சனி, 30 ஜூலை, 2011

'பனைமரக்காடு'

பேசாத கண்ணும் பேசுமே, காதல் டாட் காம், கோடம்பாக்கம் ஆகிய திரைப்படங்களை தயாரித்த AAA Movies International திரைப்பட நிறுவனத்தின் 'பனைமரக்காடு' திரைப்படத்திற்கான கதாநாயகனாக இந்தியாவைச் சேர்ந்த அம்ருத்தும் கதாநாயகியாக இலங்கையைச் சேர்ந்த அக்ஷராவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

 செவ்வேள் இன் தயாரிப்பில் இலங்கையின் பிரபல தமிழ் இயக்குனர் கேசவராஜா இன் இயக்கத்தில் 'பனைமரக்காடு' திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.


இத்திரைப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர் அஸ்மின், பாலகுமார், தாட்சாயினி, இயக்குனர் கேசவராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர்.பாடலை முகேஷ்,  மாணிக்கவிநாயகம், பாலாஜி, ஆனந்த், இன்னும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.இம்மாத இறுதியில் திரைப்படத்தின் பாடல் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட இருப்பதுடன் ஓகஸ்ட் மாதம் 'பனைமரக்காடு' திரைப்படத்தின் பாடல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றன.
கவிஞர் அஸ்மின்


இந்தியா, உலகெங்கும் அதே நாளில் பாடல்களை வெளியீடு செய்வதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருவதாக AAA Movies International திரைப்பட நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி துவாரகன் தெரிவித்தார்.இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

Shaifa Begum சொன்னது…

Heroin அழகாக இருக்கிறாங்க... உங்கள் பாடல்களும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்.. கேட்பதற்கும் ஆவலாக உள்ளோம்..

நன்றிகள்

shaifa begum

Shaifa Begum சொன்னது…

அழகாக இருக்கிறாங்க... உங்கள் பாடல்களும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்.. கேட்பதற்கும் ஆவலாக உள்ளோம்

Shaifa Begum

கருத்துரையிடுக