சனி, 27 ஆகஸ்ட், 2011

Today Audio Launch Of ''பனைமரக்காடு''

'' பனைமரக்காடு'' திரைப்படத்தின்  ஒலிநாடா வெளியீட்டு விழா இன்று.

'' பனைமரக்காடு'' திரைப்படத்தின்  ஒலிநாடா வெளியீட்டு விழா இன்று (27.8.11) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது.பாடலை ரசிகர்கள் மிக விரைவில் கேட்டு மகிழலாம்.


படம்:பனைமரக்காடு
இயக்குனர்:கேசவராஜன்
இசை:விமல் ராஜா
பாடலாசிரியர்: கவிஞர் அஸ்மின்
தயாரிப்பு:செவ்வேள்
பல்லவி

உயிரிலே உன்பார்வையால் பூ பூத்ததே
நெஞ்சிலே உன்வார்த்தைகள் தீ மூட்டுதே

அனுபல்லவி

மேகம் பூமழை பொழியுதே...- என்
யாகம் அதனாலே அழியுதே...
போகும் திசையாவும் மறையுதே - என்
தேகம் விழிநீரில் கரையுதே...

மனம் மாறுமோ...
ரணம் ஆறுமோ...
உன் மௌனம்தான் பதில் கூறுமோ.....


சரணம்-01

நெஞ்சில் ஆசையை பொத்திவைக்கிறாய்
நெருங்கி வருகிறேன் கத்திவைக்கிறாய்...
நெருஞ்சி முள்ளைப்போல் நெஞ்சில் தைக்கிறாய் நீ.......

நினைத்து நினைத்தெனை உருகவைக்கிறாய்
நிலவைப் போன்ற நீ கருகவைக்கிறாய்...
உணர்வில் கலந்து நீ உயிரில் வைக்கிறாய் தீ...

நான் காதல்பூக்கள் தருகிறேன்
நீ கல்லைதானே எறிகிறாய்
நான் அன்பை ஏந்தி வருகிறேன்
நீ அரிவாள் ஏந்தி வருகின்றாய்....


சரணம்-02

கண்கள் கொண்டு தீ மூட்டிவைக்கிறாய்
காதல் ஜன்னலை பூட்டிவைக்கிறாய்
வன்மம் இன்றியே வாழ்ந்து பார்க்கலாம் வா..

கனவில் வந்து நீ காதல் கொள்கிறாய்
நேரில் கண்டதும் விலகிச் செல்கிறாய்
தயக்க மேனடி உன்னை என்னிடம் தா..

உரிமை நானும் கேட்கிறேன்
என்னுயிரை நீயும் கேட்கிறாய்
நான் ஆசைகொண்டே பார்க்கிறேன்
என்னை எதிரிபோன்றே பார்க்கின்றாய்.....இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

PANITH THEE சொன்னது…

மனப்பூர்வமான வாழ்த்துகள். - என். நஜ்முல் ஹுசைன்

PANITH THEE சொன்னது…

மனப்பூர்வமான வாழ்த்துகள். - என். நஜ்முல் ஹுசைன்

கருத்துரையிடுக