வெள்ளி, 20 செப்டம்பர், 2013

கடன்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற எனது பாடல்

வன்னி கிரியேஷன் தயாரிப்பில் ப.சிவகாந்தனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''கடன்காரன்'' திரைப்படத்தில் இடம்பெற்ற எனது பாடல் .இசை: கந்தப்பு ஜெயந்தன்
பாடியோர்: கந்தப்பு ஜெயரூபன் &சுபா


•    பல்லவி

ஆண்:
ஏ  பச்ச முத்தம் நச்சுன்னுதான் தாடி புள்ள-நீ
வெக்கம் விட்டு சொர்க்கம் தர வாடி புள்ள
ஏ பொட்டபுள்ள சுத்துறியே ஊருக்குள்ள
ஓ வட்டமுகம் நிக்குதடி பீருக்குள்ள....

•    அனு பல்லவி
அஞ்சுகமே நீயிருந்தா சோக மில்ல
நெஞ்விட்டு ஓன் நெனப்பு போக வில்ல
பஞ்சம் பசி வந்து புட்டா கவலை யில்ல-ஓம்
பச்சரிசி பல்வரிச போதும் புள்ள

அடி வாடி......ஏ... ஏ...

 அடிவாடி வாடி வாழப்பழம் - ஓன்ன
உரிச்சி தின்டா ஞானம் வரும்
தாடி தாடி சேலாப்பழம் -- அத
பறிச்சி தின்டா  கோடிச் சுகம்..!

•    சரணம்-01

ஆண்:

கண்ணால பேசுற
எதற்குப் புள்ள ஏசுற
ஒன்னால நாளுமே மெலிஞ்சு போனேன்டி

பெண்:

முன்னால நிக்கிற
முழுங்கி ஏன்டா பாக்குற
ஒன்னால நாளுமே நனனஞ்சி போனேன்டா

•        ஆண்:

நான் தாலி கொண்டு வந்தா
ஏன் வேலி போட்டு போற
நான் காத்துப்போன பந்தா -தெனம்
காத்துக் கெடந்து போறன்

பெண்:

நீ ஜாலி பண்ண வந்தா
நான் வேலி போட்டு விடுவன்
மஞ்சத்  தாலி கொண்டு வந்தா
கை தோளில் போட்டு வருவன்...

(அடி வாடி......ஏ... ஏ...)

 சரணம்-02

ஆண்:
பொல்லாத திமிரு நீ
என் பொலப்பக் கெடுக்கும் அழகி நீ
சல்லாபக் கண்ணியே
சறுக்க வச்சாயே.


பெண்:
கண்ணாளம் பண்ணுடா
கனிந்த பொறகு தின்னுடா
என்னாட்டம் மாம்பழம்
எங்குமில்லடா...

ஆண்:

நான் கத்தி கொண்டு வாரன்
நீ கழுவிக் கொண்டு வாடி-ஒன்ன
வலித்திடமா உரிப்பன் நீ
வளஞ்சி நெழிஞ்சி தாடி

பெண்:

அட புத்திகெட்ட மக்கா
நீ பேசவேண்டாம் தப்பா-வெறும்
அட்டகத்தி வச்சி - நிதம்
ஆட்டம் போடு தப்பா


ஆண்:
அடி வாடி......ஏ... ஏ...

அடிவாடி வாடி வாழப்பழம் - ஓன்ன
உரிச்சி தின்டா ஞானம் வரும்
தாடி தாடி சேலாப்பழம் - ஒன்ன
பறிச்சி கடிச்சா கோடிச்சுகம்..!

பெண்:
கத்துக்கொடு கத்துக்கிறன் கட்டில் யுத்தம்-ஒன்ன
கட்டிக்கிட்டு கத்துக்கிட்டா என்ன குத்தம்..?
இச்சிக்கொடு வச்சிக்கிறன் நெஞ்சில் நித்தம்-நீ
உச்சிக்கொட்டிப் பிச்சித் தின்ன ஏறும் பித்தம்

சனி, 14 செப்டம்பர், 2013

கடன்காரன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழாவன்னி கிரியேஷன் தயாரிப்பில் ப.சிவகாந்தன் இயக்கத்தில் வெளிவரும் ''கடன்காரன்'' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியிட்டு விழா இன்று (15.9.13) பி.ப.2.30 மணியளவில்  வவுனியா  நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இத்திரைப்படத்துக்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைக்க, பாடல் வரிகளை விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்பட புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின் மற்றும் பிரதாபன் மாஸ்டர் ஆகியோர் எழுதியுள்ளனர். பாடல்களை கானா பாலா, ஜெயரூபன், சுபா, ஜெயந்தன், ஜெயப்பிரதா ஆகியோர் பாடியுள்ளனர்.

இலங்கையின் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் வன்னி மண்ணில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகிவரும் இத்திரைப்படம் இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஒரே தினத்தினத்தில் வெளியிடப்படக்கூடிய நடவடிக்கைகளை வன்னி கிரியெஷன் மேற்கொண்டுள்ளுதாக அதன் இயக்குனர் ப.சிவகாந்தன் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 6 செப்டம்பர், 2013

பாம்புகள் குளிக்கும் நதி

''பாம்புகள் குளிக்கும் நதி'' எனது 3 ஆவது கவிதை நூல்.
நண்பர் ஜாபர்சாதீக் அவர்களின் 'ப்ளின்ட்' பதிப்பக வெளியீடாக மிகவிரைவில் வெளிவரவுள்ளது.

இந்நூலுக்கு 'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் அணிந்துரை எழுத வாழ்த்துரை வழங்கியுள்ளார் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள்.
நூலில் இலங்கை உட்பட தமிழ் கூறும் உலகமெங்கும் பரந்து வாழும் படைப்பாளிகள்,முகநூல் நண்பர்களின் கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

2011 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் காட்சித் தொகுப்பு


 
 

  2011 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் காட்சித் தொகுப்பு பாகம் ஒன்று.2011ம் ஆண்டு மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மானின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கின் சிறு துளி.