வியாழன், 20 மார்ச், 2014

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
-------------------------------------------------------------------------------------------------------------


தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழாமுதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரைநடைபெறவுள்ளதுஇத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும்பெண்கள் குறித்தபல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும்முன்னுரிமை கொடுக்கப்படும்மேலும் ஊடகத்துறையை சார்ந்த பல பயிற்சி பட்டறைகளும்நடைபெறவுள்ளனஇதற்கான பத்திரிக்கைச் சந்திப்பு மார்ச் 8, 2014 அன்று வாணிமஹாலில் நடைப்பெற்றது.
·         விளம்பர படங்கள் (Ad film)
·  குறும்படங்கள் (Short film)
·         முழு நீளத்திரைப்படம் (Featurefilm)
·         விளக்கத்திரைப்படம் ((Documentary film)


(CWIFF)  பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அனைத்து வகையான படங்களையும் வரவேற்கிறது.இவ்விழாவில் ஆண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்மாணவர்கள் அனுப்பும் திரைப்படங்களுக்கு பதிவுத் தொகையில் சிறப்பு சலுகைஉண்டுமேலும் மாணவர்கள் தரும் திரைப்படங்களுக்கு தனி முன்னுரிமை அளிக்கப்படுவதோடு அவர்கள் திரைப்படங்களை ஒரு நாள்முழுவதும் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇதற்கான முடிவுகள் நீதிபதிகள் குழுவினரால் தேர்வுசெய்யப்படும்இத்திரைப்படவிழாவுக்கான திரைப்படங்கள் பிவிஆர் திரையரங்கிலும்ஆர்.கே.வி ,ரிவ்யு அரங்கிலும் திரையிடப்படும்.


திரைப்படங்களை பதிவு அஞ்சல் மற்றும் www.cwiff.com என்ற  இணையத்தளம் மூலமாக அனுப்பலாம்படங்களை அனுப்ப வேண்டியகடைசி தேதி ஏப்ரல் 15, 2014.இத்திரைப்பட விழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசு தொகையும்விருதுகளும்வழங்கப்படவுள்ளன.
இலங்கையை சேர்ந்த படைப்பாளிகள் மேலதிக விபரங்களுக்கு இந்த நிகழ்வின் ஆலோசனை சபை உறுப்பினராகவும் சர்வதேச ஊடகஇணைப்பாளராகவும் இருக்கும்  கவிஞர் பொத்துவில் அஸ்மினுடன்  தொடர்புகொள்ளலாம் (0094 771600795,vtvasmin@gmail.com)



Ø  விபரங்களுக்கு
P.G.Udhayakumar,
Festival Director
Chennai Women’s International Film Festival,
O/o Eventaa SouthIndia Productions,
A division of M/s Dollphin Interactive Sciences pvt. ltd.,
URL : www.cwiff.com,
 E-mail: info@cwiff.com