வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

படைப்பாளிகள் அறிமுகம் - 03 - கவிஞர் நவாஸ் சௌபி

கவிஞர் நவாஸ் சௌபி.
லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் நவாஸ் சௌபி தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணில் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்குகின்ற இறக்காமம் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

ஆரம்பக் கல்வியை இறக்காமம் அல்-அஸ்ரப் மகாவித்தியாலயத்திலும் பின் உயர்தரம் வரை நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையிலும் கற்ற இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகமாணி பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது சாய்ந்தமருது மழ்ஹறூஸ் ஸம்ஸ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிகின்றார்.



1993ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் ''சிறுவர் உலகம்'' பகுதியில் வெளிவந்த கட்டுரையின் மூலம் தனது எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைககள்,சஞ்சிகைகளில் களம் கண்டுள்ளன.



கவிதை,சிறுகதை,கட்டுரை,விமர்சனம்,பத்தியெழுத்து போன்றவற்றில் தனது ஆற்றலை வெளிப்படுத்திவரும் இவர் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய ''ஊதுபத்தி'' பத்தி எழுத்தும்,விடிவெள்ளி பத்திரிகையில் எழுதிய 'ஆலாத்தி' பத்தி எழுத்தும்  தமிழ் இலக்கியத்திலும், முஸ்லிம் தேச இலக்கியத்திலும்  இவருக்குள்ள  அகன்ற பார்வையை எடுத்துக்காட்டின.

''நியதி'',''நல்லுறவு'' ஆகிய பத்திரிகைககளின் பிரதம ஆசிரியராக பணிபுரிந்துள்ள இவரின் முதல் கவிதை நூல் ''மண்ணில் வேரானாய்'' 2001ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பின 'முள்ளில் எறியாதே', 'போராயுதமும் கவிதையிடம் சரணடைதலும்'' கவிதைநூல்களை 2003ம் ஆண்டு  வெளியிட்டுள்ளார். இவரது ''எனது நிலத்தின் பயங்கரம்''' கவிதை நூல் இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது.மிக விரைவில் முஸ்லிம்களின் சமூக அடையாளமாக 'முஸ்லிம் தேச இலக்கியம்' என்ற நூலை வெளியிட இருக்கின்றார்.

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும் கவிஞர் நவாஸ் சௌபியின்  படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக