சனி, 24 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம் - 15 - எழுத்தாளர் சித்தன்

இலங்கையின் இளைய தலைமுறை இதழியலாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான எழுத்தாளர் ஜிதேந்திர பிரசாத்  கொழும்பை  பிறப்பிடமாகக் கொண்டவர்.

சித்தன் எனும் யெரில் படைப்புக்களை படைத்து வரும் இவர் சமூகத்தில் புரையோடியிருக்கும் மூடநம்பிக்கை, சாதியப் பிரச்சினை போன்றவற்றின் முதுகெலும்பை உடைக்கும் ஆற்றலுள்ள எழுத்தின் சொந்தக்காரர்.
பத்தியெழுத்து, கவிதை, பாடலியற்றல்,கட்டுரை போன்றவற்றில் தனது ஆற்றலை நிரூபித்து வருகின்றார். 


ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை  கொழும்பு உவெஸ்லிக் கல்லூரியில் கற்ற இவர் பாடசாலை கல்வியை தொடர்ந்து பத்திரிகைத் துறையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் சுடர் ஒளி பத்திரிகையில் பணியாற்றினார். அதன் பின்னர் வீரகேசரி பத்திரிகையில் சேர்ந்து இற்றைவரை பணியாற்றி வருகின்றார்.

2009ம் ஆண்டளவில  வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவரும்  'சித்தன் பதில்கள்' பகுதியில் மூலம் தனது எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த  இவர் கேள்வி பதில் பகுதியில்  புதுமையை புகுத்தினார். இலக்கியம், சமயம்  வாழ்வியல் , விஞ்ஞானம் , பொருளாதாரம் இன்னோரன்ன விடயங்களில் வாகர்கள் கேட்கும்  பின் நவீனத்துவ கேள்விகளுக்கு இவர் வழங்கி வரும்  காத்திரமான பதில்கள்  அதிகளவிலான கவனத்தை வாசகர்களிடத்தில் பெற்றுள்ளன. இதன் மூலம் அதிகமாக  பேசப்பட தொடங்கினார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2010ம் ஆண்டு சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருது வீரகேசரி பத்திரிகை சார்பாக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவரது முதலாவது நூல் 'கிழித்துபோடு'' எனும் தலைப்பில் 2010ம் ஆண்டு வெளிவந்தது.இதில் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த இவரது சித்தன் பதில்கள் அடங்கியுள்ளன.பொது அறிவில் தேடல்  உள்ள அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாக இந்த நூல் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து 'இதையும் கிழித்து  போடு' எனும் தலைப்பில் அடுத்த நூலை வெளியிடுவதற்குரிய  செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

பழந்தமிழ் இலக்கியத்தில் சித்தர் பாடல்களில் தேடலும் ஆர்வமும் உள்ள இவர் இறை மறுப்புக் கொள்கையுடையவர் அதனை அடிப்படையாக வைத்து இவரால் எழுதப்பட்ட பாடல் அடங்கிய இறுவட்டும் மிகவிரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

த.எலிசபெத் (ராஜ் சுகா) சொன்னது…

எழுத்தாளர் ஜிதேந்திர பிரசாத்(சித்தன்) அவர்களுடைய விபரங்களை தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி. அத்துடன் பல இலக்கிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திவரும் உங்களின் இலக்கிய பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.தொடரும் உங்களின் இலக்கிய முயற்சிகள் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துக்கள்.

த.எலிசபெத்

கருத்துரையிடுக