சனி, 30 ஏப்ரல், 2011

''கவிஞர் பொத்துவில் அஸ்மின் மலேசியா பயணம்''



''கவிஞர் பொத்துவில் அஸ்மின் மலேசியா பயணம்''  எனும் தலைப்பில் என்னுடைய மலேசிய பயணம் தொடர்பான செய்தி  இலங்கையின்  
நவமணி வார பத்திரிகையில் இன்று வெளிவந்துள்ளது.


நன்றி
*நவமணி( 02.05.11)

வியாழன், 28 ஏப்ரல், 2011

துபாயிலிருந்து வெளிவரும் சர்வதேச தமிழ் சஞ்சிகை ''சிகரம்''

இந்தக்கவிதை துபாயிலிருந்து வெளிவரும் சர்வதேச தமிழ் சஞ்சிகையான ''சிகரத்தில்'' இடம்பெற்றுள்ளது.

நன்றி
*சிகரம் (15.4.11)

புதன், 27 ஏப்ரல், 2011

மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.




''மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.'' எனும் தலைப்பில் என்னுடைய மலேசிய பயணம் தொடர்பான செய்தி  'வீரகேசரி' பத்திரிகை நிறுவனத்தினரால் வெளியிடப்படும் விடிவெள்ளி பத்திரிகையில் இன்று (28.4.11)வெளிவந்துள்ளது.இந்த பத்திரிகையை இந்த http://www.vidivelli.lk  இந்த முகவரினூடக  இணையத்திலும் பார்வையிடலாம்.


நன்றி 
*விடிவெள்ளி(28.4.11)

கவிஞர் அஸ்மின் மலேசியா பயணம்.


இந்தப்பதிவு ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளிவரும் ஊடகம் இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது. 


விஞரும், பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும்
மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம்திகதி மலேசியா செல்ல இருக்கின்றார்.


இலங்கையில்  மரபுக்கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பொத்துவில் அஸ்மின் மாநாட்டு கவியரங்கத்துக்கு சமர்ப்பித்த அண்ணலாரின் அழகிய குணங்களில் - 'பொறுமை'என்னும் தலைப்பில் அமைந்த மரபுக்கவிதை  இலங்கை ஏற்பாட்டுக்குழுவின்  தேர்வுக்குழுவால் நடத்தப்பட்ட போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வசந்தம் TVயின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர்  ஏலவே அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டி 'ஜனாதிபதிபதி விருது', பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் 'தங்கப்பதக்கம்', சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது உட்பட ஏழு விருதுகளைப் பெற்றுள்ளார்.


ஒரு தசாப்த காலத்துக்கும்  மேலாக இலங்கையின்  இலக்கியத்துக்கு தன் படைப்புக்கள் மூலம் பங்களிப்பு செய்து வரும் இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,சர்வதேச தமிழ் சஞ்சிகைகளிலும்,இணைய சஞ்சிகைகளிலும்,இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும்  களம் கண்டுள்ளன.


சக்தி TV யின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர் செவ்வேள் தயாரிக்க இயக்குனர் கேசவராஜ் இயக்கும்  'பனைமரக்காடு' திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கின்றார். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடிய இவரது 'எங்கோ பிறந்தவளே...'பாடல் இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.


'விடைதேடும் வினாக்கள் (2000)', 'விடியலின் ராகங்கள்'(2001), என்ற இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மினின் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


                     நன்றி
*ஊடகம் (துபாய் -ஜாபர் சாதீக்)
*பொத்துவில் இன்போ (ஜே.எம்.ஹிஜாஸ்)

*விடிவெள்ளி(28.4.110)
*இனியொரு (லண்டன்)
*நவமணி (02.5.2011)
*திண்ணை(30.4.11)

திங்கள், 25 ஏப்ரல், 2011

தேசிய விருது பெற்ற பாடல்.




லங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்று 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடல்வரிகளுக்கான விருதினை பெற்றுக்கொண்ட பாடல்.









