வியாழன், 17 நவம்பர், 2011

காந்தள் பூக்கும் தீவிலே - புதிய பாடல் (2011)


இசை:கே.ஜெயந்தன்
வரிகள்:கவிஞர் அஸ்மின்
பாடியோர்: கே.ஜெயந்தன் & கே.ஜெயப்பிரதா

   பல்லவி
  • ஆண்:
காந்தள் பூக்கும் தீவிலே..- உன்
காந்தப் பார்வை தீண்டுமா..?
பூங்காற்று எந்தன் பாடலை
உன் காதில் சேர்க்குமா....?
  • பெண்:
இந்த வானம் பூமி நீயடா
இன்று நானும் கூட நீயடா
நாம் காதல் செய்து வாழவே
இந்த ஜென்மம் போதுமா...?
  • ஆண்:
கனவிலும் உன்னை தேடுகின்றேன்
கண்களை விட்டு தூரப் போனாய்...
நினைவிலே வந்து காதல் சொல்லி
பூக்கள் வீசடி
ஒரு வார்த்தை பேசடி
(காந்தள்  பூக்கும் தீவிலே...)
  • சரணம்-01
  • பெண்:
ஒரு தடவை வந்து போனாய்
பல தடவை நொந்து போனேன்
உன் இதயம் மறந்தால் நான்
உயிருடனே உதிர்ந்து போவேன்..!

உன் சிரிப்பில் இதயம் தொலைத்தேன்
உன் தெருவில் தேடி அலைந்தேன்
உன் முகத்தை காணாமல்
உயிருடனே நாளும் புதைந்தேன்....!

  • ஆண்:

மேசையில் பலகதை
படிக்காமல் கிடக்கின்றதே...!
ஆசையில் என்விழி
உனை தேடி தவிக்கின்றதே...!

நான் உலகமே போற்றும்
கலைஞனடி!
உன் காதலால் இன்று
ரசிகனடி....
நீ உதட்டினால் என்னை
கொன்றிட வந்தால்
ஆயிரம் முறை நான் சாகரெடி...!

(காந்தள்  பூக்கும் தீவிலே)

  • ஆண்:
என்தேசம் நீயடி
உயிர் சுவாசம் நீயடி
என்வாழ்வும் நீயடி
எந்தன் ஆறுயிரே......!!
 
  • சரணம்-02
  • பெண்:
பேருந்தில் நெருங்கி இருந்தாய்
பேசாமல் நொருங்கி நகர்ந்தேன்...
உன்னோடு பேசாமல்
தனிமையில் பேசி சிரித்தேன்...

உன்பெயரை சொல்லி ரசித்தேன்..!
உனக்காக சமையல் பயின்றேன்
உன்னோடு வாழத்தான்
பூமியிலே பெண்ணாய் பிறந்தேன்..!

  • ஆண்:
விழியிலே உன் முகம்
விடிந்தாலும் இருக்கின்றதே...
வலியிலே என்மனம் 
துடித்தாலும் சிரிக்கின்றதே...

நான் உனக்கென பிறந்த
கவிஞனடி...!
நீ இதழ்களை கொண்டு
என்னைப்படி..!
உன் கண்களின் அழகை
ஒருமுறை பார்த்தால்
கவிதைகள் தற்கொலை செய்யுமடி..!!

(காந்தள்  பூக்கும் தீவிலே)
  • ஆண்: 
உயிர்பூவும் நீயடி..
என்தீவும் நீயடி..
இங்கு யாவும் நீயடி..
எந்தன் தேவதையே..

(காந்தள் பூக்கும் தீவிலே)


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

24 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமை. அற்புதம். World Class.கந்தப்பு ஜெயந்தனை முன்பும் உங்களின் ஒரு பாடலில் கேட்டிருக்கிறேன்.

பிசிறில்லாத குரல். சுருதி விலகாத நேர்த்தி. சரளமாக வந்து விழும் கமகமங்கள். உடன் பாடுபவரும்
முழு அளவில் ஒத்துழைக்க, அஸ்மினின் கவிதை வரிகள் அனாயாசமாக துள்ளி விளையாட ஓர் அழகான
சங்கீதக் கோலம் ஜென்மம் எடுத்திருக்கிறது. வாழ்க... வளர்க... தொடர்க...!

அன்புடன் அ.ஜ.

பெயரில்லா சொன்னது…

hi, paadal keten. nalla paadal, varigalum nandru. padiyavar inimai. vazhthukkal.

