அண்மையில் திரைப்படம் ஒன்றிற்காக பாடல் எழுத பணிக்கப் பட்டிருந்திருந்தேன்.இயக்குனர் படத்தில் பாடல் இடம்பெற வேண்டிய சூழலை விளக்கி டியுனைத்தந்து பாடல் எழுத கேட்டிருந்தார்.
கதையையும் டியுனை கேட்டவுடனே வரிகள் திமிரிக்கொண்டு வர ஆரம்பித்தன.நல்ல
கதை அதற்கேற்ப இசையமைப்பாளர் மிகவும் அருமையாக அந்த மெட்டினை
செதுக்கியிருந்தார். முதலில் பல பல்லவிகளை எழுதிக்கொடுத்தேன்.பல
கலந்துரையாடல்களின் பின்னர் எழுதிய பல்லவிகளில் ஒன்று தேர்வானது.
அதன் பின்னர் முழுப்பாடலையும் எழுதி நிறைவு செய்தேன்.இயக்குனருக்கும் பாடல் மிகவும் பிடித்திருந்தது. வெகுவாக வரிகளை சிலாகித்து பேசினார். நானும் மகிழ்ந்தேன் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை......
திடிரென மறுநாள் அழைப்பை ஏற்படுத்திய இயக்குனர் ''பாடலின் டியுனை நாங்கள் மாற்றி விட்டோம்.நீங்கள் முன்பு எழுதிய பாடல் இடம்பெறாது இப்பொது அனுப்பும் டியுனுக்கு எழுதுங்கள்'' என்றார்.
''சரி'' என்று ஏற்றுக்கொண்டு இன்று (8.11.12) பாடலை புதிய டியுனுக்கு எழுதி கொடுத்து விட்டேன் .பாடல் சிறப்பாக வந்துள்ளது.இயக்குனரும் மிகவும் மகிழ்ந்து போனார்....
அந்த பெயர் குறிப்பிட விரும்பாத திரைப்படத்தின் கதைச்சூழலுக்கும் மெட்டுக்கும் ஏற்ப நான் முதலில் எழுதிய பாடல் இது. இந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்பது வருத்தம்தான். பாடல் பற்றி கருத்துக்களை நண்பர்களிடமே விட்டுவிடுகின்றேன்.
தொகையறா
யாஹூ மேகுறா – கரு
நாக மாகுறா...
பல்லவி
பொண்மேல ஆச வைய தடா- அவ
பொல்லாத எமனின் கையாளடா
முள்மேல கால வச்சாளும்டா-நீ
முகநூலில் காதல் செய்யாதடா...
மண்ணாப் போச்சி என் வாழ்க்க-நீ
பொண்ணுகள கதைய கேக்காத...!
அனு பல்லவி
கண்ணால தாண்டா கல் எறிஞ்சா
கண்ணாடி நெஞ்ச ஒடச்சா...
கண் இமையால் நாளும் கயிறு திரிச்சா
கனவிலே வந்து கழுத்த நெரிச்சா....
வெள்ள மனசுக்குள்ள
மெல்ல மொளச்சவளே
கொள்ள அடிச்சுப்புட்டு
கொல்ல துடிச்சவளே..
நெல்ல எறிஞ்சுபுட்டு
கல்ல கடிச்சவளே
உள்ள சிரிச்சுக்கிட்டே
உசுர குடிச்சவளே...
சரணம் -01
இரு பாட்டில் பியர் குடிப்பேன்.....
நடு ரோட்டில் நான் படுப்பேன்....
காதலும் நுழைய யாவும் வெறுத்தேன்
கணணி உலகில் காத்துக் கெடந்தேன்..
கவிதை நூல்கள் தேடிப் படித்தேன்...
கடித்த நாயை தூக்கி அணைத்தேன்.
விட்டில்
விழி வெட்டில்
புதுமெட்டில்
இளம் மொட்டில்
சட்டில்
ஒரு பொட்டில்
தினம் நெட்டில் கலந்து தொலைந்தேன்...
ஒன்ன ரசித்திருந்தோம்
ஒன்னா வசித்திருந்தோம்
ஒன்னா நனைந்திருந்தோம்
ஒன்னா இணைந்திருந்தோம்
ஒன்னா கதைத்திருந்தோம்
ஒன்னா கலந்திருந்தோம்
ஒன்னா நடந்திருந்தோம்
ஒன்னா தொலைந்திருந்தோம்..
சரணம் -02
முகநூலில் முகம் புதைத்தோம்
முழுஇரவும் விழித்திருந்தோம்
like குக்காக சண்டைகள் செய்தோம்...
life பை அங்கே முடிவு செய்தோம்....
போனில் பிடித்த போட்டோ பகிர்ந்தோம்...
வானில்கூட பூக்கள் பறித்தோம்....
மொட்டு
துயர் நட்டு
இளஞ்சிட்டு
உயிர் சுட்டு
பட்டு
எனை விட்டு
நஞ்சிட்டு போனது இறந்தேன்.....
பொண்மேல ஆச வைய தடா- அவ
பொல்லாத எமனின் கையாளடா
முள்மேல கால வச்சாளும்டா-நீ
முகநூலில் காதல் செய்யாதடா.
மண்ணாப் போச்சி என் வாழ்க்க-நீ
பொண்ணுகள கதைய கேக்காத...!
அதன் பின்னர் முழுப்பாடலையும் எழுதி நிறைவு செய்தேன்.இயக்குனருக்கும் பாடல் மிகவும் பிடித்திருந்தது. வெகுவாக வரிகளை சிலாகித்து பேசினார். நானும் மகிழ்ந்தேன் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை......
திடிரென மறுநாள் அழைப்பை ஏற்படுத்திய இயக்குனர் ''பாடலின் டியுனை நாங்கள் மாற்றி விட்டோம்.நீங்கள் முன்பு எழுதிய பாடல் இடம்பெறாது இப்பொது அனுப்பும் டியுனுக்கு எழுதுங்கள்'' என்றார்.
''சரி'' என்று ஏற்றுக்கொண்டு இன்று (8.11.12) பாடலை புதிய டியுனுக்கு எழுதி கொடுத்து விட்டேன் .பாடல் சிறப்பாக வந்துள்ளது.இயக்குனரும் மிகவும் மகிழ்ந்து போனார்....
அந்த பெயர் குறிப்பிட விரும்பாத திரைப்படத்தின் கதைச்சூழலுக்கும் மெட்டுக்கும் ஏற்ப நான் முதலில் எழுதிய பாடல் இது. இந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்பது வருத்தம்தான். பாடல் பற்றி கருத்துக்களை நண்பர்களிடமே விட்டுவிடுகின்றேன்.
தொகையறா
யாஹூ மேகுறா – கரு
நாக மாகுறா...
பல்லவி
பொண்மேல ஆச வைய தடா- அவ
பொல்லாத எமனின் கையாளடா
முள்மேல கால வச்சாளும்டா-நீ
முகநூலில் காதல் செய்யாதடா...
மண்ணாப் போச்சி என் வாழ்க்க-நீ
பொண்ணுகள கதைய கேக்காத...!
அனு பல்லவி
கண்ணால தாண்டா கல் எறிஞ்சா
கண்ணாடி நெஞ்ச ஒடச்சா...
கண் இமையால் நாளும் கயிறு திரிச்சா
கனவிலே வந்து கழுத்த நெரிச்சா....
வெள்ள மனசுக்குள்ள
மெல்ல மொளச்சவளே
கொள்ள அடிச்சுப்புட்டு
கொல்ல துடிச்சவளே..
நெல்ல எறிஞ்சுபுட்டு
கல்ல கடிச்சவளே
உள்ள சிரிச்சுக்கிட்டே
உசுர குடிச்சவளே...
