வியாழன், 15 செப்டம்பர், 2011

''தலையில்லா முண்டங்கள்''‎மந்தையாய் வாழ்ந்த 
எந்தையர் வாழ்வில் 
விந்தைகள் புரிந்து 
சிந்தையை கவர்ந்த எங்கள்
சிந்தனை சிற்பி


கலாநிதி மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் நினைவு நாள் செப்டம்பர் 16அதனை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது. இக்கவிதை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் தேசிய மட்டத்தில் கவிஞர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் 3 இடம் பெற்றுள்ளது .இக்கவிதை அடங்கிய நூல் 'அடையாளம்' எனும் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

லையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே

தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

வானதி சந்ரா(விரிவுரையாளர்) சொன்னது…

எழுவான் எழுவானென
எழுந்திடாமல் இருந்துமென்ன
துன்பம் என்றும் துயரமென்றும்
தொழுது நிதம் துதித்துமென்ன
அவர்களுக்கென்றும் இவர்களுக்கென்றும்
ஏங்கித்தினம் இருந்துமென்ன
நாங்களும் நீங்களுமே
நாமென்று ஆகிவிட்டால்
எழுவான் திசையினில்
புதிதாய் எழுந்திடலாமே

வானதி சந்ரா(விரிவுரையாளர்)
யாழ்.பல்கலைக்கழகம்.

கருத்துரையிடுக