ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மின்னலிலே காணிவெட்டி....(பாடல்)




 •    பல்லவி

மின்னலிலே காணி வெட்டி வெண்ணிலவால் வீடு கட்டி
விண்வெளியில் வாழ்ந்தாலும் இறப்பாய்..!
இன்னல்படும் மக்களுக்கு உண்ணவழி செய்துவிட்டால்
வெண்ணிலவாய் உலகுக்கே  நீ இருப்பாய்...!

•    அனு பல்லவி

உண்ண வழியின்றி மண்ணை சமைக்கின்றார்
நீ  'பீஸா' உண்ணு கின்றாய்...
சின்னஞ் சிறுசுகள் கையை நீட்டினால்
தினம் அடித்து விரட்டு கின்றாய்...

இந்த உலகத்தில் மிக  உயர்ந்தவன்
என்றும் நீதான் என்று சொன்னாய்...
சொந்த உறவுகள் கந்த லணிகிறார்
அதைப் பார்த்து ரசித்து நின்றாய்...

பாழும் நெஞ்சை  இன்றே மாற்று...
பாலை மண்ணில்  தண்ணீர் ஊற்று...!
கோழை நெஞ்சை வெட்டிப் போட்டு
ஏழை வாழ்வில்  தீபங்கள் ஏற்று.....!

•    சரணம் - 01

பலகோடி மாந்தர்கள்
பசியாலே இறக்கின்றார்
கண்ணுள்ள மனிதர்கள்
குருடாய் இருக்கின்றார்..

காசுள்ளோர் நினைத்தாலே
காசினியே பூபூக்கும்
இல்லாத மக்களது
இல்லாமை பொடியாகும்

திருந்தாத எண்ணத்தை
தீயில் போட்டு...
வருந்தாத நெஞ்சுக்கு
தீயை மூட்டு...
வறுமைக்கு பிறந்தோர்க்கு
வாழ்வைக் காட்டு

வசந்தத்தை நீ கொண்டு வா....
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக