வெள்ளி, 8 நவம்பர், 2013

என்னுடைய பாம்புகள் குளிக்கும் நதி கவிதை நூலுக்கு வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் வழங்கிய சிறப்புரை




நதியை விழுங்கிய பாம்பு
 

சொட்டச் சொட்ட நனைக்கும் மழை...கிட்டக்கிட்ட நெருங்கும் காதலி... எட்டி நின்று பேசும் மௌனம்...யாவுமே அழகு கவிதைக்கான தருணம் வாய்க்கும் பொழுது! வாழ்வியலின் ஒவ்வொரு நொடியையும் கவிதையே அழகானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது.

கவிதை குறித்து பேசுவதும் கவிதை குறித்து யோசிப்பதும் கவிதையே போலவே மிடுக்காகிறது.

அந்தவகையில் இலங்கை நண்பர் கவிஞர் அஸ்மின் அவர்களின் 'பாம்புகள் குளிக்கும் நதி' எனும் இக்கவிதை தொகுப்பு உணர்வுகளின் உயிரோட்டமாய் மிளிர்கிறது.

'கூட இருந்தே
குழிப்பறிப்போம்
கும்பிட்ட கைகளால்
குண்டுவைப்போம்

கதைத்து பேசியே
கழுத்தறுப்போம்
அடுத்தவன் வளர்ச்சிக்கு
ஆப்படிப்போம்'


என்று மனித நேயமற்ற சமூகத்தை கண்ணீர் வரிகளால் கண்கலங்க சொல்கிறார்.
மேலும் கவிதை குறித்த அவர் பார்வையும் வீரம் குறித்த பார்வையும் வேறொரு இடத்தில் பதிகிறார்.

''உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை
உசுப்பும் கவிதை வாளாகும்
வீரம்மறந்து வீழ்ந்த கிடந்தால்
விடியல் தோன்ற நாளாகும்''


என்று விடியலுக்கு சூரிய எழுச்சி பாடல் பாடுகிறார்.

உண்மையில் யதார்த்த உணர்வுகளை கவிதையில் பதிவதென்பது யாவருக்கும் எளிதில் அமையவதில்லை. ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் மாறி வாசிப்பவனை சொற்கட்டுக்குள் சிக்க வைக்காமல் வாழ்வியலின் வலியையும் சௌந்தர்யத்தையும் சொல்லி சொக்கவைப்பதென்பது கவிதையின் நுண்ணியல் வித்தை. அவ்வித்தை இலங்கை கவிஞர் அஸ்மின் அவர்களுக்கு எளிதில் கைவர பெற்றிருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.எழுதிக்கொண்டே இருங்கள். எழுத்து வானில் விடிவெள்ளியாகும் உங்கள் எழுத்துக்கள்.

வாழ்த்துகளுடன்
வித்தக கவிஞர். பா.விஜய்
11.3.2013
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

நூலின் பெருமையை, சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்
அருமை!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லது

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
கவிதை நூலுக்கான சிறப்புரை மிக அருமையக உள்ளது மேலும் பல நூல்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக