சனி, 21 ஏப்ரல், 2012

இலண்டன் தமிழ் வானொலிக்கு கவிஞர் அஸ்மின் வழங்கிய நேர்காணல்

லண்டன் தமிழ் வானொலிக்கு கவிஞர் அஸ்மின்
வழங்கிய நேர்காணல். (30.02.2012)
நேர்கண்டவர்:ஷைபா மலீக்



வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும்,திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார். விடை தேடும் வினாக்கள்(2002) விடியலின் ராகங்கள்(2003)ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியரான இவர் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூலை மிக விரைவில் வெளியிட இருக்கின்றார்.

சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்' போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர்,தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003) பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) ,அகஸ்தியர் விருது (2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரது இலக்கிய பணியை பாராட்டி 'தடாகம்' கலை இலக்கிய அமைப்பு ''கலைத்தீபம்'' என்ற பட்டத்தினையும் 'லக்ஸ்டோ' ஊடக அமைப்பு ''கலைமுத்து'' என்ற பட்டத்தினையும் அண்மையில் வழங்கி கௌரவித்துள்ளன.
சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்.
'செந்தூரம்' என்ற பத்திரிகை இணைப்பிதழும் 'கவிஞன்' என்ற சஞ்சிகையும் இவருடைய ஒளிப்படத்தை அட்டைப் படத்தில் இட்டுச் சிறப்பித்துள்ளன.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

shamilasheriff சொன்னது…

நேர்காணலை செவிமடுத்தேன் .வாழ்த்துக்கள் அஸ்மின் .இன்னும் உங்கள் இலக்கியப்பயணம் தொடர வேண்டும்

simproduction சொன்னது…

தங்கள் தளத்தினை முழுமையாக பார்த்து முடித்தேன். அனைத்து நிகழ்வுகளையும் பண்ணி இருப்பது மிகவும் முக்கியமான விசயம் எல்லோரையும் போல இல்லாது நீங்கள் இல்லாதிருப்பது பிரம்மிக்க வைக்கிறது. அஸ்மின் உங்கள் பணி தொடரட்டும்

கருத்துரையிடுக