சனி, 8 அக்டோபர், 2011

குயில்கள் இப்போது குரைக்கின்றன..



வியம் வரையும் தூரிகை கொண்டு 
ஓட்டடை அடிக்கின்றாய்...
காவியம் பாடும் கைகளை கொண்டு

கற்களை உடைக்கின்றாய்....



சாதனை படைக்கும் சக்தி இருந்தும்

சாக்கடை அள்ளுகின்றாய்...

சரித்திரம் படைக்க பிறந்தவன் நீயோ

சப்பாத்து துடைக்கின்றாய்....



சவுக்கால் உன்னை அடிப்போருக்கு

சாமரை வீசுகின்றாய்..

சருகாய் உன்னை ஆக்கியோருக்கு

சந்தனம் பூசுகின்றாய்...



பசியை உனக்கு தருவோருக்கு

சோறு சமைக்கின்றாய்....

நஞ்சை உனக்கு தந்தோரிடமும்

நலமா என்கின்றாய்..



கடலைப் உனக்குள் வைத்துக் கொண்டு

பிச்சை கேட்கின்றாய்...

ஆயிரம் சூரியன்  அருகில் இருந்தும்

இருட்டில் இருக்கின்றாய்....



நாட்டை சுமக்கும் தோள்கள் உனது

மூட்டை சுமக்கின்றாய்...

மூட்டை சுமந்தும்  பசியால் ஏனோ

முடங்கிப் போகின்றாய்... ?



உறவுகள் ஆயிரம் இருந்தும் ஈற்றில்

உணவுக்கலைகின்றாய்..

தேகம்தேய உழைத்துமென்ன

தெருவில் நிற்கின்றாய்...



தென்றல் கூட புயலாய் மாறும்

தெரிந்து கொள்ளப்பா...

துவண்டு கிடந்து அழிதல் விட்டு

துணிந்து நில்லப்பா



மரணம் என்ற நோயை கொல்ல

மருந்து இல்லப்பா..!

வாழும் வரைக்கும் உனக்காய் வாழ்வை

வாழ்ந்து பாரப்பா



தண்ணீர்கூட கோபம் வந்தால்

தட்டிக் கேட்கும்பா..

வெட்கம் கெட்ட உந்தன் நெஞ்சை

வெட்டிப் போடப்பா..



பாசம் நேசம் பந்தம் எல்லாம்

பழைய பொய்யப்பா

வேசம்போடும் மனிதர் கூட்டம்

விளங்கிக்கொள்ளப்பா



உந்தன் கையில் காசு இருந்தால்

ஊரும் மதிக்கும்பா...

சுவாசம் கூட  தேவையென்றால்

சும்மா கிடைக்கும்பா...



தண்ணீர் தோட்டம் வைத்துக்கொண்டு

தாகம் குடிக்காதே....

கண்ணீர் சிந்தி கலங்கி நின்றால்

கவிதை பிறக்காதே...



குயிலை உனக்குள் வைத்துக்கொண்டு

குரைத்துத் திரியாதே...

குட்டுப்பட்டு குட்டுபட்டே

குன்றிப்போகாதே..



காக்கைகூட நல்லவை சொன்னால்

காது கொடுத்து கேள்...

அகந்தை கொண்டு கேட்க மறுத்தால்

அதுவே உனக்கு வாள்..



நன்றி கெட்ட மனிதனை பார்க்கிலும்

நாய்கள் என்றும் மேல்...

என்பதை உணர்ந்து வாழ்வாயாயின்
வானம் உனக்கு கீழ்...!


நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்  09.10.11

*சாத்தான் குளம் அப்துல் ஜப்பார்( www.worldtamilnews.com)(12.10.10)
*ஞாயிறு வீரகேசரி (30.10.11)

*எங்கள் தேசம் (01.11.11) 
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

19 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்....

கவிதை
கவிதை நடை
கவிதை கரு
என அத்தனையிலும் கவிதை உயிர் பெருகிறது...

கவிஞர் அஸ்மின் சொன்னது…

@கவிதை வீதி... // சௌந்தர் //

நன்றி கவிஞரே உங்கள் கருத்துக்கு தொடர்ந்து வாருங்கள் நேசக்கை தாருங்கள்

ம.தி.சுதா சொன்னது…

/////சவுக்கால் உன்னை அடிப்போருக்கு
சாமரை வீசுகின்றாய்..
சருகாய் உன்னை ஆக்கியோருக்கு
சந்தனம் பூசுகின்றாய்/////

இந்த வார்த்தைகளே எத்தனை சவுக்கடிக்கு சமன் சகோதரா... சுருக்கென்று உறைக்கும் வரிகள்..

umavaishnavi சொன்னது…

mega karuthugal vainthavai

Shaifa Begum சொன்னது…

மிகச் சிறப்பபாக இருக்கிறது.. ஆனால் சில இடங்களில் எனக்கு தெளிவு பெற முடியாமல் இருக்கிறது. ( அது என் பக்க பிழையாக இருக்கலாம்)

வாழ்த்துக்கள்..........

கவிஞர் அஸ்மின் சொன்னது…

**♔ம.தி.சுதா♔
**umavaishnavi
**Shaifa Begum
நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து வாருங்கள் நேசக்கை தாருங்கள்

imam சொன்னது…

very very nice your poem.
wish u all the best

Unknown சொன்னது…

very very nice ..........
wish u all the best

கவிஞர் அஸ்மின் சொன்னது…

**imam
**mohamed yaseem imamdeen முஹம்மது யாசீம் இமாம்தீன்

நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து வாருங்கள் நேசக்கை தாருங்கள்

எஸ்.மதி சொன்னது…

சாதனை படைக்கும் சக்தி இருந்தும்
சாக்கடை அள்ளுகின்றாய்...
சரித்திரம் படைக்க பிறந்தவன் நீயோ
சப்பாத்து துடைக்கின்றாய்....

உங்கள் கவிதைக்கு முதல் ரசிகை எப்போதும் நான் தான் கவிஞரே....

சிந்தையின் சிதறல்கள் சொன்னது…

அருமையான கவிதை கவிஞரே அத்தனை வரிகளையும் ரசித்துப்படித்தேன் உள்ளுக்குள் ஓர் உணர்வு பிறக்கிறது அபாரமான கவிதை நன்றிகள் வாழ்த்துகள்

Kalaimahan சொன்னது…

சாக்கடைசெயும் சனங்களிங்கு மிகவுமிருக்கின்றார்
சரித்திரம் படைப்பவனை யறுத்திட குறியாயிருக்கின்றார்
போக்கிரியா யுனைப் பார்த்திடத்தான் துடிக்கின்றார்
பொழுதுபுலர்ந்ததும் உனைநீயே அலசிப்பார்!

ஞமலிகள் வரையினை யுரத்தே குறைப்பதுகாண்
ஞாலம் உனக்கென திடங்கொண்டு எழுந்திடப்பார்
கோமாளிநானா எனஉனைக் கேட்டுப்பார்
காசினியுன்னில் ஆசைவைக்கும் எழுந்திடப்பார்!

சீராய்க்கவிசொலி சனத்தை நிமிர்த்தும்
சீர்கவி யஸ்மின்நீ வாழி யுந்தன்
தேமதுரத் தமிழ்வாழி - என்றும்உன்கவி
பாரில்மேலெழும் என்றமி ழென்றும்வாழி!!

கவிஞர் அஸ்மின் சொன்னது…

@Mathi
@கலைமகன் பைரூஸ்
நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து வாருங்கள் நேசக்கை தாருங்கள்

பி.அமல்ராஜ் சொன்னது…

மிக அருமையான கவிதை அண்ணா.. கவிதை ஓட்டம் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை அதே அழகு. சந்தம் எழுப்பம்.. வாழ்த்துக்கள் அஸ்மின் அண்ணா.

கவிஞர் அஸ்மின் சொன்னது…

நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து வாருங்கள் நேசக்கை தாருங்கள்

Niranjan Parasuraman சொன்னது…

Machan...tamilil vahalthu solladathitku mannikkavum ok.
சாதனை படைக்கும் சக்தி இருந்தும்
சாக்கடை அள்ளுகின்றாய்...
சரித்திரம் படைக்க பிறந்தவன் நீயோ
சப்பாத்து துடைக்கின்றாய்....Super da....

F.NIHAZA சொன்னது…

கவிதை அருமை....
நெஞ்சுக்கு உரமூட்டும் வரிகள்....
உணர்வுகளை உயிர்பெறச்செய்யும் வரிகள் சகோ

Unknown சொன்னது…

என்ன சொல்வது
ஒரு ஒரு வரியும்
அருமை
எந்த பத்தி படிக்க எந்த பத்தி விட
மிக்க சந்தோசம்
அழகான தமிழ் கண்டு
வாழ்க வளமுடன்

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

தென்றல் கூட புயலாய் மாறும்
தெரிந்து கொள்ளப்பா...
துவண்டு கிடந்து அழிதல் விட்டு
துணிந்து நில்லப்பா..

அனைத்து வரிகளும் அருமை நல்லதொரு தன்னம்பிக்கை கவிதை

கருத்துரையிடுக