சனி, 30 ஜூலை, 2011

'பனைமரக்காடு'

பேசாத கண்ணும் பேசுமே, காதல் டாட் காம், கோடம்பாக்கம் ஆகிய திரைப்படங்களை தயாரித்த AAA Movies International திரைப்பட நிறுவனத்தின் 'பனைமரக்காடு' திரைப்படத்திற்கான கதாநாயகனாக இந்தியாவைச் சேர்ந்த அம்ருத்தும் கதாநாயகியாக இலங்கையைச் சேர்ந்த அக்ஷராவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

 செவ்வேள் இன் தயாரிப்பில் இலங்கையின் பிரபல தமிழ் இயக்குனர் கேசவராஜா இன் இயக்கத்தில் 'பனைமரக்காடு' திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.


இத்திரைப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர் அஸ்மின், பாலகுமார், தாட்சாயினி, இயக்குனர் கேசவராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர்.பாடலை முகேஷ்,  மாணிக்கவிநாயகம், பாலாஜி, ஆனந்த், இன்னும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.இம்மாத இறுதியில் திரைப்படத்தின் பாடல் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட இருப்பதுடன் ஓகஸ்ட் மாதம் 'பனைமரக்காடு' திரைப்படத்தின் பாடல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றன.
கவிஞர் அஸ்மின்


இந்தியா, உலகெங்கும் அதே நாளில் பாடல்களை வெளியீடு செய்வதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருவதாக AAA Movies International திரைப்பட நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி துவாரகன் தெரிவித்தார்.







வெள்ளி, 1 ஜூலை, 2011

'அகஸ்தியர்' விருது - 2011

தடாகம்' கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.
இடமிருந்து வலமாக:கவிஞர் யாழ் அஸீம், கவிஞர் மன்னார் அமுதன்,'கலைமகள்' ஹிதாயா ரிஸ்வி, மருதூர் அன்சார், கே.எம்.ஏ.அப்துல் றஸாக் (கி.மா. உ), ஏ.எம். ஜெமீல்(கி.மா. உ) 'தமிழ் தென்றல்' அலி அக்பர்,கவிஞர் நஜ்முல் ஹுஸைன்,கவிஞர் பொத்துவில் அஸ்மின், கவிஞர் கிண்ணியா அமீரலி

லங்கை 'தடாகம்' கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய துறையில்  சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை  கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால்  கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.எழுத்தாளர் 'கலைமகள்' ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.அப்துல் றஸாக், ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் 'அகஸ்தியர்'  விருதுதினையும், 'கலைத்தீபம்' பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட   கவிஞர் யாழ் அஸீம், கவிஞர் மன்னார் அமுதன்,மருதூர் அன்சார், 'தமிழ் தென்றல்' அலி அக்பர், கவிஞர் நஜ்முல் ஹுஸைன்,கவிஞர் பொத்துவில் அஸ்மின், கவிஞர் கிண்ணியா அமீரலி ஆகியோரை படத்தில் காணலாம்.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 10.7.11
கவிஞர் பொத்துவில் அஸ்மின்


நன்றி: 
  • வீரகேசரி வாரவெளியீடு (10.7.11)
  • விடிவெள்ளி  (07.7.11)
  • நேசம் நெட்
  • இலங்கை நெட்
  • திண்ணை
  • தமிழ் ஆதர்ஸ்