திங்கள், 19 டிசம்பர், 2011

'பனைமரக்காடு' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் அஸ்மினின் பாடல்.

 
 படம்:பனைமரக்காடு
இயக்குனர்:கேசவராஜன்
இசை:விமல் ராஜா
பாடலாசிரியர்: கவிஞர் அஸ்மின்
பாடகர்: ஆனந்
தயாரிப்பு:செவ்வேள்
நடிப்பு:அக்ஷரா & ஜெகதீஸ்

ழத்தில் தமிழ் திரைப்படம் சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது 'பனைமரக்காடு' முழுநீள தமிழ் திரைப்படம் .இப்படத்தை இயக்குனர் கேசவராஜ் இயக்கியிருக்கின்றார்.இத்திரைப்படத்தில் தென்னிந்திய கலைஞர்களோடு ஈழத்து கலைஞர்களும் நடித்துள்ளனர்.
முற்று முழுதாக யாழ்மண்ணில் படப்பிடிப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளன.இத்திரைப்படத்தில் ஜெகதீஸ் கதாநாயகனாகவும் கதாநாயகியாக அக்சராவும் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாடல்களை முகேஷ் மாணிக்கவிநாயகம் பாலாஜி ஆனந்த் இன்னும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அருமையான பாடலை உங்களுக்கு நாம் தருகின்றோம். இசையமைப்பாளர் விமல் ராஜாவின் இசையில் கவிஞர் பொத்துவில்அஸ்மின் எழுதியுள்ள இந்த பாடலை ஆனந் பாடியுள்ளார்.


நன்றி
*மனிதன்
*யாழ் மின்னல்
*யாழ் ஓசைஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

கவிஞர். வதிலைபிரபா சொன்னது…

**கூட்டுக்குள் முடங்காத திரைப்படப் பாடல்.**

அன்புடையீர்,
வணக்கம். நலம்தானே!
தாங்கள் அனுப்பித் தந்த 'பனைமரக்காடு' திரைப்படப் பாடலினை கேட்டு மகிழ்ந்தேன்.
அருமையான இசையில் - வசீகரிக்கும் குரலில் - தங்களின் வரிகள் ஒவ்வொன்றும் இதயம் தழுவிச் சென்றன.
உயிரிலே உன் பார்வையால் பூ பூத்ததே..
நெஞ்சினிலே உன் வார்த்தைகள் தீ மூட்டுதே..
பாடல் மீண்டும் மீண்டும் என்னை அசைபோட வைத்தது.
.....
மனம் மாறுமோ
ரணம் மாறுமோ
உன் மௌனம்தான் பதில் கூறுமோ..
கூட்டுக்குள் முடங்காத திரைப்படப் பாடல்களைக் கேட்பது அரிதுதானே?
பறந்து விரிந்த திரைவானில் தங்களின் என்னச் சிறகுகள் வானமெங்கும் சுதந்திரமாய் வலம் வருகின்றன.
அற்புதமான வார்த்தைகளால் அலங்கரிக்கிறீர்கள்.
பாராட்டும் - வாழ்த்தும்..
--
வாசமுடன்
கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்
AyyamPerumal Illam,
17-16-5A, K.K. Nagar,
BATLAGUNDU - 624 202.
Dindigul District,
TAMILNADU,
INDIA.

கருத்துரையிடுக