வியாழன், 19 ஆகஸ்ட், 2010

புத்தியுடன் செயற்படுவோம்!


 மாண்புமிகு இஸ்லாத்தின்
மகத்துவத்தை பறைசாற்றும்
நோன்புதனை தினம்நோற்று
தீன்வழியில் நடந்திடுவோம்

வீண்பேச்சு சபலங்கள்
விளையாட்டு விவாதங்கள்
கூண்டோடு அத்தனையும்
குழிதோண்டி புதைத்திடுவோம்

காலைமுதல் மாலைவரை
கவனமுடன் நோன்பிருப்போம்
ஏழைகளின் பசிதன்னை
எப்படியென் றறிந்திடுவோம்

நாட்கள் முப்பதும் நாம்
நல்லபடிநோன்பிருந்து
பாவங்கள் கழுவி இன்றே
பரிசுத்த மாகிடுவோம்

புறம்கூறல் பொய்சொல்லல்
பொறாமையிலே குழிபறித்தல்
அறமல்ல என்றுணர்ந்து
அனைவருமே ஒழுகிடுவோம்

நோய்தீரும் என்பதற்காய்
நோன்புதனை நோற்காமல்
வாய்காட்டி வாழாமல்
வாய்மையுடன் வாழ்ந்திடுவோம்

அநியாயம் அக்கிரமம்
அத்தனையும் தவிர்த்திடுவோம்
துனியாவில் இஸ்லாத்தின்
தூய்மையினை எடுத்துரைப்போம்

இல்லாத மக்களுக்கு
இயன்றவரை ஈந்திடுவோம்
பொல்லாத குணங்களினை
போரிட்டு பொசுக்கிடுவோம்

அல்லாஹ்வின் நாமத்தை
அடிநெஞ்சில் வளர்த்திடுவோம்
வல்லோனின் சொல்லொன்றே
வாழ்வென்று வாழ்ந்திடுவோம்

தேன்போன்ற நபிகளாரின்
சுன்னத்தை கடைப்பிடிப்போம்
ஆண்பெண்கள் அனைவருமே
அல்குர்ஆன் வழி நடப்போம்

மதம் எதுவாயிருந்தாலும்
மரியாதை கொடுத்திடுவோம்
புரிந்துணர்வை நாம்வளர்த்து
புத்தியுடன் செயற்படுவோம்

                                    நன்றி
*வசந்தம் தொலைக்காட்சி-.இலங்கை
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை வாழ்த்துக்கள்

சஞ்சயன் சொன்னது…

"மதம் எதுவாயிருந்தாலும்
மரியாதை கொடுத்திடுவோம்
புரிந்துணர்வை நாம்வளர்த்து

புத்தியுடன் செயற்படுவோம்"

மிக அருமை தம்பீ. மதம் என்னும் மதம் பிடித்தலைபவர்களுக்கு முகத்தலடித்திருக்கிறீகள்.

வாழ்த்துக்கள்

நேரமிருந்தால் visaran.blogspot.com பக்கம் வந்து போங்கள்.

கருத்துரையிடுக