வெள்ளி, 13 ஏப்ரல், 2012

இசையமைப்பாளர் வித்தியாசாகரின் இசையில் கவிஞர் அஸ்மினின் புதிய பாடல்





''நீலத்தாமரை''  என்ற மலையாள படத்தில் இசையமைப்பாளர் வித்தியாசகரின் இசையில் வெளிவந்த ''அனுராகவி லோட்சனனாயி..'' என்ற பாடலின் இசையில் லண்டன் தமிழ் வானொலிக்காக 2011.04.13 தமிழ் வருடப் பிறப்புக்காக எழுதப்பட்டது இந்தப் பாடல்.
பாடலை  இலங்கை மாவனல்லையில் பிறந்து   தற்போது லண்டனில் வாழும் ஒலிபரப்பாளர் ஷைபா பேகம் , வவுனியாவை சேர்ந்த இசையமைப்பாளர், பாடகர் கந்தப்பு ஜெயந்தன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப்பாடல்  2011ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற 'வியர்வையின் ஒவியம்' பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்றுள்ளது.அத்தோடு இப்பாடலில் இடம்பெற்றுள்ள சிலவரிகள் 2012  சித்திரை  புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் உள்ள தொலைபேசி வலையமைப்புக்களில் (Ringtone) பயன்படுத்தப்பட்டுள்ளது.அதனை இசையமைப்பாளர் ராஜ் தயாரிக்க குரல் கொடுத்துள்ளார் சங்கீதா பாக்கியராஜா.


பல்லவி
பூபாளம் வாழ்வினில் பாடும்
புதுக்கோலம் வாசலில் போடும்
புத்தாண்டில் புதிதாய் பிறப்போம்..!
சொந்தங்கள் கூடிடும் போது
சோகங்கள் வாழ்வினிலேது...?
சந்தோச வானில் நாங்கள் சிறகடிப்போம்
தினம் பறப்போம்! கலந்திருப்போம்....

அனுபல்லவி

பூபாளம் வாழ்வினில் பாடும்
புதுக்கோலம் வாசலில் போடும்
புத்தாண்டில் புதிதாய்  பிறப்போம்..!
புதுவாழ்வை தேடி நாங்கள் புறப்படுவோம்....

சரணம்-01

ஓ...நிலவும் நதியும் குலவும் இரவில்
உலகம் விளங்கும் நல்லொளியில்...
பிறக்கும் வருஷம் திறக்கும் வசந்தம்
இறக்கும் துயரங்கள் நொடியில்...

வாழ்க்கை வாங்கிவந்த வரமோ....
வாழ்வில் வானவில்லின் நிறமோ...
வாசம் வாழ்வில் நாளை வருமோ..
வருமோ.......

பூத்திருக்கும் பூமிப்பந்தை
புரட்டும் யுத்தம் தேவைதானோ....
நாங்கள் சேர் வோமே....

சரணம்-02

குழலும் யாழும் இசைக்கும்  உலகில்
மகிழ்வோ  கடல்போல் பெருகும்....
வெறியும் பகையும் மனதில் நிலைத்தால்
உறவோ பனிபோன்றே உறையும்
அன்பு வானில் சிறகு விரிப்போம்
இன்றே பழைய வாழ்வை எரிப்போம்
ஓன்றாய் புதிய உலகை ஜெயிப்போம்
ஜெயிப்போம்................

காத்திருக்கும் இன்ப வாழ்வை
காதலிப்போம்  இந்த நாளை
வாழ்வை வாழ் வோமே..
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

கருத்துரையிடுக