வியாழன், 24 பிப்ரவரி, 2011

படைப்பாளி அறிமுகம்-05- எழுத்தாளர் இரா.சடகோபன்


எழுத்தாளர்,கவிஞர் இரா.சடகோபன்
லங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் கவிஞருமான  இரா.சடகோபன் அவர்கள் நாவல் நகர் என்று சிறப்பாக அழைக்கப்படும்  மலையகத்தின் மத்தியில் இருக்கும் சிறு நகரமான நாவலபிட்டியின் அருகில் அமைந்துள்ள மொஸ்வில்ல தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

மொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில்  புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும்  பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர்.

கவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக ஆய்வாளராக, ஓவியராக இன்று பல்துறையிலும் காலூன்றித் தடம்பதித்துள்ள  படைப்பாளியான இரா.சடகோபன்  9ஆம்  தரத்தில்  கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்து,கவிதை,நாடகம்,பேச்சு,வில்லுப்பாட்டு என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.

1976 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில்  தனது 17ஆவது வயதில் தேனீர் மலர்கள் என்ற கவிதைக்காக மூன்றாம் பரிசினை பெற்றதன் மூலம் கவிஞர் என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.

இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,கலை-இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.விஜய் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர் தற்போது சுகவாழ்வு ஆரோக்கிய சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவரது முதலாவது கவிதை தொகுப்பான  ''வசந்தங்களும் வசீகரங்களும்'' என்ற கவிதை நூல் 1998ம் ஆண்டு வெளிவந்தது.அன்றிலிருந்து
2002ம் ஆண்டு ''ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்'' எனும் சிறுவர் இலக்கிய நூலையும்  2008ம் ஆண்டு ''உழைப்பால் உயர்ந்தவர்கள்'' என்ற மொழி பெயர்ப்பு நாவலினையும்  வெளியிட்டுள்ளார்.தற்போது ஆங்கில  வரலாற்று நாவலை  ''கசந்த கோப்பி'' எனும் பெயரில்  தமிழில் மொழி பெயர்த்து இலங்கையின் தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்த்து இருக்கின்றார்.


மலையக மக்கள் ஆய்வு மன்றத்தின் தலைவராக,மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளராக,தமிழ்-சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் துணைச் செயலாளராக, மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வரும்
எழுத்தாளர் இரா.சடகோபன் 35க்கும் மேற்பட்ட நூல்களுக்கு அட்டைப்படங்களையும் வரைந்துள்ளார்.
தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை-இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டி பலதடவை பரிசில்களை பெற்றுள்ள இவர் 1993ம் ஆண்டு சிறந்த பத்திரிகையாளருக்கான   எஸ்மன்ட் விக்கிரம சிங்க ஞாபகார்த்த ஜனாதிபதி விருதினையும் 2000ம் ஆண்டு வசந்தங்களும் வசீகரங்களும்  கவிதை நூலுக்கான மத்திய மாகாண சாஹித்திய விருதினையும் 2008ம் ஆண்டு மொழி பெயர்ப்பு நாவலுக்கான தேசிய சாஹித்திய மண்டல விருதினையும் பெற்றிருக்கின்றார்.

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  எழுத்தாளர இரா.சடகோபன் படைப்புக்கள் இன்னுமின்னும் இலக்கிய உலகில் அழியாத சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அண்ணாச்சி கோட்டையிலே அவன வெல்ல யாருமில்ல...(புதிய பாடல்)



பாடலாசிரியர்: கவிஞர் அஸ்மின்


பல்லவி

ண்ணாச்சி கோட்டையிலே
அவன வெல்ல யாருமில்ல
கருவாச்சி பெத்தபுள்ள
கத்தி வச்சா கழுத்து இல்ல!

சிங்கம்போல நடந்து வாரன் பாரு-மாமன்
சிரிப்புக்கேட்டா அடங்குமடா ஊரு....
அங்கமெல்லாம் வழியுது பார் பீரு...
எங்கும் இவன் ராச்சியம்தான் கூறு....
(அண்ணாச்சி கோட்டையிலே)

   சரணங்கள்

பாலிருக்குது பழமிருக்குது
பருகிடவா மச்சான்...
பார்வையாலே தேகமெங்கும்
தேனொழுக வச்சான்...

ஆசபோல மாம்பழத்த
அறுத்துத் தின்னடா-நான்
காசுபோட்டா விடிய விடிய
கனியும் பெண்ணடா

கொண்டுவாடா சோடா-என்ன
கொல்ல வந்த வேடா-இது
திண்டுக்கல்லு பீடா-வந்து
திண்டுவிட்டு போடா...                      
  
(அண்ணாச்சி கோட்டையிலே)
கள்ளிருக்கும் பானையிலே
கையவச்சுப் போனாய்..
உள்ளிருக்கும் பள்ளத்தில
ஒழுகுதடா தேனாய்..

வில்லெனவே மாறுகிறேன்
அம்பெடுத்து வாடா
புல்லுக்கட்டே கூப்பிடுறேன்
மேஞ்சப்புட்டு போடா...

அறுவா மீசக்காரா-என்ன
ஆளவந்த சூரா
பருவமுண்டு 'மோரா'-நீ
பருகுவந்து ஜோரா....                       

  (அண்ணாச்சி கோட்டையிலே)


2010.12.15

மாநபியே துயரின் மாமருந்தே...(புதிய இஸ்லாமிய கீதம்)




பாடலாசிரியர்: கவிஞர் பொத்துவில்  அஸ்மின்  
பாடகி:ஷைபா பேகம்( இலண்டன்)
பல்லவி

மாநபியே.. மாநபியே...
மாநபியே துயரின் மாமருந்தே..
மறையளித்த உலகின் தேன்கரும்பே....
(மாநபியே..)


உயர்தீனின் பூரணமே...
உண்மை ஒளிரும் தோரணமே
இறைமறையை நாங்கள் பெற
நபி நீங்கள் காரணமே...!
மக்கள் அறியாமை விட்டுத் தெளிவாக
வழிகாட்டிய ஒளிதானே...

(மாநபியே..)


சரணம்-1

மக்கா நகர் காபிர்கள்
சிக்கல்பல செய்தாலும்
பக்குவமாய் நீர் இருந்து
பாவிகளை பொறுத்தீரே..
தக்கபடி நாம் வாழ
அக்கறையாய் இருந்தீரே
திக்கு எட்டும் தீனை நட்டு
தீமைகளை அறுத்தீரே...

