாளை நெஞ்சில் தீட்டடா
அறிவாலே வென்று காட்டடா
அறியாமை அடித்து ஓட்டடா...
அஞ்சும் நெஞ்சை
கொல்வோம் வாடா...
'வெற்றி'யின் வெற்றிப்பாட்டு எட்டு திக்கும் கேக்கட்டும்
நெற்றியின் வியர்வை பட்டு பூமி பூக்கட்டும்
நாசங்கள் உன்னை கண்டால் கைககள் கட்டி நிற்கட்டும்..
'நாசாவும்'உன்னிடத்தில் பாடம் கற்கட்டும்...!
நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
வானம் பூமி உனக்காய்தான்டா...
(கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா)
(சொல்லிசை - Rap)
உழவர்கள் உழுது
உலகமே அழுது
மறைந்திட்ட பொழுது
தோன்றாதே...
மின்னலிலே காணி வெட்டி வெண்ணிலவால் வீடு கட்டி
விண்வெளியில் வாழ்ந்தாலும் இறப்பாய்..!
இன்னல்படும் மக்களுக்கு உண்ணவழி செய்துவிட்டால்
வெண்ணிலவாய் உலகுக்கே நீ இருப்பாய்...!
• அனு பல்லவி
உண்ண வழியின்றி மண்ணை சமைக்கின்றார்
நீ 'பீஸா' உண்ணு கின்றாய்...
சின்னஞ் சிறுசுகள் கையை நீட்டினால்
தினம் அடித்து விரட்டு கின்றாய்...
இந்த உலகத்தில் மிக உயர்ந்தவன்
என்றும் நீதான் என்று சொன்னாய்...
சொந்த உறவுகள் கந்த லணிகிறார்
அதைப் பார்த்து ரசித்து நின்றாய்...
பாழும் நெஞ்சை இன்றே மாற்று...
பாலை மண்ணில் தண்ணீர் ஊற்று...!
கோழை நெஞ்சை வெட்டிப் போட்டு
ஏழை வாழ்வில் தீபங்கள் ஏற்று.....!
• சரணம் - 01
பலகோடி மாந்தர்கள்
பசியாலே இறக்கின்றார்
கண்ணுள்ள மனிதர்கள்
குருடாய் இருக்கின்றார்..
காசுள்ளோர் நினைத்தாலே
காசினியே பூபூக்கும்
இல்லாத மக்களது
இல்லாமை பொடியாகும்
2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின் இசையில் என்னால் (2011.09.11) எழுதப்பட்ட பாடல் இது.இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது.பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.
2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின்இசையில் என்னால் (2011.8.07) எழுதப்பட்ட பாடல் இது. இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது. பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.
இசை:'இசை இளவரசர்கள்' புகழ் C.சுதர்ஷன் பாடல் வரிகள்:'இசை இளவரசர்கள்' புகழ்கவிஞர் அஸ்மின்
பல்லவி
காதல் என்றாயே...
கண்ணாலே கடத்திச் சென்றாயே
நடுக் கடல்மீது கண்ணைக் கட்டி
கவிழ்த்து சென்றாயே...
உயிரே என்றாயே...
என்நெஞ்சின் உள்ளே சென்றாயே...
உன்பெயர் சொல்லி துடிக்கும் நெஞ்சை
அடித்துக்கொன்றாயே...
அனுபல்லவி
நீ என்னை பிரிந்து மறந்த பின்னாலும்
நிலவே என்காதல் தேயாது வாழும்
மறந்தாயே தேனே
இறந்தேனே நானே..
சரணம்-01.
அழகான இளங்காலை தூறும்
மழையாக வந்தாயே...
அனலான புனலாகி இன்று
என்நெஞ்சை எரித்தாயே...!
நீ தந்த பூகம்பம் என்னோடு போகட்டும்
நீ போகும் திசையெல்லாம் பூஞ்சோலையாகட்டும்..
சிங்கம்போல நடந்து வாரன் பாரு-மாமன்
சிரிப்புக்கேட்டா அடங்குமடா ஊரு....
அங்கமெல்லாம் வழியுது பார் பீரு...
எங்கும் இவன் ராச்சியம்தான் கூறு.... (அண்ணாச்சி கோட்டையிலே)
மாநபியே.. மாநபியே...
மாநபியே துயரின் மாமருந்தே..
மறையளித்த உலகின் தேன்கரும்பே.... (மாநபியே..)
உயர்தீனின் பூரணமே...
உண்மை ஒளிரும் தோரணமே
இறைமறையை நாங்கள் பெற
நபி நீங்கள் காரணமே...!
மக்கள் அறியாமை விட்டுத் தெளிவாக
வழிகாட்டிய ஒளிதானே...
(மாநபியே..)
சரணம்-1
மக்கா நகர் காபிர்கள்
சிக்கல்பல செய்தாலும்
பக்குவமாய் நீர் இருந்து
பாவிகளை பொறுத்தீரே..
தக்கபடி நாம் வாழ
அக்கறையாய் இருந்தீரே
திக்கு எட்டும் தீனை நட்டு
தீமைகளை அறுத்தீரே...
எதிர்காலம் நிகழ்காலம்
கூறும் இறைவேதம்
தந்த தூதரே நபிநாதரே...
என்றும் உங்கள் வழிநடப்போம் (மாநபியே..)
சரணம்-2
எல்லாம் வல்ல இறையோனை
எங்கும் உள்ள மறையோனை
அல்லாஹ்வினை மட்டும் நாங்கள்
அடிபணியச் சொன்னீரே...
ஒன்றுமில்லா எளியோரை
ஒதுக்கவேண்டாம் என்றீரே
வறுமை வந்து வதைத்த போதும்
பொறுமையுடன் நின்றீரே...
மார்க்கம் இறை மார்க்கம்
மீட்கும் கரை சேர்க்கும்
நேர்வழி என்றும் செல்கிறோம்
உங்கள் நிழலில் நாமிருப்போம்...