சனி, 4 ஜூன், 2011

மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிதை பாடிய கவிஞர்களுக்கு முஸ்லிம் லீக் கௌரவம்ண்மையில் நடைபெற்ற மலேசிய உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் மிகச் சிறப்பாக கவிதைகள் சமர்ப்பித்த இலங்கை கவிஞர்களான என். நஜ்முல் ஹூஸைன் மற்றும் பொத்துவில் அஸ்மின் ஆகியோரை கௌரவித்து பாராட்டும் நிகழ்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 8, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சம்மேளனத்தின் தேசியத் தலைவர் சட்டத்தரணி ரஷீத். எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் நீதியமையச்சர்  ரவுப் ஹக்கீம், பிரதி அமைச்சர் பஷீர் சேகு தாவூத், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர், ஹஸன் அலி மற்றும் கல்விமான் எஸ். எச். எம் ஜெமீல், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகியோரும் மற்றும் பல  இலக்கியவாதிகளும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன
பொதுச் செயலாளர் எஸ். லுக்மான் தெரிவித்துள்ளார்.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 கருத்துகள்:

Shaifa Begum சொன்னது…

வாழ்த்துக்கள் கவிஞரே !! மேலும் மேலும் உங்கள் கவித்திறமை வளர,
உலகம் இன்னும் உங்களைஅடையாளம் காணும் முகமாக மிளிர வேண்டும்
அதற்கு இறைவனும் துணை புரிய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு..

ShaifaMaleek

பெயரில்லா சொன்னது…

நல் வாழ்த்துகள்.

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

அன்பின் அஸ்மின்,

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ் இளவயதில் பெரும் சாதனைகளைப் படைத்திருக்கும் நீங்கள் நிச்சயமாக கௌரவிக்கப்படத் தகுதியானவர்தான்.மாஷா அல்லாஹ்.

சாதனைகள் தொடரட்டும். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தொடரும்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

த.எலிசபெத்.‌ சொன்னது…

இலங்கையின் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுமை படைத்துக்கொண்டிருக்கும் இளம் படைப்பாளரான மரபுக்கவிஞர் அஸ்மின் அவர்களுக்கும் மாநாட்டை சிறப்பித்த அனைத்து கலைஞர்களுக்கும் என் இனிய நல் வாழ்த்துக்களை சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறேன்.

நன்றி!
த.எலிசபெத்.‌

கருத்துரையிடுக