புதன், 23 மார்ச், 2011

உலகக்கோப்பையை வென்ற 'சுனாமி'...!

 ஆடும்மனிதன் ஆட்டம்காண அலைகளொன்றாய் கூடின!
ஆசைதீர பூமிப்பந்தை அடித்துவிளை யாடின!
ஆடுமாடு கோழிபூனை அழுதுகண்ணை மூடின!
ஆறுகுளங்கள் நதிகள்சேர்ந்து ஊழிப்பாடல் பாடின!

மேடுபள்ளம் பாய்ந்தவெள்ளம் மேலெழுந்து சென்றன!
மேகக்கூட்டம் வானைப்பார்த்து பாவம்பூமி என்றன!
பாடுபட்டு சேர்த்தவற்றை பகிர்ந்து அலைகள் தின்றன!
படையைகண்ட தமிழர்போல பயந்துயாவும் நின்றன!

வீடுகாணி 'கார்'கள்கூட கால்முளைத்து நடந்தன!
வியக்குமளவு கப்பல்
கள்கூட வீட்டின்மேலே கிடந்தன!
வாடும்மனிதன் வாட்டம்கண்டு வானம்பூமி அழுதன!
வாழவேண்டும் உயிர்களென்று வையம்யாவும் தொழுதன!

சூடுபட்டபாலை மீண்டும் சுனாமிப்பூனை
கள் நக்கின!
'சூச்சூ..'என்று விரட்டிப்பார்த்தும் கழிவையெங்கும் கக்கின!
கேடுகெட்ட மனிதவாழ்க்கை கிடந்து அதற்குள் சிக்கின!
கேள்விகேட்ட அறிவும்கூட தோல்வியுற்று முக்கின!

உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு உயிர்கள்யாவும்  கெஞ்சின!
'உலகக்கோப்பை வென்றார்போலே அலைகள்கூடிக் கொஞ்சின!
அகிலமின்றே அழியுமென்று இருக்கும்நிலங்கள் அஞ்சின!
அலைகள்தின்று போட்ட மிச்சம் இமயமலையை விஞ்சின.

காடுகழனி யெங்கும்வெள்ளம் கரைபுரண்டு ஓடின!
கடவுளில்லை என்றவாயும் கடவுள்நாமம் கூறின!
காடுகரை யெங்கும்பிணங்கள் அழுகிப்புழுத்து நாறின.
நாடுஎட்டாம் நரகம்போன்று இமைக்கும்பொழுதில் மாறின!




நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்    

*விடிவெள்ளி (ஆறாவது விரல்) 24.3.11
*இருக்கிறம் (04.04.11)
 *சிகரம் (துபாய் ) 15.04.2011




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

21 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

உணர்வோடு பகிர்ந்திருக்கிறிர்கள் நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

Sivagnanam சொன்னது…

VERY NICE .

alex paranthaman சொன்னது…

அருமையான கவிதை

shiafamaleek சொன்னது…

Excellent !!! manathai urukkum varigal..meendum meendum vaasikka thoondum kaviyin nayam !
UYIRAI KAIYIL PIDITHU KONDU UYIRGAL YAAVUM KENJINA! KADAVUL ILLAI ENDRA NAAVUM KADAVUL NAAMAM KOORINA!(yosikka vaitha varigal )
Vaazhga! Valarga !um ezhuthu valam !

லதா சொன்னது…

கவிஞர் அஸ்மின் உங்கள் கவிதை பிரமாதம்.உயர்ந்த உங்கள் கற்பனைகண்டு வியந்து போனேன்.

லதா

sithi samira சித்தி சமீரா சொன்னது…

உணர்வோடு ஒன்றி எழுதியது மிகவும் அருமை ...வாழ்த்துக்கள்

கவிஞர் அஸ்மின் சொன்னது…

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அன்புக்குரிய
*ம.தி.சுதா.
*சிவஞானம்
*கவிஞர் மன்னார் அமுதன்
*லதா
*கவிதாயினி சித்தி சமீரா பேகம்(மலேசியா)

ஆகியோருக்கு இதயம்கனிந்த நன்றிகள்.
மீண்டும் வருவீர்
ஆதரவு தருவீர்.

PANITH THEE சொன்னது…

Superb

கவிஞர் அஸ்மின் சொன்னது…

என்னுடைய படைப்புக்களை பார்வையிட்டு கருத்தினை பகிர்ந்த கவிஞர் என். நஜ்முல் ஹுசைன் அவர்களுக்கு நன்றிகள்.

பி. அமல்ராஜ் சொன்னது…

உணர்வுகளை சொடுக்கி இழுக்கிறது அண்ணா. அருமையான கவிதை.