Regards,
Azhagappan C(film director)
98412 03718

அனார் சொன்னது…

அன்புடன் அஸ்மின்,

நீங்கள் ஒரு சிறந்த பாடல் ஆசிரியர் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. உங்களது தனித்துவம்கூட அந்தத்துறைதான். மேலும் வளர வாழ்த்துகிறேன். “காந்தள்பூக்கும“ பாடல் மிக அருமை. அருமையான இசை. நன்றாகப் பாடியுள்ளார்கள்.


வாழ்த்துக்களுடன்
அனார்

இதயப்ரியன் ராஜூ சொன்னது…

இசையும் கவியும் ஒன்று சேர்ந்து
இதயம் நனைத்து செல்கின்றது
ஈழக் கலைகள் ஒன்றாய் இணைய
காதில் தென்றல் பிறக்கின்றது.
பட்டுப் போன இதயங்களும்
”காந்தள் பூக்கும் தீவில்”
எட்டித் தலை நிமிர்கின்றது....

அழகிய வரிகளோடு அற்புதமான இசையமைப்பில் அமையப் பட்டிருக்கும் (காந்தள் பூக்கும் தீவில்) இந்தப் பாடல் எங்கோ பிறந்தவளே பாடல் போன்று பெரியளவில் வெற்றியீட்டி தரும், தரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

Thaya Jasmin Kathirgamanathan சொன்னது…

ஈழ நிலா பொழிந்த
இதமான கவின் பா வரிகளுக்கு
அற்புத இசைக்கலைஞர் யெயந்தன்
அவர்களின் உயிரூட்டல் அற்புதம்.
'நான் உனக்கென பிறந்த கவிஞனடி-நீ
இதழ்களைக் கொண்டு என்னைப் படி....அழகான வரிகள்...
super super..well done ....keep it up.

Jinnah Masood சொன்னது…

அருமை அருமை பாடல் அருமை, இசை அருமை, பாடகர் குரல் வளம் அருமை, வரிகள் மிகவும் அருமை.... நன்றி

LW Dinusha சொன்னது…

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட எமக்கு இது பெருமையான விடயம்.பாடல் அற்புதம். உள்நாட்டு இசையை விட தென்னிந்திய,கனேடிய தமிழ் இசைக்கு தான் இலங்கை தொலைக்காட்சிகள்,வானொலிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. உள்நாட்டு இசையை ஒலிபரப்பு செய்தால் கலைஞர்களுக்கு ஊக்கமாகவும் இருக்கும். பொறுப்பதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். உண்மையிலேயே இந்தப் பாடல் இந்திய தமிழ் பாடலுக்கு நிகராகவே இருக்கிறது. வாழ்த்துக்கள் அஸ்மின். மேலும் மேலும் வளர வேண்டுமென வாழ்த்துகிறேன்.

sifaya சொன்னது…

பாடல் வரிகளும்,இசையும்,குரலும் தமிழகக்குப்பைகளுக்க்கு ஒரு குட்டு வைக்கிறது.வாழ்த்துக்கள்.

Ðhanu Thaniga சொன்னது…

இசை ,குரல், பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது இருபது தடவை நான் இந்த பாடலை கேட்டுவிட்டேன் ..keep up the good work and good luck in the future projects

Niroja சொன்னது…

அருமையான வரிகள் ரசிக்கத்தக்க இசை இனிமையான குரல் மிக மிக அற்புதமான பாடல் வாழ்த்துக்கள்அஸ்மின் அண்ணா ...

Malikka Farook சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துகள் கவிஞர் அவர்களே..இன்னுமின்னும் நற்புகழ்பெற எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்கட்டும்..

Shuhanth Shuhumar சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா. அருமையாக இருக்கிறது. இருபது முறை கேட்டு விட்டேன். இசை,குரல் என அனைத்தும் சூப்பர்.

Tharsan Siva சொன்னது…

அண்ணா பாடல் நன்றாக கவிவரிகளும் அழகாக இருக்கிறது இன்னும் இதைவிட நன்றாக மேலும் மேலும் எம்மவர் படைப்புக்கள் தெடர எனது வாழ்த்துக்கள்

புவியரசன் சொன்னது…

இந்திய சினிமா பாடல்களுக்கு இணையான பாடல்கள் தான் உங்களுடைய பாடல்கள் மிக மிக சிறப்பு

Devanesan Arokiyadoss சொன்னது…

naan unakkena pirandha kaviganadi varigaal arpudham asmim kaivigharey? isai rasikakoodiya isai ( good Tone).male Voiceil nalla alamaana unarvu irundhadhu ul vaangi paadiyullaar welldone!!!!!!!!!!!!! sirappaana padal anaivarukkum paraattu

Sivarajah Ananthan சொன்னது…

nice song and superb composition from Jeyanthan...and both are singing superb, voice excellent.....exspecially ur lyric....very well too... i enjoy it....good luck..ur S. Y. A.

