வியாழன், 6 மே, 2010

காதலித்தவர்கள் சொல்கிறார்கள்..!

காதல் என்ற மூன்றெழுத்தில்தான்
உலகம் என்ற நான்கெழுத்து
உருள்கிறது...
வாழ்க்கை என்ற நான்கெழுத்து
வாழ்கிறது.

காதலிக்காத மனிதர்களுமில்லை
காதலிக்காதவர்கள்
மனிதர்களுமில்லை...

பூமிப்பந்தை
புரட்டும் சக்தி
கவிதைக்கில்லை
காதலுக்குத்தான்
இருக்கிறது.

'விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில்கலக்கும்'
அந்த ஒற்றை வார்த்தை
விழிகள் இழந்தவனை
பார்க்கவைக்கிறது....
மொழிகள் இழந்தiனை
பேசவைக்கிறது....
வழிகள் தொலைத்தவனை
வாழவைக்கிறது..

வாழவைப்பதும்
காதல்
ஆளவைப்பதும்
காதல்
அன்பை
சூழவைப்பதும்
காதல்
துயரை
வீழவைப்பதும் காதல்..

காதல் செய்வது
சரியா தவறா என யோசிக்கும் முன்னே
நேசிக்கவைக்கும்
காதல்
கவிதைபோல் வாசிக்கவைக்கிறது...

காதலுக்கு அத்தனை சக்தியா என்று
நீங்கள் கேட்கலாம்..?

மிருகத்தை மனிதனாய் மாற்றுவதற்கும்
மனிதனை
மிருகமாய் மாற்றுவதற்கும்
காதலால்தான்
முடிகிறது என்று
காதலித்தவர்கள் சொல்கிறார்கள்.....

நன்றி.
*தித்திக்குதே -வசந்தம் தொலைக்காட்சி
*மண்வாசனை- டான் தமிழ் ஒளி
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

கருத்துரையிடுக