எதிர்காலம் நிகழ்காலம்
கூறும் இறைவேதம்
தந்த தூதரே நபிநாதரே...
என்றும் உங்கள் வழிநடப்போம்
 (மாநபியே..)                                                                     

சரணம்-2

எல்லாம் வல்ல இறையோனை
எங்கும் உள்ள மறையோனை
அல்லாஹ்வினை மட்டும் நாங்கள்
அடிபணியச் சொன்னீரே...
ஒன்றுமில்லா எளியோரை
ஒதுக்கவேண்டாம் என்றீரே
வறுமை வந்து வதைத்த போதும்
பொறுமையுடன் நின்றீரே...

மார்க்கம் இறை மார்க்கம்
மீட்கும் கரை சேர்க்கும்
நேர்வழி என்றும் செல்கிறோம்
உங்கள் நிழலில் நாமிருப்போம்...

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

இந்துக்களின் வேதத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்-பண்டிட் வைத் ப்ரகாஷ்





இதை நான் சொல்லவில்லை சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின்சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின் இந்தியாவே ஒரு கலங்கு கலங்கிவிட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால் அவர்இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு அந்த புத்தகத்தையும் தடைசெய்திருப்பார்கள்.


ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்சஇறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்துவெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கியஅத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட்வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.


பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயராஉழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டுகல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்கஇப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின்தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.


இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமானகல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார்.ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல்,ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதைஎத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரைஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையைநிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.


1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது,கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒருஇடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்றுசொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத்என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள்.அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ்என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு,சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதேஅர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ்மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.


4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார்என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின்புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறதுஎன்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்..


5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்றுவேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில்பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.


6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம்கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர்ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.


7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரைவழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும்சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில்,‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?


8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும்எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது.முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன்ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.


9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கிஅவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும்சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னசொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும்.அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பேபோய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள்,ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும்வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும்நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில்குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன்வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாகதெரிகிறது.





இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!

ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com/

இந்து, கிறிஸ்தவ வேதங்களில் முஹம்மது நபி(ஸல்) பற்றிய குறிப்புக்கள்




ஏதஸ் மின்னந் தாரா மிலேச்ச ஆச்சார்யண ஸமின் வித மஹாமத் இதிக்கியாத சிஷ்ய சாகா ஸமன்வித நிருஷ் சேவ ஹமாதே மருஸ் தல நிவாஸினம்

- பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-8

தமிழில் : ஒரு அன்னிய நாட்டில் ஓர் ஆன்மீக சீர்த்திருத்தவாதி, தமது சிஹ்யர்களுடன் வருவார். அவர் பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார்

லிங்கச்சேதி சிகா ஹுன சுமக்சுறு தாரி ஸாதூஷக உச்சாலாபி ஸாவ பஹீ பவிஷ்யதி ஜனோமம முஸலை நைஸ் மஸ்கார

- பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 25, சூத்திரம் 3

தமிழில் : அவர்கள் லிங்கச்சேதம் (சுன்னத்) செய்வார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பார்கள். சப்தமிட்டு அழைப்பார்கள் (பாங்கு). முஸ்லிம் என்று அறியப்படுவார்கள்.

அனஸ வந்தா ஸக் பதிர் மாமஹே மேகாவா சேதிஷ் ஷடோ அஸுரோ பகோண நிறை விஷேனோ அக்னேத சாப்பி ஸஹஸ்னரர் வைச்சுவாரை திறையும் ருனா ஹீசிகே

- ரிக்வேத மந்திரம் 5, ஞ்க்தம் 28

தமிழில் : உண்மையாளரும், அறிவாளியும், பலசாலியுமான மாமஹே எனக்கு அருள் புரிவார். அவர் முழிமையானவர். முழு உலகிற்கும் அருட்கொடையானவர். பத்தாயிரம் பேர்களுடன் புகழ் பெற்றவர்.

அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் பிரஷ்மாண்டம் அல்லாம் அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம் அல்லா பூகணி வாதகம் அல்லா பஞ்ஞென ஹுதா ஹிறுத்தவா அல்லா சூரிய சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய பூர்வம் மாயா பரமந்த ரிஷா அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம் விசுவரூபம் இல்லாம் கபர இல்லாம் இல்லல்தீ இல்லல்லா ஓம் அல்லா இல்லல்லா அனாகிஸ் வரூபா அத்தர் வணா சியாமா ஹும் ஹிரிம் ஜனான பகன ஸித்தான ஜலசாரன் அதிர்டம் குருகுரு புடஸபரஸட ஸமஹாரனீ ஹூம் ஹிரீம் அல்லா ரசூல மஹமத சுபரஸ் அல்லா அல்லா இல்லல்லலேதி இல்லல்லா

- அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10

தமிழில் : அல்லா முழுமையானவர், எல்லா பிரபஞ்சமுமவனுடையது. சிவனின் ஸ்தானத்தை அல்ங்கரிக்கும் மஹாமத் அல்லாவுடைய தூதராய் இருக்கின்றார். அல்லா எல்லாஎல்லா பூமியையும் இயக்குகின்ற இறைவன். பூமியின் பரிபாலனும் அவனே! இறவன் ஒருவனேயன்றி வேறு இல்லை. அரூபியான இறைவனின் ஓங்கார நாதத்தைப் பாருங்கள். ஓம் ஹரீம் மந்திரங்கள் அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய இறைவனே மக்களையும், பசுக்களையும் ஏனைய எல்லாவற்றையும் படைத்தான். அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள்.

ஓம் ஹிர்ரீம் மந்திரம் மூலம் அசுர வர்க்கத்தை அழிக்கும் மஹாமத் அல்லவுடைய தூதர் ஏக இறைவனைத் தவிர வேறு த்ய்வமில்லை. உன் தேவனாகிய கர்த்தர் உன் சனத்தினின்றும், உன் சகோதரர்களிடத்தினின்றும் என்னைப் போல் ஓர் தீர்க்கதரிசியை உனக்காக ஏற்படுத்துவார். அவருக்குச் செவி கொடுப்பாயாக.

- உபாகமம் 18, அதிகாரம், வசனம் 15

உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை நாம் அவர்களுக்காக அவர்களுடைய சகோதரர்களின் நடுவிலிருந்து எழுப்பம் பண்ணி நம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைத்தருள்வோம். நாம் அவருக்கு கற்பிப்பதை அவர்களுக்குச் சொல்லுவார். நமது பெயரால் அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவன் எவனோ அவனை நாம் தண்டிப்போம்.

