ஞாயிறு, 1 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -09 - கவிஞர் மன்னார் அமுதன்


லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் மன்னார் அமுதன்; மன்னார் மாவட்டத்தில் சின்னக்கடை என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.
கவிஞருடன் & கவிஞர் கிண்ணியா அமீர் அலி
 இளநிலை கணணி விஞ்ஞானவியல் பட்டதாரியான இவர் அமைச்சின் தகவல் தொடர்பு மற்றும் வலையமைப்புப் பிரிவில் அபிவிருத்தி உதவியாளராக கடமையாற்றி வருகின்றார்.


கவிதை, சிறுகதை, கட்டுரை, திறனாய்வு போன்ற துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும்  இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள்  மற்றும் இணைய சஞ்சிகைகள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன. தனது வலைப்பூவிலும் தனது படைப்புக்களை படைத்துவருகின்றார்.கொழும்பு தமிழ்சங்கம், மன்னார் தமிழ்சங்கம், கொழும்பு திருமறை கலாமன்ற இலக்கிய பாசறை பொறுப்பாளராகவும் மன்னார் இலக்கியவட்டத்தின் தலைவராகவும்  இருக்கும் இவர்  வானொலி, தொலைக்காட்சி கவியரங்கங்களிலும் பங்குபற்றி தனது கவிதை ஆளுமையை வெளிப்படுத்தி  வருகின்றார். இவர் மன்னார் செம்மொழி மாநாட்டின் கவியரங்கில் பாடிய கவிதை இவரது ஆளுமையை அளவிட போதுமானது.


2009இல் வெளிவந்த இவரின் முதலாவது கவிதைத் தொகுதியான   
'விட்டு விடுதலை காண்'  வெளிப்படுத்திய அதிர்வு தணிவதற்குள்  அண்மையில் 'அக்குரோணி' என்ற பெயரில் மற்றுமொரு கவிதை நூலை இலக்கிய உலகுக்கு தந்திருக்கின்றார்.மரபில் புதுமையையும் புதுமையில் மரபையும் கலந்து கவிபாடும் இவரது கவித்துவத்தையும் தனித்துவத்தையும் இத்தொகுதியில்  தரிசிக்க  முடியும்.

தனது காத்திரமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும் கவிஞர் மன்னார் அமுதனின்   படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.!!


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக