வியாழன், 14 மார்ச், 2013

முட்டைக்குள் தூங்கும் கழுதைகள்



சிறுக்கர்கள் உன்முகத்தில்
சிறுநீரை கழிக்கின்றார்...
சிரித்தபடி நீநாளும்
சிறப்பாக கண்ணுறங்கு...

அரசின் பால்குடித்து
ஆவென்று வாய்பிளந்து
முட்டைக்குள் ஒழித்தபடி
முழுநாளும் கண்ணுறங்கு....

காகிதமாய் உனை மாற்றி
கால்களின் கீழ் போடுகிறார்
கவட்டுக்குள் கைவைத்து
ஹாயாக கண்ணுறங்கு...

யார் அழிந்தால் உனக்கென்ன..?
யார் அழுதால் உனக்கென்ன...?
ஊரழிந்து போனாலும்
ஊமையாய் நீ உறங்கு..

எலும்புக்கும் தோலுக்கும்
ஏற்றபடி வாலாட்டி
அரசென்னும் தொட்டிலிலே
அழகாக கண்ணுறங்கு...
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... உண்மை...

/// இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ///

முடிவில் உள்ள இதை நீக்கி விடலாமே...

நன்றி...

jgmlanka சொன்னது…

அருமையான தாலாட்டு.. பலருக்கும் சாட்டயடி..
பகிர்வுக்கு நன்றி..

மட்டுவில் ஞானக்குமாரன் சொன்னது…

manachukku pidichirukku
nadpudan madduvil gnanakumaran

மட்டுவில் ஞானக்குமாரன் சொன்னது…

manasukku pidichirukku
nadpudan madduvil gnanakumaran

NSK சொன்னது…

ஆயுதத்தால் தான் எதிர்ப்பை காட்டணும்னு அவசியம் இல்லை அழகான கவிதையாலும் மிக வன்மையாக காட்டமுடியும்னு உணர்த்துது உங்க கவிதை.

"சிறுக்கர்கள்"....? விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும்

நான் கிறுக்கர்கள் என்று படித்தேன்..

kowsy சொன்னது…

சமுக அக்கறை கொண்ட எழுத்தாளர்களுக்கு இருக்கும் உண்மைத் துடிப்பு இக்கவிதையில் கலந்திருக்கின்றது

கருத்துரையிடுக