ஏ.வெங்கடேஷ்(film director) சொன்னது…

//தென்னிந்திய சினிமா பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்தில் ஒரு துளியையாவது எம்மவர்களின் இசைக்கு எம்மவர்கள் கொடுத்தால் இலங்கையின் தமிழ் இசைதுறையில் பல அதிசயங்கள் நடக்கலாம்.//
--உங்கள் ஆதங்கம் விரைவில் விலக,கூடிய விரைவில் தென்னிந்திய சினிமா பாடல் எழுதுவீர்கள்..நிச்சயம்...மற்றபடி,உங்கள் பாடல் வரிகளின் அருமை தெரிந்ததே..இருப்பினும்,":மேஜையின்
மேல் புத்தகங்கள் படிக்காமல் கிடக்கின்றதே.."--பாட்டுக்குள் கவிதை..! வளர வாழ்த்துக்கள்..."

ஏ.வெங்கடேஷ்(film director)

Prabu Krishna சொன்னது…

வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

கவிதை பந்தலில் இளைப்பாறலாம்

அம்பாளடியாள் சொன்னது…

நல் உணர்வுகளைத் தாலாட்டும் இனிய பாடல்வரிகள் .
உங்கள் பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் பார்த்தும்
கேட்டும் ரசித்தேன் .வாழ்த்துக்கள் உங்களுக்கு மென்மேலும் சிறப்பான பாடல்வரிகள் இறையருளால் கிட்டட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .பாடகர்கள் இருவருக்கும்கூட என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

பெயரில்லா சொன்னது…

Ellame Atputham!Neenda thasapthangalukku piraku athavathu Thirukonamalai Paramesh-Koneshin "Unakku theriyuma"vukku piraku oru mellisai nalinaththai kaeddu ananthithithen. Inraiya thozhil nudpam periya thakkaththai isai apiviruththiyil aetpaduthiyirukkirathu. Ippadal sampanthamana anaivarukkum Vazhthukkal!


Thamizh Naaddu palaveenangalai pinpattamal viddu
oru padi ankirunthu munnaeruthal nanru. Paduporul kaathal maddumalla. "Saaha Ready" enpathai isaikaha sakiththuk kondalum Mozhik kalappu nerudukirathu. Thamizh Naaddu kalappu muraiyai pinpattavaendame. Eezhath thamizharkalukku sollaa pancham? Moththaththil 100% enathu manapoorvamana vazhthukkal.

A.M.Askar சொன்னது…

அருமையான வரிகள் ரசிக்கத்தக்க இசை இனிமையான குரல் மிக மிக அற்புதமான பாடல் வாழ்த்துக்கள்....

அ.முத்துலிங்கம் சொன்னது…

மிக நன்றாயிருந்தது. வாழ்த்துக்கள். என் செல்போனில் திருப்பி திருப்பி கேட்டபடியே இருக்கிறேன்.
அன்புடன்
அ.முத்துலிங்கம்

சுதாராஜ் சொன்னது…

Congratulations..Asmin..! you have a good future in the cine field Inshia Allah..!

Best Regards,
Sutharaj

கலசம்.கோம் சொன்னது…

அன்பின் அஸ்மின் ,

உங்கள் பாடல் கிடைக்கப்பெற்றோம். உங்கள் தமிழ் ஆழ்மைக்கு பேரு மதிப்பு தருகின்றோம்.
நீங்கள் மேலும் மேலும் வளர வண்டும் , உங்கள் திறமை வெளி உலகுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்களும் விரும்புகின்றோம்.

கலசம்.கோம் இனைய தளத்தின் முதல் பக்கத்தில் உங்கள் பாடலை இணைத்து உங்களுக்கு எங்கள் அன்பையும் உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தையும் கொடுக்க கலசம் நண்பர் குழு முடிவு எடுத்தள்ளது . இன்று இரவு முதல் கலசம் இணையத்தளத்தில் இரண்டு தினங்கள் உங்கள் YouTube பாடல் இருக்கும் என்பதனை அறியத்தருவதுடன் , இதனில் உங்களுக்கு ஆட்சேபனைகள் இருக்குமேயானால் அறியத்தும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் Facebook இணைப்பினையும் உங்கள் புகைப்படத்துடன் இணைக்க எண்ணியுள்ளோம்.

வாழ்க உங்கள் தமிழ்மீதான காதல் மிகுந்த ஆர்வம்.

அன்புடன்

கலசம் நண்பர்கள்



--
Thanking you in advance

Kalasam.com Team

http://www.Kalasam.Com

Skype Id: Kalasam.Com
Twitter: Kalasam.Com
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்

கருத்துரையிடுக