சனி, 3 டிசம்பர், 2011

தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்த இலங்கை கலைஞர்களின் பாடல்.

தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்த
இலங்கை கலைஞர்களின் பாடல்.


kaanthalpookkum (காந்தள் பூக்கும் )



நம்நாட்டுக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'காந்தல் பூக்கும் தீவிலே' என்ற புதிய பாடல் தமிழ்பேசும் உலகில் வாழும் இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று தென்னிந்திய திரை உலகத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.

பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வரிகளுக்கு வவுனியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்துள்ளார்.இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனுடன் இணைந்து அவரது சகோதரி ஜெயபிரதா இந்தப்பாடலைப் பாடியுள்ளார்.
கந்தப்பு ஜெயந்தனும் பாடலாசிரியர் அஸ்மினும் இணைந்து உருவாக்கிய 'எங்கோ பிறந்தவளே' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட பாடலாக மாறியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் இசைத்துறை வேகமாக வளர்ந்து வருகின்றது.இலங்கையிலும் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகரான கலைஞர்கள் இருக்கின்றனர் என்பதற்கு  சாட்சியமாக இப்பாடல் திகழ்கின்றது.

இந்தப்பாடலை அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் இலங்கை கலைஞர்களின் திறமை எந்தளவுக்கு உலகத்தரத்திற்கு வளர்ந்து வருகின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் எந்தவொரு வானொலியும் இந்த பாடலை கண்டுகொள்ளதா நிலையில் இந்தப்பாடல்  youtube இணையத்தளத்தில் வலையேற்றப்பட்டு 5 நாட்களுக்குள் சுமார் 50,000 ஆயிரம் ரசிகர்கள் இப்பாடலை பார்வையிட்டுள்ளனர்.

தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் இந்த பாடல் பற்றியும் பலரும் பேசிவருகின்றனர்.இலங்கையில் வெளிவந்த தமிழ் பாடல்களில் முதன்முறையாக அதிகமான ரசிகர்கள் குறைந்த காலத்தில் கவர்ந்தள்ளமை இலங்கையின் தமிழ் இசையத்துறையை பொறுத்தவரையில் ஒரு சாதனையாகும்

 பாடலின் வெற்றி குறித்து 
இசையமைப்பாளர் ஜெயந்தனின்  கருத்துக்கள்.




இந்த பாடலை எழுதியுள்ள கவிஞர் பொத்துவில் அஸ்மின் 2008ம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியின்வாயிலாக பாடலாசிரியராக அறிமுகமானவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 2 முறை பெற்றவர்.' ஜனாதிபதி' விருது' ,'அகஸ்தியர் விருது' என பலவிருதுகளை பெற்ற இலங்கையின் முன்னணி பாடலாசிரியர். இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.பனைமரக்காடு திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகியுள்ளார்.

பாடலை இசையமைத்து பாடி இருக்கும் 'இசை இளவரசன்' கந்தப்பு ஜெயந்தன் சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான  போட்டியாளர்கள் மத்தியில் 'இசை இளவரசனாக' முடிசூடிக்கொண்டவர்.பலகுறும்படங்களுக்கு  இசையமைத்துள்ளார்.இவரது 'இதயத்தின் ஓசை' என்ற இசைப்பாடல் அடங்கிய இறுவட்டு வெளிவந்தள்ளது. 'யாழ்தேவி' என்ற இசை இறுவட்டு  விரைவில் வெளிவர இருப்பதாக தெரிவித்தார்.

இந்தப்பாடல் இந்த இருகலைஞர்களின் கலைவாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தள்ளது.தென்னிந்திய திரைப்படத்தில் பாடல் எழுவதற்கு இசையமைப்பதற்குரிய வாய்ப்பு இதன் மூலம் இவர்களுக்கு கிடைத்துள்ளது.தென்னிந்திய திரைத்துரை சார்ந்த பல கலைஞர்கள், இயக்குனர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக 'பகவதி' 'வல்லக்கோட்டை', 'மகாபிரபு' போன்ற படங்களை இயக்கி 'அங்காடித்தெரு' திரைப்படத்தின் மூலம் அதிரவைக்கும் வில்லனாக அறிமுகமான இயக்குனர் ஏ.வெங்கடேஷ் முகநூலில் வாழ்த்துரைத்துள்ளதோடு தமது படத்தில் வாய்ப்புகொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இப்படி எத்தனையோ திறமையான இளைஞர்கள் எம்மண்ணிலே இலைமறைகாய்களாக சரியான களம் கிடைக்காது இன்னும் மறைந்த கிடக்கின்றனர் அவர்களை கண்டெடுத்து உலகத்துக்கு அறிமுகப்படுத்துவது ஊடகங்களின் தார்மீக கடமையாகும் இதை சரியாக செயற்படுத்தினால் எங்கள் மண்ணிலும் வைரமுத்துக்கள் கிடைக்கலாம்.

எமது பாடலின் வெற்றியில் பல இணையத்தளங்களும் வானொலி சேவைகளும் பின்னணியாய் நின்றுள்ளன .அவைகள் வருமாறு... 
(இதில் இணைக்கவேண்டிய தளங்கள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்)

நன்றி.

*YOUTUBE
*மனிதன்
*லங்கா ஸ்ரீ
*வீரகேசரி
*அத தெரண
*யாழ் மண்
*தமிழ் ஸ்டார்
*இருக்கிறம்
*வணக்கம் நெட்
*பொத்துவில் புதல்வன்
*செய்தி
*பதிவுகள்
*இலங்கை நெட்
*நேசம் நெட்
*மன்னார் இணையம்
*உயிர் தமிழ்
*பிறை FM
*வெற்றிFM
*ஜே ஜே FM
*தக்காளி.கொம்
*அஸ்கரின் பகிர்வுகள்
*கலசம்
*IBC
*LANKAFAST
*NEW JAFFNA
*உயர்வு
*சங்கமம்
*நிலா முற்றம்
*என்ன கத
*எழு தமிழா
*யாழ் மின்னல்
*யாழ்தேவி
*தமிழ் பூங்கா
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக