01.கொஞ்சும் தமிழ்மொழியை கொல்ல நினைப்பவர்க்கு
நஞ்சுவைப் போம் நாம்.
02.கோழையாய் இருக்காது கொடுமைகளை பார்த்தபடி
மூலையில் கிடக்காதென் மூளை.
03.திருக்குறளின் வடிவத்தில் நறுக்குகளாய் இருக்கின்ற
தெருக்குறள்கள் தருவேன் நான்.
04.பூவோடு சேர்ந்திருந்தால் பூமியெங்கும் இருக்கின்ற
புல்கூட வாசம் தரும்.
05.பேஸ்புக் தெரியாதார் பேயர்கள் நவயுகத்தில்
வேஸ்டான வெங்காயங்கள்.
06.பருப்புக்கே விலையேற்றும் பாவிகளை வரவேற்க
செருப்பிலே மாலை செய்.
07.பத்திருகை சேர்ந்து முடியாத செயல்தன்னை
பத்திரிகை செய்யும் பார்.
08.கூழைக்குடித்தாலும் கூனாத கூட்டம்நாம்;வாழ்வதற்குன்
காலைப்பிடிப்போமோ சொல்.
09.கூடிக் குழிபறிப்போர் அதிகமுள குவலயத்தில்
தேடி நட்பைத் தேர்.
10.காட்டிக் கொடுத்து வாழ்கின்ற வாழ்வை விட
கூட்டிக் கொடுத்தல் மேல்.
11.அன்பான மனது அசையாத நட்பி ரண்டும்
உலகாம் மனித உயிர்க்
12.தமிழே தெரியாது தப்பாக புனைவோரை
உமிழும் ஓர்நாள் உலகு.
13.பல்லிழித்து விருதுபெறும் பண்டிதரை கண்டாக்காள்
கல்லெறிந்து கொல்லல் கடன்
14.நாடிருந்தென்ன? நகரிருந்தென்ன? குடியிருக்க
வீடின்றேல் வாழ்க்கை வீண்.
15.அறிவிப்பு செய்வோரின் தமிழ்க்கொலைகள் கண்டாலே
அரிவாளே வெட்கப் படும்.
16.என்னைமறந்துநீ எப்படித்தான் இருக்கின்றாய்...?
உன்னை மறப்பேனா நான்
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
3 கருத்துகள்:
வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....
http://meenakam.com/topsites
http://meenagam.org
good
கொஞ்சும் தமிழ்மொழியை கொல்ல நினைப்பவர்க்கு
நஞ்சுவைப் போம் நாம்.( ஹ்ம்ம்...இதில் நானும் மாட்டிப் படுவேனோ என்று தான் பயமாக இருக்கிறது..)
அறிவிப்பு செய்வோரின் தமிழ்க்கொலைகள் கண்டாலே
அரிவாளே வெட்கப் படும்.
( அச்சோ.. எங்க பார்த்தாலும் ஒரே மிரட்டலா இருக்கு..இங்கயும் நான் கண்டிப்பா இருப்பேன்..)
சபாஸ்... தெருக்குரல்.
கருத்துரையிடுக