சனி, 24 மார்ச், 2012

பாம்புகள் குளிக்கும் நதிவிண்ணில் இருப்பதனால்
சூரியன் பெறுமதி தெரிவதில்லை
மண்ணில் விழுவதினால்
மழையின் மதிப்பு குறைவதில்லை

அன்பை கொடுப்பதற்கு
அழகிய கைகள் தேவையில்லை
இன்பம் சுவைப்பதற்கு-வெறும்
உடலால் மட்டும் முடிவதில்லை

அருகில் இருப்பதனால்
காதலி அருமை புரிவதில்லை
தூரம் விலகுவதால்
காதலும் தூர்ந்து போவதில்லை

பாம்புகள் குளிப்பதினால்
நதிநீர் விஷமாய் போனதில்லை
பொறாமை இருப்பதினால்
இறைவன் எதையும் கொடுப்பதில்லை

உலகை படைப்பதற்கு
மனிதர்கள் எம்மால் முடியாது...
உலகை உடைப்பதற்கு-ஒரு
வார்த்தை மட்டும் போதுமென்பேன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

வே.சுப்ரமணியன். சொன்னது…

நல்லதொரு தரமான, சிந்தனையின் உயரத்தை தொட்டுவிடும் படைப்பு! அருமை!

கவிஞர் அஸ்மின் சொன்னது…

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

கருத்துரையிடுக