பாடல்:புறப்படு தோழா...
இசை:டிரோன் பெர்ணன்டோ
பாடல் வரிகள்: கவிஞர் பொத்துவில் அஸ்மின் 

பாடியோர்: ஜனனி ஜெயரத்னராஜா & டிரோன் பெர்ணன்டோ


வெள்ளி, 1 ஏப்ரல், 2011

படைப்பாளி அறிமுகம் -08- ''இருக்கிறம்'' சஞ்ஜீத்


லங்கையின் இளைய தலைமுறை இதழியலாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான அருளானந்தம் சஞ்ஜீத் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.இவர்புகைப்படக்கலை,கேலிச்சித்திரம்,குறுந்திரைப்படம்,ஊடகத்துறை போன்றவற்றில் தனது ஆற்றலை நிரூபித்து வருகின்றார்.  

ரம்பக் கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலும் பின் உயர்தரம் வரை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கற்ற இவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் நுண்கலைமாணி பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் 'இருக்கிறம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமை புரிந்து வருகின்றார்.

2000ம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'தினக்கதிர்' பத்திரிகையில் நிருபராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பத்திரிகைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த இவர், அதன் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போதே பல உள்ளுர் ஊடகங்களுக்கும் சர்வதேச இணையத்தள ஊடகங்களுக்கும் பிரதேச செய்தியாளராகவும் கார்ட்டூனிஸ்டாகவும் பணிபுரிந்திருக்கின்றார்.



2003ம் ஆண்டளவில் யாழில் இருந்து வெளிவந்த பத்திரிகைகளில் இவர் செய்தி நிருபராக பல சமகால கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், மக்கள் மீதான அடக்குமுறைகளையும் அவர்களுடைய வேதனைகளையும் கார்ட்டூன்களால் சித்தரித்துள்ளார்.யாழில்  இருந்து  வெளிவந்த பத்திரிகைகளிலும், வெளிநாட்டு ஊடகங்களிலும் இவரது கேலிச்சித்திரங்கள் வெளிவந்திருக்கின்றன. 



மூகப் பிரச்சினைகளை தனது படைப்புக்களுடாக வெளிப்படுத்திவரும் இவர் சிறந்த புகைப்படக் கலைஞருமாவார்.
2007 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் 'வர்ணமொழி' என்ற கண்காட்சியில் 'த கிளிக்' என்ற புகைப்படக் காட்சியொன்றை நடத்தினார். 2008 ஆம் ஆண்டும் யாழ்ப்பாணத்தில் 'விழிகளின் வழியே' என்ற என்ற புகைப்படக் கண்காட்சியொன்றையும் யாழ் பெரியபுலம் மாகாவித்தியாலயத்தில் யாழ் றோட்டரிக்கழக அனுசரணையில் நடத்தி பலரதும் கவனத்தையும் நல்லறிஞர்களின் பாராட்டையும் பெற்றார். 



மிழ்பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையாக 'இருக்கிறம்' சஞ்சிகையை பல சவால்களுக்கும் மத்தியில் வெற்றிகரமாக வெளியிட்டு சமூகத்து எதிரான அநீதிகளை தட்டிக்கேட்கும் துணிச்சல்மிக்க பத்திரிகையாக 2009 முதல் மாற்றியமைத்த இவரின் பணியை கௌரவப்படுத்தும் முகமாக 2010 ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவில் 
''சிறந்த சஞ்சிகை ஆசிரியருக்கான விருது'' இவருக்குக் கிடைத்தது.



பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் இவரின் நெறியாள்கையில் உருவான 'வதை' 'நெருப்பு' என்ற இரண்டு குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக பத்திரிகைத்துறையில் பணியாற்றிவரும் இவர் இதுவரை தான் பத்திரிகைகளில் வரைந்த கேலிச்சித்திரங்களை தொகுத்து நூலாகவும் வெளியிட இருக்கின்றார்.

தனது காத்திரமான எழுத்து நடைமூலம் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலமும் இலங்கையின் ஊடகத்துறையில் முத்திரை பதித்துவரும் இளம் ஊடகவியலாளர் அருள்-சஞ்ஜீத் அவர்களின் படைப்புலக பணியில் மேலும் பல சுவடுகளைப் பதிக்க நாமும் வாழ்த்துவோம்.