அன்புடன் அமல்ராஜ்

கார்த்திகேயன் சொன்னது…

அழகான தொனி,அருமையான கவிதை,என்னை கலங்க வைத்த நிகழ்வு.எல்லா வரிகளும் உயிர்ப்போடு இருந்தது.இருந்தும்...படையைகண்ட தமிழர்போல பயந்துயாவும் நின்றன!...இந்த வரியை படிக்கும் போது நான் என்னை ஜடமாய் உணர்கிறேன்.தமிழர்களின் மறம் மாண்டு போனதா!?,பகைவனை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்திக்காட்டினானே உன் பாட்டன்,தூக்குமேடையா,துப்பாக்கியா,பயமில்லை என முத்தமிட்டு தழுவினானே உன் அப்பன்.மறந்து விட்டதா தமிழா...உனக்கு எல்லாமுமா!!மறந்து விட்டது.என் பச்சிளம் பிள்ளை களமாடி நெஞ்சில் விழுப்புண் என சிரித்தாளே தமிழ்த்தாய்,நீ உன் பிள்ளையையுமா மறந்தாய்...மறம் மரம்...

கவிஞர் அஸ்மின் சொன்னது…

என்னுடைய படைப்புக்களை பார்வையிட்டு கருத்தினை பகிர்ந்த

*அறிவிப்பாளர் ஷைபா மலீக்(லண்டன்)
*பி.அமல்ராஜ்
*கவிஞர் கார்த்திகேயன்(இந்தியா)

ஆகியோருக்கு இதயம்கனிந்த நன்றிகள்.
மீண்டும் வருவீர்
ஆதரவு தருவீர்.

பெயரில்லா சொன்னது…

உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு உயிர்கள்யாவும் கெஞ்சின!
கடவுளில்லை என்றவாயும் கடவுள்நாமம் கூறின!

அற்புதமான வரிகள் ஐயா ,,,

மக்களின் மனக்கருத்தை அழகாக வெளியிட்டிருக்கிறீர்கள்
வாழ்க வளர்க ...

கவிஞர் அஸ்மின் சொன்னது…

என்னுடைய படைப்புக்களை பார்வையிட்டு கருத்தினை பகிர்ந்த
*எடப்பாடி சிவம்
அவர்களுக்கு நன்றிகள்.
மீண்டும் வருவீர்!ஆதரவு தருவீர்!

shammi's blog சொன்னது…

good one ....thanks for sharing

பெ. சக்திவேல் சொன்னது…

அருமையான கவிதை. துக்கத்தைக்கூட உங்கள் கவிதையில் ரசிக்க முடிகிறது....

கவிஞர் அஸ்மின் சொன்னது…

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட
*கவிதாயினி சமீ முத்துவேல்
*கவிஞர் பெ.சக்திவேல் ஆகியோருக்கு
மிக்க நன்றி.

தொடர்ந்து வாருங்கள்
கருத்துக்களை கூறுங்கள்.

பெயரில்லா சொன்னது…

சந்தமும் நயமும் கலந்து குலாவி நல்ல கவிதை தந்தன,
வேண்டும் இவை வேண்டும் என்று மெல்ல மனமும் இயம்பின,
நல்ல கவிதை தந்த கவிஞன் யாரெனக் கண்கள் கேட்டன
பார்த்து மிக மகிழ்ந்து அவை வாழ்த்துப் பல கூறின

மீண்டும் மீண்டும் வேண்டும் என்று ரசிக மனம் கெஞ்சவே

வேண்டும் மீண்டும் இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சி
செல்கிறேன்.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கவிஞா!!சந்தநயமும் கருவும் அருமை!!

கவிதா ரசம் பருக மீண்டும் வருவேன்.

-திவ்யா-

கவிஞர் அஸ்மின் சொன்னது…

திவ்யா...
தேனும் மயங்கும் உங்கள் தமிழ் கண்டு
நானும் நாணி நிற்கின்றேன்.
வண்ணத் தமிழ்கொண்டு என்னை
வாழ்த்தியமைக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

ஊழித் தாண்டவத்தின் உக்கிரம் தங்க முடியாமல்
காலத்தின் தேவை கருதி
காட்சிப் படுத்துகிறது தங்களின் கவிதை!

கடல் கடந்தாலும் கண்டம் கடந்தாலும்
மனிதம் படும் அவலம் கண்ணீரை வரவைக்கிறது
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

கவிஞர் அஸ்மின் சொன்னது…

என்னுடைய படைப்புக்களை பார்வையிட்டு கருத்தினை பகிர்ந்த
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
அவர்களுக்கு நன்றிகள்.
மீண்டும் வருவீர்!ஆதரவு தருவீர்!

கருத்துரையிடுக