- உபாகம் 18, அதிகாரம்18, வசனம் 19

'உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -மலேசியா 2011'


திர்வரும் மே மாதம் 20,21,22ம் திகதிகளில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளர்களாக கலந்துகொள்ள விரும்புபவர்களும் ஆய்வரங்கில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை வாசிக்க விருப்பமுடையோரும் கவியரங்கில் கலந்துகொள்ள விரும்புவோரும், மாநாட்டு மலருக்கான கட்டுரை, கவிதை சமர்ப்பிக்க விரும்புவோரும் இலங்கை ஏற்பாட்டுக் குழுவுடன் உடனடியாக தபால் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.தபால் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கே விபரங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளது.கடித உறையின் இடது பக்கத்தில் 'உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -மலேசியா 2011' எனக்குறிப்பிட்டு இம்மாதம் 26ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரிக்கு அனுப்புமாறு  இலங்கை ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

முகவரி:
செயலாளர் ,
இலங்கை ஏற்பாட்டுக் குழு,
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-மலேசியா 2011
இல.9 சவுண்டர்ஸ் கோர்ட் ,
கொழும்பு-02

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

உன் கம்பன் விழிகளினால் நான் காவியமாகிவிட்டேன்...!





''இது இலங்கை கலைஞர்களின் படைப்பு''

உலகத்தின் பூக்களிலே உன்கூந்தல் வாசமடி..!
உண்மையினை சொல்கின்றேன் நீதானென் தேசமடி..
உன்னழகை கண்டாலே நிலவுக்கே கூசுமடி..
உனக்காக மட்டும்தான் என்தென்றல் வீசுமடி...!

எங்கோ பிறந்தவளே.
எனக்குள்ளே மலர்ந்தவளே- உன்
கம்பன் விழிகளினால்- நான்
காவியமாகிவிட்டேன்-உன்
காதல் பார்வைகளால்- நான்
ஓவியனாகிவிட்டேன்....
                                            (எங்கோ பிறந்தவளே...)

ஊரும் தெரியல...
உறவும் புரியல..
உன்னால் சூரியன் எரியலடி..
நீயே உலகென..
நினைத்தேன் உயிரென..
என்னை உன்மனம் அறியலடி....

கவிதை பேசும் கண்கள் கொண்டு
கண்ணே என்னை கொள்ளையடி!
இரவாய் போன எந்தன்வாழ்வில்
இன்றே வந்து வெள்ளையடி.... 

                                       (எங்கோ பிறந்தவளே...) 
எந்தன் காதலி
உந்தன் பூவிழி
சொந்தம் நானென சொல்லுதடி...!
உந்தன் பூமொழி
சிந்தும் தேன்துளி
எந்தன் இரவினை கொல்லுதடி...

இதயத்தில் காதல் இருக்கின்றபோது
இதழ்களை ஏனடி மூடுகிறாய்...?
ஒருமுறை என்னைக் காணாது போனால்
இருமுறை ஏனடி தேடுகிறாய்?
                                               (எங்கோ பிறந்தவளே...)

இசையமைத்து பாடியிருக்கின்றார்:

'இசை இளவரசர்கள்' புகழ் கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள்: கவிஞர் அஸ்மின்.
பாடலுக்கான கதைச்சூழல்: இயக்குனர் ஏ.வெங்கடேஷ்

தொடர்புகளுக்கு:
K. ஜெயந்தன் (0770886358),
கவிஞர் அஸ்மின் (094 778998620),
vtvasmin@gmail.com

காதலர் தின சிறப்புப் பாடல் 2011




 ''இது இலங்கை கலைஞர்களின் படைப்பு''

உலகத்தின் பூக்களிலே உன்கூந்தல் வாசமடி..!
உண்மையினை சொல்கின்றேன் நீதானென் தேசமடி..
உன்னழகை கண்டாலே நிலவுக்கே கூசுமடி..
உனக்காக மட்டும்தான் என்தென்றல் வீசுமடி...!

எங்கோ பிறந்தவளே.
எனக்குள்ளே மலர்ந்தவளே- உன்
கம்பன் விழிகளினால்- நான்
காவியமாகிவிட்டேன்-உன்
காதல் பார்வைகளால்- நான்
ஓவியனாகிவிட்டேன்....
                                            (எங்கோ பிறந்தவளே...)

ஊரும் தெரியல...
உறவும் புரியல..
உன்னால் சூரியன் எரியலடி..
நீயே உலகென..
நினைத்தேன் உயிரென..
என்னை உன்மனம் அறியலடி....

கவிதை பேசும் கண்கள் கொண்டு
கண்ணே என்னை கொள்ளையடி!
இரவாய் போன எந்தன்வாழ்வில்
இன்றே வந்து வெள்ளையடி.... 

                                       (எங்கோ பிறந்தவளே...) 
எந்தன் காதலி
உந்தன் பூவிழி
சொந்தம் நானென சொல்லுதடி...!
உந்தன் பூமொழி
சிந்தும் தேன்துளி
எந்தன் இரவினை கொல்லுதடி...

இதயத்தில் காதல் இருக்கின்றபோது
இதழ்களை ஏனடி மூடுகிறாய்...?
ஒருமுறை என்னைக் காணாது போனால்
இருமுறை ஏனடி தேடுகிறாய்?
                                               (எங்கோ பிறந்தவளே...)

இசையமைத்து பாடியிருக்கின்றார்:

'இசை இளவரசர்கள்' புகழ் கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள்: கவிஞர் அஸ்மின்.
பாடலுக்கான கதைச்சூழல்: இயக்குனர் ஏ.வெங்கடேஷ்

தொடர்புகளுக்கு:
K. ஜெயந்தன் (0770886358),
கவிஞர் அஸ்மின் (094 778998620),
vtvasmin@gmail.com

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

படைப்பாளி அறிமுகம்-04- கவிஞர் பொத்துவில் அஸ்மின்

 

லங்கையின் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் 

தேர்தல் தொகுதியில்,பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
கவிஞர் அஸ்மின் இலங்கையில் மரபுக் கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் முதன்மைக் கவிஞராகவும்,பாடலாசிரியராகவும்,தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்,தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார்.

 
 
பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவராகவும்,இலங்கை அஸ்ரப் கலை-இலக்கிய பேரவையின் தலைவராகவும் இருக்கும் இவர்,ஒரு தசாப்த காலத்துக்கும்  மேலாக ஈழத்து இலக்கியத்துக்கு தன் படைப்புக்கள் மூலம் பங்களிப்பு செய்து வருகின்றார்.
இவரது கவிதைகள்,சிறுகதைகள்,பத்தி எழுத்துக்கள்,நேர்காணல்கள்,பாடல்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள் சர்வதேச தமிழ் சஞ்சிகைகளிலும்,இணைய சஞ்சிகைகளிலும்,இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் ஈழநிலா,பொத்துவில் அஸ்மின் உதுமாலெவ்வை,பொத்துவிலூர் அஸ்மின்,கவிஞர் பொத்துவில் அஸ்மின் எனும் பெயர்களில் களம் கண்டுள்ளன.இவர் http://kavinger-asmin.blogspot.comஎன்ற தனது வலைப்பூவிலும் எழுதிவருகின்றார்.

 

02.இவரது படைப்புக்களுக்கு களம் கொடுத்த வானொலி,தொலைக்காட்சிகள்.
அ.வானொலிகள்
 
•    இலங்கை வானொலி தென்றல்
•    இலங்கை வானொலி முஸ்லிம் சேவை
•    சக்தி FM
•    வசந்தம் FM
•    வெற்றி FM
•    பிறை FM

•    வெளிச்சம் FM
•    ஊவா சமூக வானொலி
•    ரீ.ஆர்.டி.வானொலி (பிரான்ஸ்)
•    கனடா தமிழ் வானொலி
•    ஐ.பி.சி(இலண்டன்)
•    ஜேர்மன் தமிழோசை
 

ஆ.தொலைக்காட்சிகள்.

•    சக்தி TV- (இசை இளவரசர்கள்,குட்மோர்னிங் ஸ்ரீலங்கா)
•    வசந்தம் TV-(தித்திக்குதே,தூவானம்)
•    டான் TV (மண்வாசனை,தாலாட்டு)
•    நேத்ரா TV-(பிரவாகம்)


 

03.இவரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ள நூல்கள்.

•    முகவரி தொலைந்த முகங்கள் - 2000 (கவிதை நூல்)
•    அடையாளம் - 2010 (கவிதை நூல் - தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு)
•    இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் விபரத்திரட்டு பாகம் மூன்று .- 2003
•    ஜீவநதி நேர்காணல்கள் - 2010(15 ஈழத்து எழுத்தாளர்களின் நேர்காணல்கள்)
•    வியர்வையின் ஓவியம் 2010 (தொகுப்பு)
•    பட்சிகளின் உரையாடல்-2011 (கவிதை நூல்)

 
'தேடல்' எனும் கலை, இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் 'சுடர் ஒளி' வாரவெளியீட்டின் உதவி ஆசிரியராகவும் இருந்திருக்கும் இவர்
இதுவரை இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

04.வெளியிட்ட நூல்கள்

v    விடைதேடும்வினாக்கள் - (2002)
v    விடியலின் ராகங்கள- (2003)

 

05.வெளிவர இருக்கும் நூல்கள்

Ø    ரத்தம் இல்லாத யுத்தம் (கவிதை)
Ø    ஈழநிலாவின் உணர்வுகள (சுடர் ஒளி வாரவெளியீட்டில் 50வாரமாக பிரசுரமான பத்தி எழுத்து)
Ø    நிலவு உறங்கும் டயறி (சிறுகதை)
Ø    கவிஞர் அஸ்மின் பாடல்கள். (மெல்லிசை பாடல்)



06.தேசிய ரீதியிலான கவிதைப்போட்டிகளில் பங்கேற்று பத்துத் தடவைகள் பரிசில்கள்,விருதுகள் வென்றுள்ளார்.


1.    மறைந்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் முதலாவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் பரிசு -(ஜனாதிபதி விருது)
இந்த விருது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 2001.09.16 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.

2.    பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்சாஹித்தியவிழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2002

3.    பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் பரிசு (தங்கப்பதக்கம்)-2003

4.    அகில இலங்கை இந்து மாமன்றம் அகில இலங்கை மட்டத்தில் நடாத்திய சொல்லோவிய போட்டியில் சிறப்புப் பரிசு.2003

5.    விபவி கலாசார மையம் அகில இலங்கை மட்டத்தில் நடத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2003

6.    பிரான்ஸ் மகாகவி பாரதியார் மன்றம் சர்வதேச ரீதியாக நடாத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2007

7.    சக்தி TV யினால் அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட 'இசைஇளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சியில் பாடலாசிரியருக்கான அங்கீகாரம்.-2008

8.    இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு  அகில  மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாம் பரிசு.-(சிறந்த பாடலாசிரியர் விருது)-2010

9.    இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு  அகில  மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் இரண்டாம் பரிசு.- 2010

10.    இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்சங்கம் மறைந்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் முதலாவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2010

11.    'லங்கா' பத்திரிகை நிறுவனத்தின் புதிய சிறகுகள்-2011 கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் சிறப்புப்பரிசு-2011

 

இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் சர்வதேச தமிழ் தொலைக்காட்சியான டான் TVயின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், டான்தமிழ் ஒலி வானொலியில் செய்திவாசிப்பாளராகவும் சிறிது காலம் பணிபுரிந்த இவர் தற்பொழுது இலங்கை வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார்.

 
வசந்தம் TVயில் இவர் தயாரித்து தொகுத்து வழங்கிய கவிதையுடன் கூடிய இனிய இடைக்காலப்பாடல்களை சுமந்து வரும் 'தித்திக்குதே' நிகழ்ச்சி பலரது பாராட்டையும் கவனத்தையும் பெற்ற நிகழ்ச்சியாகும்.இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடிய இவரது 'எங்கோ பிறந்தவளே...' பாடல்
இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
 
தயாரிப்பாளர் செவ்வேள் தயாரிக்க இயக்குனர் கேசவராஜ் இயக்கும்  'பனைமரக்காடு' திரைப்படத்தில் இவர் பாடல் எழுதியிருக்கின்றார்.



இலங்கையின் சக்திTVயினால் நடாத்தப்பட்ட  'இசை இளவரசர்கள்' போட்டி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களுக்குள் தேர்வான 16 பாடலாசிரியர்களுள் இவரும் ஒருவர்.இதன் மூலம் தென்னிந்தயா சென்று தமிழகத்தின் மூத்த பாடலாசிரியர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைகளை பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.


 
தமிழ் புலமையும் தனித்துவமான கவிதை ஆற்றலும் கொண்ட கவிஞர் அஸ்மின் இலங்கையில் இருக்கும் கவிஞர்களில் மரபுக்கவிதையில் ஆளுமையுள்ள ஒரே ஒரு இளம் முஸ்லிம் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது முகவரி:
 
U.L.M.ASMIN 
 CENTRAL  ROAD,
POTTUVIL-07
vtvasmin@gmail.com




படைப்பாளிகள் அறிமுகம் - 03 - கவிஞர் நவாஸ் சௌபி

கவிஞர் நவாஸ் சௌபி.
லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் நவாஸ் சௌபி தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணில் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்குகின்ற இறக்காமம் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

ஆரம்பக் கல்வியை இறக்காமம் அல்-அஸ்ரப் மகாவித்தியாலயத்திலும் பின் உயர்தரம் வரை நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையிலும் கற்ற இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகமாணி பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது சாய்ந்தமருது மழ்ஹறூஸ் ஸம்ஸ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிகின்றார்.



1993ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் ''சிறுவர் உலகம்'' பகுதியில் வெளிவந்த கட்டுரையின் மூலம் தனது எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைககள்,சஞ்சிகைகளில் களம் கண்டுள்ளன.



கவிதை,சிறுகதை,கட்டுரை,விமர்சனம்,பத்தியெழுத்து போன்றவற்றில் தனது ஆற்றலை வெளிப்படுத்திவரும் இவர் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய ''ஊதுபத்தி'' பத்தி எழுத்தும்,விடிவெள்ளி பத்திரிகையில் எழுதிய 'ஆலாத்தி' பத்தி எழுத்தும்  தமிழ் இலக்கியத்திலும், முஸ்லிம் தேச இலக்கியத்திலும்  இவருக்குள்ள  அகன்ற பார்வையை எடுத்துக்காட்டின.

''நியதி'',''நல்லுறவு'' ஆகிய பத்திரிகைககளின் பிரதம ஆசிரியராக பணிபுரிந்துள்ள இவரின் முதல் கவிதை நூல் ''மண்ணில் வேரானாய்'' 2001ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பின 'முள்ளில் எறியாதே', 'போராயுதமும் கவிதையிடம் சரணடைதலும்'' கவிதைநூல்களை 2003ம் ஆண்டு  வெளியிட்டுள்ளார். இவரது ''எனது நிலத்தின் பயங்கரம்''' கவிதை நூல் இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது.மிக விரைவில் முஸ்லிம்களின் சமூக அடையாளமாக 'முஸ்லிம் தேச இலக்கியம்' என்ற நூலை வெளியிட இருக்கின்றார்.

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும் கவிஞர் நவாஸ் சௌபியின்  படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.


வியாழன், 10 பிப்ரவரி, 2011

'ஆமா'போடப்பா... அத்தனையும் கிடைக்குமப்பா...



கேள்வி கேட்பவர்க்கு
கேழ்வரகும் இல்லையப்பா...
'ஆமா'போடப்பா...
அத்தனையும் கிடைக்குமப்பா...

வாள்பிடிக்க எண்ணாதே...?
வாய்காட்டி நிற்காதே.....
வாலாட்ட கற்றுக்கொள்
வாழ்க்கை இருக்குதப்பா......

காகம் அழகென்று
கருத்துரைத்தால் அதிகாரி.....
புறாப்போன்று இருக்குதென்று
புன்னகைக்க பழகிக்கொள்......

பதவிபெற வேண்டுமென்றால்
பாய்விரிக்கக் கற்றுக்கொள்
முன்னணியில் திகழ்வதற்கு
முதலிரவுக் கொத்துக்கொள்....

'இன்டர்வியுவில்' சித்திபெற
'இங்கிலிசும்' உனக்கெதற்கு...?
காசுபணம் இருக்கிறதா...?....
கழுதைக்கும் இடமிருக்கு......

எதிர்த்துப் பேசாதே...
எதிர்காலம் மடிந்துவிடும்
எடுபிடியாய் மாறிக்கொள்
'எம்பி'யாய் மாறிடலாம்......

உண்மையாய் உழைக்காதே...
உன்தலைக்கு வேட்டுவரும்..
பொறுப்பாக நடிதம்பி
பொன்பரிசு வீடுவரும்.......

சமூகம் என்றோடாதே..
சாவுமணி அடிப்பார்கள்...
சுயநலத்தை கையில்கொள்
சுகத்தோடு வாழ்ந்திடுவாய்....


செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

FACEBOOK இல் பலமான Password ஐ உருவாக்குவது எப்படி?


உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்திக் கொள்ளக்கூடியதும், ஏனையோரால் இலகுவில் ஊகிக்க முடியாததுமான Password ஏ பாதுகாப்பான Password என்ற வகைக்குள் அடங்கும். இன்றளவில், இணையத்தோடிணைந்த நிலைகள், மற்றும் வங்கி நடவடிக்கைகள் என்பன Password ஐயே எமது பாதுகாப்பின் திறவுகோலாக நம்பியிருக்கின்றன. ஆக, Password என்பது மிகவும் முக்கியமானதென்பது உண்மைதான்.
அதை எவ்வாறு பாதுகாப்பானதான உருவாக்கி ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்?

எல்லாவற்றுக்கும் ஒரே Password ஐ பாவிக்காதீர்கள்

எல்லாச் சேவைகளுக்கும் ஒரேயொரு Password ஐ நீங்கள் பயன்படுத்துவீர்களானால், உங்கள் Passwordஐ யாரும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் சேவைகள் தொடர்பிலும் உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிடும். ஒரு Password ஐயே எல்லாவற்றுக்கும் பாவித்தால் அதிகளவான பிரச்சினைகளை அது உண்டு பண்ணித்தரும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
ஆக, இதற்கு என்ன இலகுவழி? ஒவ்வொரு சேவைக்கு வெவ்வேறு Password களை உருவாக்கி ஞாபகத்தில் வைத்துக்கொள்ள இதோ ஒரு இலகு வழி.

ஒரேயொரு விதி – நினைவிலிருக்கும் 100 வேறுபட்ட Passwords

ஒரு சிறிய விதியொன்றுக்குள் நீங்கள் பாவிக்கும் Password களை உருவாக்கும் வழைமை உங்களிடமிருந்தால், 100 வகையான Password களை தனித்தனியாக ஞாபகப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. ஒரு தனியான Password ஐ உருவாக்குவதற்கான வழி, முதலில் அடிப்படையான Password ஐத் தெரிவுசெய்து, அதில் நாம் Password ஐ பயன்படுத்தும் இணையச் சேவை நிறுவனத்தின் பெயரைச் சேர்த்துவிடுவதாகும்.
உதாரணமாக, நீங்கள் தெரிவுசெய்த அடிப்படை Password, KLMN என வைத்துக்கொண்டால், Yahoo இணையத்தளத்தில் Password ஐ KLMNYAHOO எனவும், Ebay இணையத்தளத்தில் KLMNEBAY எனவும் பாவிக்க முடியும்.
இதனை இன்னும் ஊகிக்கக் கடினமான Password ஆக மாற்ற, உங்கள் அடிப்படை Password ஆகிய KLMN உடன் உங்களைக் கவர்ந்த இரு இலக்கங்களை தெரிவு செய்து, அதனை மாற்றிவிடலாம். உதாரணத்திற்கு Gmail இணையத்தளத்தில் இந்த Password ஐ KLMN43GMAIL எனப் பாவிக்கலாம்.
இந்த ஒரு விதியைக் கொண்டு நீங்கள் நூற்றுக்கணக்கான Password களை உருவாக்கிக் கொள்ள முடியும். பொதுவாக Password எனப்படும் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக்களைக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு, இவை வெறுமனே ஆங்கில அரிச்சுவடி எழுத்துக்களை மட்டும் கொண்டிராது, இலக்கங்கள், குறியீடுகள் என்பனவற்றையும் கொண்டிருத்தல் Password இன் பலத்தை அதிகரிக்கும். ஆக, அது பற்றியும் கவனத்தில் கொள்ளுங்கள்!

அடிப்படை Password ஐ தெரிவு செய்தல்.

அடிப்படை Password ஐ தெரிவு செய்வதற்கான சில வழிமுறைகளைப் பற்றி நாம் இங்கு ஆராய்வோம்.
  • ஒரு வசனத்தின் அல்லது பாடல் வரியின் முதலெழுத்துக்கள். உதாரணமாக நீங்கள் Titanic திரைப்படத்தின் Theme Song இன் வரியான ‘Every nights in my dreams’ என்பதை பாவிக்க எண்ணினால், உங்கள் அடிப்படை Password ஆனது,  அந்தப் பாடல் வரிகளின் சொற்களின் முதலெழுத்துகளை சேர்த்தால் வரும், ENIMD என்றவாறு அமையும். Password ஐ நினைவிலிருத்த நீங்கள் பாட்டை பாடினாலே போதும்!!
  • இன்னும் அதிகமாகப் பாதுகாப்பான அடிப்படை Password ஐ தெரிவு செய்ய உதாரணமாக ஒரு சொல்லை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கும் சொல்  dog என வைத்துக் கொண்டால், keyboard இல் இந்த எழுத்துக்கள் உள்ள நிலைக்கு மேலே உள்ள எழுத்துக்களை Password ஆக மாற்ற முயலுங்கள். dog என்பதற்கு e9t என்ற சொல் கிடைக்கப் பெறும். இம்முறையால் யாருமே இலகுவில் ஊகிக்க முடியாத Password ஐ உருவாக்கிக்கொள்ள முடியும்.
Password ஐ யாரும் ஊகிக்க முடியாதளவில் வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துவது கட்டாயமாகும். குறைந்தது, இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையாவது, Password ஐ மாற்றிக் கொள்ளுதல் பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கும்.
இன்று Lifekacker இணையத்தளத்தில் பலவீனமான Password பாவிப்பதனால், அதனை எவ்வளவு இலகுவில் அனுமானிக்க முடியுமென்பது தொடர்பில் விரிவான பதிவொன்று பிரசுரமாகியிருந்தது. நவீன செய்நிரல்களின் மூலம் ஒரு சில செக்கன்களில் கூட உங்கள் பலவீனமான கடவுச் சொற்களை அனுமானித்து விட முடியுமென அந்தப் பதிவு எச்சரிக்கிறது.


*நன்றி தாரீக் அஸீஸ்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உம்மாநான் சவூதிக்கு போறேன்...!


இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின்  பேச்சுவழக்கில்  இக்கவிதை அமைந்துள்ளது.


உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கவலைகள் கஷ்டங்கள் கலஞ்சோடிப்போக...!
உம்மென்று இருக்காதே நீயும்-என்ட
கண்ணப்போல் உனையென்றும் புள்ளநான் காப்பேன்!

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட
பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்...!
சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம...?-ஒங்கள
மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!

கலியாண வயசுள்ள என்ன-நீங்க
கரசேக்க படுகிற பாட்ட நான் அறிவேன்...!
என்னகா செய்றநான் உம்மா
பொம்புளயா  பொறந்தது யாரோட குத்தம்..?

அப்பம் வித்து காக்கா படிச்சார்
கடசியில் நமக்கெல்லாம் என்னத்த கிழிச்சார்...?
கொமர நெற வேத்த முந்தி-காக்கா
கொறுக்காட பேத்திய  கலியாணம் முடிச்சார்...

புழிஞ்ச தேங்காப் பூவப்போல
புளிச்சித்தான் போனோம் அவருக்கும் நாங்க
கிழிஞ்ச 'சல்வார' மாத்த-உம்மா
ஒங்கிட்ட காசில்ல யார்ட்ட வாங்க...?

படிச்சாக்கள் இப்பெல்லாம் கூட-இஞ்ச
படிப்புத்தான் உசிரென்றோர் சோத்துக்கு வாட-நான்
பட்டங்கள் படிச்சதும் வீந்தான்-இப்ப
தொழிலின்றி இருந்திட்டா கெடைக்குமோ தீன்தான்...?

அரசாங்க தொழிலையும் காணோம்-நாங்க
அலையால மழையால அழிஞ்சிதான் போனோம்
'எம்பி'மார் பொய்கள கேட்டா-உம்மா
இதவிட மோசமா அழிஞ்சுதான் போவோம்...!

அதுவரும் இதுவரும் என்பார்-உம்மா
ஆனைய குடுத்தாலும் சோத்தோட திம்பார்
ஊட்டுக்கு தேடிநாம் போனா-'சேர';
எடுபிடி அனுப்பி 'பிஸி' எனச்சொல்வார்...

வக்கின்றி வாக்குகள் கேட்டு-ஊட்ட
வருவோர்க்கு உம்மாநீ வாருகள் காட்டு
எருமைங்க கதையல கேட்டு
ஏமாந்து இனிமேலும் போடாதே ஓட்டு....

ஒழைக்காட்டி ஒசந்தவர் யாரு? -நாங்க
ஒழைக்காம தின்டிட்டா மதிக்குமா ஊரு?
ஒழச்சத்தான் கக்கிஷம் போகும்-இத
ஒணராட்டி எப்புடி சோகங்கள் சாகும்..,?

நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க
சவூதிக்கு உம்மாநான் போறேன்-எல்லாம்
சரியாக வந்திடும் சிலநாளில் பாரேன்.

சொளையாக அனுப்புறன் காசி- ஊட்டில்
சொகமாநீ வாழலாம் பூட்டும்மா 'ஏசி'
தொணையாக இருக்கிறேன் உம்மா-நீயும்
கொளராத கக்கிஷம் போய்விடும் சும்மா...

சொர்க்கத்த வாங்கிட்டு வருவேன்-அந்த
மக்கத்து சொகமெல்லாம் ஒனக்குத்தான் தருவேன்
சொத்துக்கள் உம்மாநீ வாங்கு-எங்கட
சொர்க்கத்தில் இனியாச்சும் சொகமாக தூங்கு...!

மனம்வெச்சி என்னநீ அனுப்பு-சவூதி
நானிப்ப போனாத்தான் எரியும்நம் அடுப்பு..!
போஎன்டு செல்லித்தான் பாரு..-சொட்டு
நாளைக்குள் ஓடும்மா தங்கத்தில் ஆறு.....

ஒயித்தாட புள்ளநான் என்று
ஒதுக்கித்தான் பாக்காங்க ஊராக்கள் இன்று
அவியலின் முன்னால நாங்க
ஆரேண்டு காட்டித்தான் வாழனும் ஓங்க...

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கக்கிஷம் எல்லாமே காத்துல போகும்-என்ன
சும்மா நெனைக்காதே நீயும்-நாங்க
சொகுசாக வாழலாம் சொமையெல்லாம் தீயும்...!!

நன்றி
*விடிவெள்ளி(24.02.11)
*விடியலின் ராகங்கள்-2001



கவிதையில் இடம்பெற்றுள்ள கிராமிய வழக்குச் சொற்கள்.

பெரச்சின- பிரச்சினை       
லாத்தையும்- எல்லாவற்றையும்
கரசேக்க- கரை சேர்க்க     
காக்கா- மூத்த சகோதரன்
உம்மா-தாய்            
வாப்பா-தந்தை
பொம்புளயா-பெண்ணாக
என்னகா-என்ன?
என்னத்த?-எதை?
கொமர-கன்னிப்பெண்
நெறவேத்த- நிறைவேற்ற
தீன்-உணவு
ஆனை-யானை
கொறுக்காட-கறுப்பானவர்களை குறிக்கும் பட்டப்பெயர்
வக்கில்லா- தகுதியின்றி
ஊட்ட-வீட்ட
கக்கிஷம்-கஷ்ட்டம்
வாருகள்-வீட்டின் முற்றத்தில் இருக்கும் குப்பைகளை அகற்ற உதவும் பொருள்
சொளையாக-சுளையாக
தொணையாக-துணையாக
கொளராத-அழாதே
எண்டு-என்று
சொட்டு-சிறிது
ஒயித்த- இஸ்லாமியர்களுக்கு விருத்தசேதனம் செய்பவர்
அவியல்- அவர்கள்
ஆரேண்டு-யார் என்று

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

படைப்பாளி அறிமுகம்-02- எழுத்தாளர் நீ.பி. அருளானந்தம்.



லங்கையின் சமகால படைப்பாளிகளுள் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் அவர்கள்.

யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து அவர்களுக்கும் சில்லாலையை சேர்ந்த  லூர்தம்மா அவர்களுக்கும் மகனாக வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் 1947.11.12ம் திகதி பிறந்த இவர் இறம்பைக்குளம் அந்தோனியார் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் வவுனியா மகாவித்தியாலயத்தில் சாதாரண தரம்வரையும் கற்றவர்.

சிறுகதை,நாவல்,மட்டுமல்லாது இலக்கியத்தின் இதயமாக கருதப்படும் கவிதையிலும் தனது ஆற்றல்கள் மூலம் தடம்பதித்து வரும் எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் அவர்களின் படைப்புக்கள் இலங்கையின்   தேசிய பத்திரிகைகள்,கலை-இலக்கிய சஞ்சிகைகளில் களம் கண்டுள்ளன.

01.மாற்றங்கள் மறுப்பதற்கில்லை
02.கபளீகரம்
03.ஆமைக்குணம்
04.கறுப்பு ஞாயிறு (அரசின் சாகி
த்திய விருது பெற்ற நூல்)
05.அகதி
06.ஒரு பெண்ணென்று  எழுது
07.வெளிச்சம்

ஆகிய 7 சிறுகதை நூல்களையும்
01.வாழ்க்கையின் நிறங்கள்
02.துயரம் சுமப்பவர்கள்
ஆகிய 2 நாவல்களையும்,

01.வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து
02.கடந்து போகுதல்

ஆகிய 2 கவிதை நூல்களையும் இதுவரை வெளியிட்டுள்ளார்.

அன்பு பாலம் இதழ் நடத்திய வல்லிக் கண்ணன்  சர்வதேச சிறுகதைப்போட்டியில் 'இரத்தம் கிளர்த்தும் முள்முடி'
சிறுகதைக்காக முதலாமிடம் பெற்று தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் இருந்து விருதினை பெற்றுக்கொண்டவர்.

இவர் தனது  கறுப்பு ஞாயிறு சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை அரசின் இலக்கியத்துகான உயரிய விருதான சாகித்திய மண்டல விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.
இவரது வாழ்க்கையின் நிறங்கள் நாவல் அரச சாகித்திய விருதினையும் வடமாகாண சாகித்திய விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளது.


கின்னஸ் சாதனைகளில் சாதனை புரிந்து உலகத்தில் இரண்டாம் நிலையில் உள்ள இலங்கையை சேர்ந்த  பிரபல கின்னஸ் சாதனையாளர் சுரேஸ்ஜோக்கிம் அவர்கள் இவரது புத்திரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 வடபகுதி மக்களின் வாழ்வியலை பக்கசார்பின்றி படம்பிடித்துக்காட்டும் இவரது படைப்பக்கள் இன்னுமின்னும் இலக்கிய உலகில் அழியாத சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.

















































வியாழன், 3 பிப்ரவரி, 2011

2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருது



இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு  தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்று
 2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருதை பெற்றுக்கொடுத்த பாடல்.


  2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருது

 2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருது

புறப்படு தோழா-வண்ண
பூக்களாய் உலகை மாற்றலாம்
நீ இன்று நினைத்தால்-அந்த
நிலவிலும் கொடியை ஏற்றலாம்

இளைஞனே உன்னைநீ ஆளடா...
இன்னும்நான் சொல்கிறேன் கேளடா...
கவிஞர்கள்  உழைப்பிலே கவிதைகள் அரங்கேறும்-எங்கள்
இளைஞர்கள்  உழைப்பிலே  உலகமே திசைமாறும்....

(புறப்படு தோழா)



உன்னைநீ உனக்குள்ளே தேடடா!- அந்த
விண்ணைநீ காலின்கீழ் போடடா!
உண்மைநீ என்றுமே கூறடா!-இந்த
உலகமே வியக்குமே பாரடா..!

சோதனை தொடர்ந்துவந்தால் சோர்ந்துதான் போவாயா...?
சாதனை நீபடைக்க  சக்தியுடன் எழுவாயா...?
எழுந்துவா இளமுல்லையே-அந்த
வானம்தான்  உன் எல்லையே.....

(புறப்படு தோழா...)

உணர்வுக்குள் நம்பிக்கை நாட்டடா...-நீ
உலகுக்கே யாரென காட்டடா...
நேசத்தை நெஞ்சுக்குள் மாட்டடா-உன்
தேசத்தை அன்பினால் மாற்றடா....

ஏழைகள் என்னும் சொல்லை எரிக்கலாம் வருவாயா..?
என்னுயிர் தோழா உந்தன் கரங்களை தருவாயா...?
தோல்விகள்  உனக்கில்லையே-இனி
வெற்றிதான் உன் பிள்ளையே...!




இசையமைப்பு: டிரோன் பெர்ணாண்டோ
பாடல்வரிகள்: கவிஞர் அஸ்மின் 

பாடியோர்:ஜனனி ஜெயரத்னராஜா& டிரோன்

படைப்பாளி அறிமுகம்-01- கவிஞர் எம். ரிஷான் ஷெரீப்


லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் எம். ரிஷான் ஷெரீப், கேகாலை மாவட்டம், மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்டவர். மாவனல்லை, பதுரியா மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை கற்ற இவர், மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி போன்றவற்றில் தனது உயர்கல்வியை நிறைவு செய்துவிட்டு இத்தாலியிலிருந்து இயங்கும் சகோதர மொழி செய்மதி தொலைக்காட்சியான 'CHANNEL ONE SRI LANKA' இல் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்,தொகுப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

கவிதை, சிறுகதை, ஓவியம், தன்னம்பிக்கைக்கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, புகைப்படத்துறை போன்றவற்றில் தனது ஆற்றலை வெளிப்படுத்திவரும் இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், கலை,இலக்கிய சஞ்சிகைகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் இதழ்களான காலச்சுவடு , விகடன், பூவுலகு, யுகமாயினி,  அம்ருதா, வடக்குவாசல், நவீனவிருட்சம், உன்னதம், மணல்வீடு, உயிர் எழுத்து, வார்த்தை, அகநாழிகை, கலைமகள் ஆகியவற்றிலும் மலேசியாவிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழ்களான அநங்கம், வல்லினம், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழான 'நாம்' ஆகியவற்றிலும் மற்றும் இணைய இதழ்களான திண்ணை, வார்ப்பு, கீற்று, உயிர்மையின் உயிரோசை, மனிதம், தடாகம், அதிகாலை, புகலி, பதிவுகள், நவீன விருட்சம், சொல்வனம், இனியொரு, கூடு, சிக்கிமுக்கி, அதீதம் ஆகியவற்றிலும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அத்தோடு இந்தியா 'வம்சி' பதிப்பகத்தின் 'கிளிஞ்சல்கள் பறக்கின்றன' தொகுப்பில் 2009ம் வருடத்துக்கான சிறந்த கவிதைகள் தொகுப்பில் இவரது கவிதையும்,'மரப்பாச்சியின் சில ஆடைகள்' 2009ம் வருடத்துக்கான சிறந்த சிறுகதைகளுக்கான தொகுப்பில் இவரது சிறுகதையும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட 'முகங்கள்' எனும் இலங்கையின் முக்கிய 50 எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.

இந்த மாதம் பிரபல இந்திய எழுத்தாளர் மதுமிதா தொகுத்து வெளிவந்திருக்கும்  'இரவுகள்' தொகுப்பிலும், பிரபல கவிஞர் குட்டிரேவதி தொகுத்து  வெளிவந்திருக்கும் 'முள்ளிவாய்க்காலுக்குப் பின்' தொகுப்பிலும் இவரது கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடனில் 'உனக்கென மட்டும்' எனும் தலைப்பில் 50 வாரங்கள் ஒரு கவிதை தொடரையும், 'இருப்புக்கு மீள்தல்' எனும் தொடர்கதையையும், கீற்று வார இதழில் 'நேசத்துக்குரிய ஒரே காதலுக்கு'  எனும் தலைப்பில் 30 வாரங்கள் ஒரு கவிதை தொடரையும், 'இயற்கை' எனும் தலைப்பில் பத்திக் கட்டுரையை தொடரொன்றை சிங்கப்பூரிலிருந்து  வெளிவரும் வல்லினம் இதழிலும் எழுதியிருக்கின்றார்.

இவரது   முதலாவது கவிதை தொகுப்பான 'வீழ்தலின்  நிழல்' கடந்த வருடம் இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்தது. அத்தோடு மொழி பெயர்ப்பு நாவலான 'அம்மாவின் ரகசியம்' மற்றும் சிங்கள கவிதைகளின் தொகுப்பு ஆகியன இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகம் மற்றும் லண்டன் 'எக்ஸில்' பதிப்பகம் மூலமாக விரைவில் வெளிவர இருக்கின்றன.

கவிஞர் எம். ரிஷான் ஷெரீப் கவிதைகளின்  ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வெளிநாட்டு இதழ்களிலும் சிங்கள மொழி பெயர்ப்புக்கள் இலங்கையின் சிங்கள தேசிய பத்திரிகைகளிலும் வெளிவருகின்றன.

இலங்கை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் தனது காத்திரமான படைப்புக்கள் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ள கவிஞர் எம். ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள், எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள், எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள், எனது விமர்சனங்கள், சிந்திக்கச் சில படங்கள், மொழி பெயர்ப்புகள் போன்ற தனது வலைப்பூக்களிலும் எழுதிவருகின்றார்.

ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கையின் இலக்கிய வானை அலங்கரிக்கும் இவர் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட பல கலை-இலக்கிய போட்டிகளில் விருதுகளை பெற்றுள்ளார். அதில்,

*2008ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 'கந்தர்வன் சிறுகதைப்போட்டியில்  சிறப்புப் பரிசு.

*2009ம்ஆண்டு சர்வதேச மட்டத்தில் கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் உலக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காம் பரிசு.

*2010ம் ஆண்டு சர்வதேச புகைப்பட போட்டியில் முதல் பரிசு

*2010ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் சிறுகதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.

*2010ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் கவிதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.
போன்றவற்றை குறிப்பிடலாம்.
 

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும் கவிஞர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின்  படைப்புலக பணி மேலும் மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.


                                                  நன்றி.
*தூவானம் (29.01.11)- வசந்தம் தொலைக்காட்சி

K.Jeyanthan (MusicDirector): ஒரு படைப்பாளியின் ஆதங்கம்

K.Jeyanthan (MusicDirector): ஒரு படைப்பாளியின் ஆதங்கம்: "இணையத்தளத்தில் பிரபல்யமான என்னுடைய பாடல்களில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிய எங்கோ பிறந்தவளே பாடல் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளது..."