சரணம் -01
இரு பாட்டில் பியர் குடிப்பேன்.....
நடு ரோட்டில் நான் படுப்பேன்....
காதலும் நுழைய யாவும் வெறுத்தேன்
கணணி உலகில் காத்துக் கெடந்தேன்..
கவிதை நூல்கள் தேடிப் படித்தேன்...
கடித்த நாயை தூக்கி அணைத்தேன்.
விட்டில்
விழி வெட்டில்
புதுமெட்டில்
இளம் மொட்டில்
சட்டில்
ஒரு பொட்டில்
தினம் நெட்டில் கலந்து தொலைந்தேன்...
ஒன்ன ரசித்திருந்தோம்
ஒன்னா வசித்திருந்தோம்
ஒன்னா நனைந்திருந்தோம்
ஒன்னா இணைந்திருந்தோம்
ஒன்னா கதைத்திருந்தோம்
ஒன்னா கலந்திருந்தோம்
ஒன்னா நடந்திருந்தோம்
ஒன்னா தொலைந்திருந்தோம்..
சரணம் -02
முகநூலில் முகம் புதைத்தோம்
முழுஇரவும் விழித்திருந்தோம்
like குக்காக சண்டைகள் செய்தோம்...
life பை அங்கே முடிவு செய்தோம்....
போனில் பிடித்த போட்டோ பகிர்ந்தோம்...
வானில்கூட பூக்கள் பறித்தோம்....
மொட்டு
துயர் நட்டு
இளஞ்சிட்டு
உயிர் சுட்டு
பட்டு
எனை விட்டு
நஞ்சிட்டு போனது இறந்தேன்.....
பொண்மேல ஆச வைய தடா- அவ
பொல்லாத எமனின் கையாளடா
முள்மேல கால வச்சாளும்டா-நீ
முகநூலில் காதல் செய்யாதடா.
மண்ணாப் போச்சி என் வாழ்க்க-நீ
பொண்ணுகள கதைய கேக்காத...!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
5 கருத்துகள்:
அருமையான வரிகள்
Mikavum arumai kavingar nanbare....
mikavum arumai kavingar nanbare.....
நல்ல வரிகள்... உண்மை வரிகள்...
அன்பின் அஸ்மின்,
ஒரு கவிஞராக தரமான வார்த்தைகளில் தமிழ் கவி எழுதும் உங்களுக்கு தமிழ் சினிமாப் பாடல் எழுதுகின்ற சவால் எப்படி அமையப் போகிறதோ என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு!! ஏனெனில், சினிமா பாடல்களுக்கு இருக்க வேண்டிய சமரசம் உங்கள் எழுத்துக்களில் குறைவாக தென்பட்டதாகவே உணர்ந்தேன். ஆயினும், குறித்த இந்த பாடல் உங்களை கவிஞர் என்ற தளத்திலிருந்து ஒரு ஜனரஞ்சக பாடலாசிரியர் என்கிற தரத்துக்கு தூக்கி விடும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்த பாடல் பிறந்த பிறகு அரங்கேற்றம் காணாதது கண்டு எவ்வளவு வருத்தப் பட்டிருப்பீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தும், இந்த பாடலின் வரிகள் நிச்சயமாய் இன்னொரு மெட்டுக்குள்ளும், சூழ்நிலைக்குள்ளும் இலகுவாய் போய் உட்கார்ந்து கொள்ளும்! நம்பிக்கையோடு இருங்கள். பாடல் கையிலிருக்கிறதே என்று நொத்துப் பித்து இசையமைப்பாளர்கள் கையில் கொடுத்து இசையும் குரலும் கோர்க்கிற வேலையை மட்டும் செய்ய வேண்டாம்!!
வாழ்த்துக்கள்.
Rickaz Raheem
கருத்துரையிடுக