திங்கள், 16 ஜனவரி, 2012

''எந்தன் காதலி'' இது புதிய ஆண்டின் புத்தம் புதிய பாடல்''எந்தன் காதலி'' இது புதிய ஆண்டின் புத்தம் புதிய பாடல். இசையமைப்பாளர் வேரணண் அவர்களின் இசையில் நான் எழுதியுள்ள இந்த பாடலை லண்டனை சேர்ந்த பாடகர் ஆனந் பாடலை பாடியுள்ளார்.அழகான காட்சியமைப்புக்களுடன் பாடல் வெளிவந்துள்ளது.

இந்த பாடல் உருவான விதம் சுவாரசியமானது.எனது முகநூலில் நான் தினம் தினம் கவிதை மாதிரிகளையும் என்னுடைய பாடல் வரிகளையும் விதைப்பது வழக்கம்.அதை கண்ணுற்ற ஆனந் மற்றும் வேரணன் ஆகியோருக்கு வரிகள் பிடித்துப்போக என்னை ஆச்சரியப்படுத்தும் ஆர்வத்தில் பாடலுக்கு இசையமைத்து பாடி புத்தாண்டு பரிசாக எனக்கு அனுப்பிவைத்தார்கள்.

ஒரு சில வரிகள் நான் முன்பு எழுதியுள்ள பாடலில் இடம்பெற்றுள்ளன.அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.இருந்தும் இசை அதற்கு வித்தியாசமாக ஆடைகட்டி அழகு பார்த்திருக்கிறது....Singer: Ananth VS (UK)
Lyrics: Kavignar Asmin (Sri-Lanka)
Music: Vernon G Segaram (UK)
Video Editing: Ragenthan K (UK)
Starring - RaguJan - RJ
Cinematography | Edit | Direction - Cinematic Production.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

Surya சொன்னது…

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in

கருத்துரையிடுக