ஞாயிறு, 4 டிசம்பர், 2011

இலங்கையின் இசைத்துறைக்கு புத்துயிர் கொடுத்த இரண்டு கலைஞர்கள்.


இலங்கையின் தமிழ் இசைத்துறையில் அண்மைக் காலமாக ஆரோக்கியமான பல மாற்றங்கள் சத்தமில்லாது நடந்தேறி வருகின்றன.ஒரு காலத்தில் சிங்கள திரைப்படங்களுக்கு கூட இலங்கை தமிழ் இசையமைப்பாளர்கள் இசையமைத்திருத்தார்கள்.

 'சின்ன மாமியே', 'சுராங்கனி', 'அழகான இருசோடி கண்கள்', 'கள்ளுக்கடை பக்கம் போகாதே' போன்ற பல பாடல்கள் சர்வதேசமெங்கும் புகழ் தேடி கொடுத்த இலங்கை கலைஞர்களின் பாடல்களாக இருந்து வந்தன. அதையே நாங்களும் திரும்ப திரும்ப சொல்லி சொல்லி பெருமிதப்பட்டு கொண்டிருந்தோம். 

அதன் பிறகு வந்த படைப்புக்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை அதற்குக் காரணம் எம்மவர்களின் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்ட தென்னிந்திய சினிமா பாடல்களாகும். அதனோடு போட்டி போட முடியாது எம்மவர்கள் படைப்புக்கள் மூலையில் நின்று அழுத கொண்டிருந்தன.எமது ஊடகங்களும் எம்மவர் படைப்புக்களை கண்டு கொள்ளாது இருந்தனர்.

இது இவ்வாறு இருக்க அண்மையில் வெளிவந்த இலங்கை கலைஞர்களின் 'காந்தள் பூக்கும் தீவிலே' பாடல் இலங்கையின் இசைத்துறையில் மட்டுமன்றி தமிழ்பேசும் உலகெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பதற்கு, பாடல் எழுதுவதற்கான வாய்ப்பினை எமது கலைஞர்கள் பெற்றுக் கொண்டனர்.


 
    kaanthalpookkum (காந்தள் பூக்கும் )
இந்த மாற்றத்தை கொண்டு வந்த கலைஞர்கள் வவுனியாவை சேர்ந்த கந்தப்பு ஜெயந்தன் அவரோடு இணைந்து கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்கள்.இவர்கள் இருவரது கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்த 'எங்கோ பிறந்தவளே' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரபேற்பை பெற்றிருந்தது.அதனை தொடர்ந்து வெளிவந்த 'காந்தள் பூக்கம் தீவிலே' பாடல் வெளியாகி ஒரு வாரத்துக்குள் 60,000க்கும் மேலான ரசிகர்கள் youtube இணையத்தளத்தில் கண்டுகளித்துள்ளனர்.

இலங்கையில் வெளிவந்த ஒரு பாடல் அதிகளவிலான ரசிகர்களை கொள்ளை கொண்டது இதுவே முதல் முறையாகும்.இது இலங்கையின் தமிழ் இசைத்துறையை பொறுத்தவரையில் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. 'காந்தள் பூக்கம் தீவிலே' பாடல்  ஐரோப்பா, மலேசியா, கனடா வானொலிகள், இணையத்தள வானொலிகள், சில உள்ளுர் வானொலிகளிலும் ஒலிபரப்பாகி  வருகின்றது.

இந்தப்பாடலின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கந்தப்பு ஜெயந்தனின் நேர்காணல் இப்போது வெளியாகியுள்ளது.

                                     
                                     இசையமைப்பாளர் ஜெயந்தனின் நேர்காணல்


நன்றி:
செய்தி.
மனிதன்
யாழ் ஓசை
யாழ்மின்னல்
பொத்துவில் புதல்வன்

நேசம் நெட்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

Mathi சொன்னது…

உங்கள் பயனம் தொடரட்டும்... வாழ்த்துகள்

கருத்துரையிடுக